ஒரு பக்கம் இந்தியாவில் நவீன தொழில்நுட்பங்கள் பரவுகின்றன. இன்னொரு பக்கம், அத்தனை நவீனங்களுக்கும் சம்பந்தமே இல்லா மல் பல பிற்போக்குச் செயல்களும் நடந்தேறுகின்றன. கின்றன. கடைப்பிடிக்கும் சடங்குகளில் பிற் போக்கு என்பதோடு அது முடியவில்லை, மனசாட்சியற்ற கொடுமைகளும் இழைக்கப்படு கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அநீதிகள், வயது வேறுபாடின்றி, நாட்டின் பொதுச் சட்டங்களுக்குக் கட்டுப்படாத கட்டப்பஞ்சாயத்துகளின் கட்டளைப்படி தொடர்கின் றன. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு 13 வயது சிறுமி, அப்படியொரு கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பின்படி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது நாகரிகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலேயாகும்.
அந்த மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில் உள்ள குல்குலியா என்ற கிராமத்தில் திங்களன்று (ஜூலை 7), பழிக்குப் பழியாக இக்கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. முதல்நாள் அந்தச் சிறுமி யின் அண்ணன் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து,அங்கிருந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. மறுநாள், அந்தப் பெண்ணின் கணவன் சமூகப் பஞ்சாயத்துத் தலைவரிடம் புகார் செய்ததோடு, பழி வாங்குவதற்காக அந்த வாலிபனின் தங்கையை வன்புணர்ச்சி செய்ய தன்னை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டானாம். ஊரார் முன்னிலையில் அந்தசமூகத் தலைவர் அதற்கு அனுமதி கொடுத்தா ராம். சிறுமியின் தாயார் கதறியழுததைப் பொருட் படுத்தாமல் சிறுமியை வனப்பகுதிக்குள் கடத்திச்சென்றார்களாம். பல மணி நேரம் கழித்து உறவினர் கள் ரத்தக்கசிவோடு கிடந்த சிறுமியை மீட்டு வீட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.ஏதோ ஒரு மூலையில் எப்போதாவது நடக்கிற ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இதை ஒதுக்குவதற் கில்லை. நாடு முழுவதும் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளின் தொடர்ச்சிதான் இது. நகரங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஓரளவுக்காவது ஊடக வெளிச்சத் தைப் பெறுகின்றன.
குல்குலியா கிராமத்துக் கொடுமை போன்றவை அரிதாகத் தான் வெளியே வருகின்றன.சமூகக் கட்டுப்பாட்டின் பெயரால் எந்த அளவுக்கு மனித நேய உணர்வுகள் மதிப்பிழந்து போகின்றன, மனித உரிமைகள் காலில் போட்டு நசுக்கப்படுகின்றன என்பதற்கு மற் றொரு சாட்சியாகவே குல்குலியா கிராமம் காட்சியளிக்கிறது. தேசிய மகளிர் ஆணையம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டிருக்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியுள்ளது. மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகள் விரைவாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டு உரிய தண்ட னைகள் உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.
அதே வேளையில், இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான பஞ்சாயத்துகள் தமிழகத்திலும் வேறு பல மாநிலங்களிலும் பல்வேறு வடிவங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. சமுதாயத் தின் மனசாட்சியை உலுக்குகிற, மாற்றத்திற்கு வழிவகுக்கிற, பெண்ணின் கவுரவத்தையும் உரிமையையும் வலியுறுத்துகிற மாபெரும் சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தேவையையே இது அழுத்தமாக உணர்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக