செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

இரங்கல் செய்தி


தோழர்களே,

  நம்முடன் திருக்கோவிலூர்  பகுதியில் பணிபுரியும் தோழர். R.தினகரன் TT அவர்களின் தாயார் திருமதி.செங்கமலம் அம்மாள்(93) அவர்கள் நேற்று (12.02.2018) இரவு  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

     இறுதி ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு அரகண்டநல்லூர் அருகில் உள்ள கீழையுரில் நடைபெறும்.

 அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

BSNLEU-ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்சங்கம்
கடலூர் கிளைகள்

தோழர்களே:
           நமது இரு மாநில சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க மாநிலமுழுவதும் பல மாவட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு டிசம்பர் 2018 மாத ஊதியம் வழங்படாததை கண்டித்து வரும் 05.02.2018 அன்று மாலை 5.30 மணிக்கு GM அலுவலகம் முன்பு நமது கிளையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ளவும் 

                          தோழமையுடன்


        K. சிவசங்கர்           K. விஜய்ஆனந்த்             P.ராஜதுரை
      கிளைசெயலர்           கிளைசெயலர்             கிளைசெயலர்
       BSNLEU GM (O)                   BSNLEU Extl                                       TNTCWU