செவ்வாய், 29 ஏப்ரல், 2014

சபாஷ் ராகவா வாழ்த்துக்கள்...

நமது கடலூர் மாவட்டத்தில் 2013-2014ம் நிதி ஆண்டில்
UDAAN பிரிவில் திறம் பட பணி புரிந்து சிறந்த SALES ASSOCIATE
என்றுதமிழ் மாநில முதன்மை போதுமேலாலரால் கையெழுத்திட்ட பாராட்டுசான்றிதழ் பெறும் தோழர் K ராகவன் TM அவர்களை  நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக மனதார பாராட்டுகிறோம்...


 

டெலிகாம் மெக்கானிக் சுழல் மாற்றல்

அன்பார்ந்த தோழர்களே !

நமது மாவட்டத்தில் மூன்றாவது டெலிகாம் மெக்கானிக் சுழல் மாற்றலுக்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012-ல் சுழல் மாற்றலில் வெளியூர் சென்றவர்கள் தங்களின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் விடுபட்டிருந்தால் மாற்றல் விண்ணப்பங்கள்  03-05-2014 க்குள் சமர்ப்பித்திட வேண்டும். மாவட்ட சங்கத்திற்கு நகலையும் அனுப்பிட வேண்டும்.  LONG STAY PARTICULARS வெளியிடப்பட்டுள்ளது. அதை சரிபார்த்து ஏதேனும் மாற்றம் இருந்தால்உடனடியாக கடிதம் கொடுக்க வேண்டும்.சந்தேகம் இருப்பின்  மாவட்ட செயலரை உடனே அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014



வெற்றி!! வெற்றி!!வெற்றி!!!

ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி !

NFTE-BSNL BSNLEU AIBSNLEA SNEA(I) கூட்டணிக்கு கிடைத்த வெற்றி!


       சீர்குலைவு சக்திகளை புறந்தள்ளி, ஊழியர்களின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் தந்து,சொசைட்டியை சுயநல சக்திகளின் கையிலிருந்து மீட்டெடுத்து,புதிய பாதையில் நடத்திட உறுதி பூண்ட கூட்டணி சங்கங்ளை சார்ந்த தோழர்களின் அயராத உழைப்புக்கு ஊழியர்கள் கொடுத்த பரிசுதான் இந்த வெற்றி..இத் தருணத்தில் அனைத்து கூட்டணி சங்களுக்கும் தேனீக்கள் போல் வெற்றிக்கு உழைத்த அனைத்து தோழர்களுக்கும் BSNLEU மாவட்ட சங்கம் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.  வாக்களித்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்..

நமது தோழர்கள் பெற்ற வாக்கு விபரம் 

3.    A.அண்ணாமலை SSS கடலூர்                  552
4.   I.துரைசாமி TM திண்டிவனம்                       466
5.   V.இளங்கோவன் TTA திருக்கோவிலூர்     513
7.   V.கிருஷ்ணமூர்த்தி TM சிதம்பரம்                520
8.. P.குமார்TM கடலூர்                                       463
10. S.நடராஜன் SDE திண்டிவனம்                  491
12. C.பாண்டுரங்கன் SDE கடலூர்                   521
14. P.சங்கரன் TM விழுப்புரம்                            512
15. N.உமாசங்கர் TM விழுப்புரம்                      466



















ஞாயிறு, 20 ஏப்ரல், 2014



19-04-2014 :  மத்திய சங்க அறைகூவலுக்கு ஏற்ப கோவையில் 19-04-2014 அன்று நடைபெற்றது,தமிழ் மாநில சிறப்புக் கருத்தரங்கம்—தோழர் P.அபிமன்யு பொதுச் செயலர், தோழர்.P.சம்பத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர், தோழர்.S.செல்லப்பா மாநிலச் செயலர் பங்கேற்றனர். நமது மாவட்டத்தில் இருந்து ஒரு வேன் வைத்துக் கொண்டு சென்று 18 தோழர்கள் கலந்து கொண்டோம்..


கருத்தரங்கின் புகைப்படங்கள்:



வெள்ளி, 18 ஏப்ரல், 2014



சென்னை சொசைட்டிRGB தேர்தலில் C.K.மதிவாணன் அணி படுதோல்வி

          தமிழகம் முழுவதும் நடைபெற்ற RGB தேர்தலில் C.K.மதிவாணன் அணி படுதோல்வி அடைந்தது.

           கோவையில் 17-04-2014 அன்று நடைபெற்ற தேர்தலில் 15 இடங்களுக்கான தேர்தலில் அனைத்தையும் (15 இடங்களையும்) BSNLEU கைப்பற்றியது. ஈரோட்டில் 8 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 6 இடங்களை BSNLEU கைப்பற்றியது. இதுவரை மொத்தம் 51 இடங்களை BSNLEU வென்றுள்ளது

            C.K.மதிவாணனின் கோயாபல்ஸ் பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கிய தமிழக BSNL ஊழியர்களை நமது BSNLEU கடலூர் மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது..