திங்கள், 27 ஏப்ரல், 2015

பொய்புகாரை முறியடிப்போம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
அகில இந்திய அளவில் நடைபெற்ற ஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சென்னையில் வேலை நிறுத்தம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை சீர்குலைக்கும் வேலைகளை அமுதவாணன் போன்ற சிலர் முயற்சி செய்தனர். எனினும் நமது தோழர்கள் மிகவும் கவனமாக வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர். ஆனால் அமுதவாணன் காவல் துறையில் நமது தலைவர்கள் Forum கன்வீனர் S.செல்லப்பா Forum தலைவர் R.பட்டாபிராமன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது பொய்புகார் கொடுத்துள்ளார். அதன் விசாரனைக்காக நமது தலைவர்களை காவல் துறை திங்கள் கிழமை (27.04.2015) அன்று அழைத்திருக்கிறது. பல பொய்புகார்களை இதற்கு முன் சந்தித்திருக்கிறோம். இந்த பொய்புகாரையும் எதிர்கொள்வோம். நமது போராட்டங்களை தகர்க்க முயலும் எந்த சக்தியையும் அனுமதியோம். Forum மிகவும் ஒற்றுமையாக இந்த பொய்புகாரை சந்திக்கும். தவிடுபொடியாக்கும்..இயக்க மாண்பை காக்க... CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்போர்.. அனைவரும் அணிதிரண்டு வாரீர் !!! இது குறித்த மாநில Forum வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

மத்திய சங்க சுற்றறிக்கை எண்:5ன் தமிழாக்கம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
 மத்திய சங்க செய்திகள் குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்:35னை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read >>>

தோழர்.R.பாலசுப்ரமணியன் ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
சிதம்பரம் மறைந்த ஒப்பந்த ஊழியர் தோழர்.R.பாலசுப்ரமணியன் அவர்களின் தாயார் பார்வதி அவர்களிடம் கடலூர் துணைப் பொதுமேலாளர் அவர்களின் அறையில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பில் தோழர்கள், தோழியர்கள் நன்கொடையாக அளித்த தொகையும், சிதம்பரம் தோழர் G.பாண்டியன்.T.M அவர்கள் அளித்த தொகையும் சேர்த்து ரூ.3,50,000 /-க்கான வரைவோலையை ( ரூபாய் மூன்றரை லட்சம்) நிர்வாகத்தின் சார்பில் துணைப் பொதுமேலாளர் திருமதி.ஜெயந்தி அபர்ணா அவர்கள் அளித்தார். உடன் உதவிப் பொதுமேலாளர் (நிர்வாகம்) திரு.B.மகேஷ் அவர்கள் உடனிருந்தார். கடலூர் அனைத்து சங்கங்கள் சார்பாக NFTE மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்டசெயலர் தோழர்,K.T.சம்பந்தம், BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை, P.செந்தில்குமரன்-SNEA,K.தனசேகர்-AIBSNLEA, சிதம்பரம் NFTE கிளைச்செயலாளர் தோழர்.V.கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் தோழர்.G.பாண்டியன், G.பரமசிவம்,TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். M.S.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த திரு B.மகேஷ் அவர்களுக்கு அனைத்து சங்கங்களின் சார்பில் நன்றியினை உரித்தாக்குகின்றோம்.சனி, 25 ஏப்ரல், 2015

பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி பி.எப். நிதியை சூறையாடுகிறது மோடி அரசு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சேமிப்புப் பணமான பி.எப். நிதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் கோடி அளவிற்கு உடனடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் துவங்கவிருக்கிறது.பி.எப். நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது என்று சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எனினும்,

மோடி அரசு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தியுள்ளது.2014-15ம் ஆண்டு கணக்கின்படி பி.எப். நிதியத்தில் மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடி அளவிற்கு தொழிலாளர்களின் சேமிப்பு பணம் குவிந்திருக்கிறது. இந்த பெரும் தொகை, பெரு முதலாளிகளின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களும், ஊழியர்களும் வியர்வை சிந்தி சேமித்த இந்தப் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் சூறையாடி பெருமுதலாளிகளின் கைகளில் சேர்ப்பதற்கு மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, 15 சதவீத நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போவதாக அரசு முதலில் அறிவித்தது. ஆனால் எந்தவிதத்திலும் பங்குச் சந்தையில் பி.எப். நிதியை முதலீடு செய்யக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இந்நிலையில், 5 சதவீத நிதியை முதற்கட்டமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அளித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெள்ளியன்று அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.
தற்போது ரூ.80 ஆயிரம் கோடியாக உள்ள ஒட்டுமொத்த பி.எப். நிதியானது, நடப்பு நிதியாண்டின் இறுதியில் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் பங்குச் சந்தையின் முதலீடு செய்யப்படும் தொகையும் அதிகரிக்கும்.முதலீடு செய்யத்தக்க நிதியின் அளவே ஒரு லட்சம் கோடியாகும். ஒட்டுமொத்தத்தில் பி.எப். வாரியத்தின் கையில் உள்ள நிதியின் மதிப்பு ரூ.6.5 லட்சம் கோடி ஆகும்.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் சொத்தினை கபளீகரம் செய்வதற்கு, தனது முதல்படியை துவக்கியிருக்கிறது மோடி அரசு. இதற்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கண்டனக் குரல் வலுத்துள்ளது.

வியாழன், 23 ஏப்ரல், 2015

இரங்கல் செய்தி

நம்முடன்  கள்ளக்குறிச்சி பகுதியில் பணிபுரிந்த தோழர் P.இளையபெருமாள்  TM/KAC அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை (23-04-2௦15) நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                                                                                                                    தோழமையுடன்
                                                                            மாவட்டச் சங்கம்
                                                                            BSNLEU / கடலூர்.
BSNL அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 21,22 இரண்டு நாள் வேலைநிறுத்ததில் நமது மாவட்டத்தில் 95 சதவிகிதம் பேர் தங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளனர். வேலைநிறுத்ததில் கலந்து கொண்ட தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் கூட்டமைப்பு சார்பில்  வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறோம்.

கடலூர் GM அலுவலகத்தின் வாயிலை மறித்து சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இரண்டாம் நாள் வேலைநிறுத்தத்தில்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
கடலூர் GM அலுவலகத்தின் வாயிலை மறித்து 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழர்.ஸ்ரீதர் தலைமையில் கூட்டமைப்பு சங்க தோழர்கள். K.T.சம்பந்தம், A.அண்ணாமலை-BSNLEU, தோழர்கள் பால்கி, C.பாண்டுரங்கன், P.சிவகுமரன்,R.அசோகன்-SNEA, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இரண்டாம் நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.கடலூர் GM அலுவலகத்தின் வாயிலில்ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
BSNL ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தையொட்டி தோழர்.இரா, ஸ்ரீதர் தலைமையில் கூட்டமைப்பு சங்க தோழர்கள். K.T.சம்பந்தம், A.அண்ணாமலை-BSNLEU, தோழர்கள் பால்கி, C.பாண்டுரங்கன், P.சிவகுமரன்,R.அசோகன்-SNEA, கடலூர் GM அலுவலகத்தின் வாயிலில் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க கூடியிருந்தனர். மாவட்டம் முழுவதும் நூறு சதம் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 21,22 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் – கடலூர்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
ஏப்ரல் 21,22 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் இன்று மதியம் (20-04-2015)கடலூர் GMஅலுவலகத்தில் NFTE  மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கடலூர் வெளிப்பகுதி கிளைச்செயலர் தோழர்.E.விநாயகமூர்த்தி விளக்க கோசமிட போராட்ட விளக்க உரையினை NFTE  சம்மேளனச் செயலர் தோழர்.G.ஜெயராமன் ஆற்றினார். மேலும் BSNLEU  மாநில துணைத் தலைவர் தோழர்.A.அண்ணாமலை தோழர்.K.தனசேகரன்-AIBSNLEA, தோழர்.R.அசோகன்-SNEA ஆகியோரும் விளக்க உரையாற்றினர். தோழர்.C.பாண்டுரங்கன்-SNEA நன்றி உரையாற்றினார். மூத்த தோழர் S.தமிழ்மணி அவர்களும், ஒய்வு பெற்ற தோழர்கள் பலரும்,ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.