திங்கள், 27 ஏப்ரல், 2015

தோழர்.R.பாலசுப்ரமணியன் ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
சிதம்பரம் மறைந்த ஒப்பந்த ஊழியர் தோழர்.R.பாலசுப்ரமணியன் அவர்களின் தாயார் பார்வதி அவர்களிடம் கடலூர் துணைப் பொதுமேலாளர் அவர்களின் அறையில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பில் தோழர்கள், தோழியர்கள் நன்கொடையாக அளித்த தொகையும், சிதம்பரம் தோழர் G.பாண்டியன்.T.M அவர்கள் அளித்த தொகையும் சேர்த்து ரூ.3,50,000 /-க்கான வரைவோலையை ( ரூபாய் மூன்றரை லட்சம்) நிர்வாகத்தின் சார்பில் துணைப் பொதுமேலாளர் திருமதி.ஜெயந்தி அபர்ணா அவர்கள் அளித்தார். உடன் உதவிப் பொதுமேலாளர் (நிர்வாகம்) திரு.B.மகேஷ் அவர்கள் உடனிருந்தார். கடலூர் அனைத்து சங்கங்கள் சார்பாக NFTE மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்டசெயலர் தோழர்,K.T.சம்பந்தம், BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை, P.செந்தில்குமரன்-SNEA,K.தனசேகர்-AIBSNLEA, சிதம்பரம் NFTE கிளைச்செயலாளர் தோழர்.V.கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் தோழர்.G.பாண்டியன், G.பரமசிவம்,TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். M.S.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த திரு B.மகேஷ் அவர்களுக்கு அனைத்து சங்கங்களின் சார்பில் நன்றியினை உரித்தாக்குகின்றோம்.கருத்துகள் இல்லை: