திங்கள், 1 ஏப்ரல், 2019


       BSNL ஊழியர் சங்கம் , தமிழ்நாடு தொலை தொடர்பு      ஒப்ப்பந்த தொழிலாளர் சங்கம் கடலூர் மாவட்டம்         
       காத்திருப்பு போராட்டம்
அன்பார்ந்த தோழர்களே!
தமிழகத்தில் நம்மோடு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக பணி செய்த பிறகும் சம்பளம் மறுக்கப்படுகிறது. நமது கடலூர் மாவட்டத்தில்,பிப்ரவரி மற்றும் மார்ச் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிக்கின்றன. ஊதியம் இல்லையென்றாலும் BSNL இன் நிலையை எண்ணி உழைத்த அந்த ஒப்பந்த தொழிலாளிகளை நிர்வாகம் கவனிக்க மறுக்கிறது. இனியும் பொறுக்க முடியாது. செய்த வேலைக்கு சம்பளம் கேட்டு  BSNL ஊழியர் சங்கம் , தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் தமிழ்மாநிலச் சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க 01 04 2019 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட பொதுமேலாளர் அலுவலகத்தில் அனைவரும் அணி திரள்வோம் ! காத்திருப்போம் ! சம்பளம் பெறுவோம் !
                       தோழமையுடன்
     K.T.சம்பந்தம்                          K.விஜயானந்த்
BSNLEU மாவட்டசெயலர்              மாவட்ட செயலர் TNTCWU