வியாழன், 26 மே, 2016

மீண்டும் வேதாளம்…….

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
BSNL நிறுவனத்தை லாபமடையச் செய்ய VRS திட்டம் அவசியமாம்- CMD BSNL சொல்கிறார் இதுபற்றிய நமது நிலைபாடுகள் குறித்தும் மேலும் சில செய்திகளை தொகுத்து மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக்செய்யவும்<<<Read>>>

திங்கள், 23 மே, 2016

மத்திய, மாநில சங்க செய்திகள்

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
தற்போதைய மத்திய சங்க  செய்திகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்101ஐக் காண இங்கேகிளிக் செய்யவும்.<<<Read >>>

வெள்ளி, 13 மே, 2016

டபுள் ஹாட்ரிக் வெற்றி !!!

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!


10.05.2016 அன்று நடைபெற்ற ஏழாவது சங்க அங்கீகார தேர்தலில் நமது BSNL ஊழியர் சங்கம் ஆறாவது முறையாக மகத்தான தொடர் வெற்றியினை ஈட்டியுள்ளது. இவ்வெற்றி டபுள் ஹாட்ரிக் வெற்றியாகும். 

இந்த மகத்தான தொடர் வெற்றியினை வாக்குகள் மூலம் நமக்களித்த அனைத்து தோழர், தோழியர்களுக்கும், வெற்றிக்கு அயராது பாடுபட்ட அகிலஇந்திய, மாநில, மாவட்ட, கிளைச்சங்க நிர்வாகிகளுக்கும் நமது மனமார்ந்த இதயம் கனிந்த நன்றி!..நன்றி!!நன்றி!!!

அகில இந்திய அளவில்

அகிலஇந்திய அளவில் உள்ள 35 மாநிலங்களில் 27 மாநிலங்களில் BSNL ஊழியர் சங்கம் முதன்மைச் சங்கமாக வெற்றி பெற்றுள்ளது.7 மாநிலங்களில் NFTE வெற்றி பெற்றுள்ளது.ஒரு இடத்தில்(கார்பரேட் அலுவலகம்) FNTO முதன்மை பெற்றுள்ளது.

BSNLEU சங்கம் பெற்ற வாக்குகள் ...........81195
NFTE சங்கம் பெற்ற வாக்குகள் ................52367
     வாக்கு வித்தியாசம் ...............28828


மாநில அளவில் 


BSNLEU சங்கம் பெற்ற வாக்குகள் ...........4967
NFTE சங்கம் பெற்ற வாக்குகள் ................5584

            வாக்கு வித்தியாசம் ...............617

கடலூர் மாவட்டத்தில் 

மொத்த வாக்குகள்............... 762
பதிவான வாக்குகள்.............759
பதிவாகாத வாக்குகள் ...........3
செல்லாதவை ..........................5

BSNLEU  .................................218
NFTE .......................................482
FNTO .........................................43
இதர சங்கங்கள் பெற்றவை ... 11

செவ்வாய், 10 மே, 2016

நெஞ்சார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
10.05.2016 அன்று நடைபெற்ற 7-வது சங்க அங்கீகார தேர்தலை நமது கடலூர் மாவட்டத்தில் அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்திட ஏற்பாடுகளைச்செய்த நமது மாவட்ட நிர்வாகத்திற்கும்,முழ ஈடுபாட்டுடன் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், கடமை உணர்வுடன் ஆர்வத்தோடு வாக்களித்த அனைத்து தோழர்-தோழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறோம். 
 வாக்குப்பதிவின் விபரம்  
 வாக்குமையத்தின்             பெயர் 
      மொத்த                வாக்குகள் 
 பதிவான வாக்குகள் 
 சதவீதத்தில் 
 கடலூர் 
 224
 223
 99.55 %
 விழுப்புரம் 
 153
152 
99.3% 
 கள்ளக்குறிச்சி
51 
51 
100 %
 விருத்தாச்சலம்
69 
68 
98.6%
 சிதம்பரம்
 96
 96
 100%
 திண்டிவனம்
78 
78 
100 %
 நெய்வேலி
91 
91 
100 %
 மொத்தம்
762 
759 
99.6 %

வெள்ளி, 6 மே, 2016

அன்பார்ந்த தோழர்களே !
வாக்களிக்க செல்லும் முன் கவனிக்க வேண்டியது

நமது அடையாள அட்டையை (BSNL Identity Card) கண்டிப்பாக ஒவ்வொருவரும்எடுத்து வரவேண்டும். அப்பொழுது தான் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.

அடையாள அட்டையில்லாதவர்கள் தங்கள் பகுதி அதிகாரியிடம் அத்தாரிட்டி கடிதத்தில் தங்களது புகைப்படத்தை ஒட்டி கையொப்பம் வாங்கி வரவேண்டும்.
கிளைச்செயலர்கள் கவனத்திற்கு
அனைத்து உறுப்பினர்களையும் அணுகி அடையாள அட்டையை சரிபார்க்கவும்.அடையாள அட்டையில்லாத தோழர்களுக்கு தேவையான அத்தாரிட்டி கடிதம்பெற்றுத்தர உதவவும்.(Letter of Authority) அத்தாரிட்டி கடிதம் நகல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

அதனை நகல் எடுக்க இங்கே கிளிக் செய்யவும்.

திங்கள், 2 மே, 2016


இரங்கல் செய்தி

தோழர்களே , தோழியர்களே ..

கள்ளகுறிச்சி கிளை பொருளர் தோழர்.S.V.விஸ்வநாதன் அவர்கள், மற்றும் TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர்.S.V.பாண்டியன் ஆகியோரின் தந்தை தோழர்.S.வீரமுத்து,  அவர்கள் இன்று காலை (02.05.2016)  இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


அவரைப் பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதி ஊர்வலம் இன்று 02.05.2016 மாலை, கள்ளகுறிச்சி அருகில் உள்ள தடையம்பட்டில் இருந்து  நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஞாயிறு, 1 மே, 2016

மே தின நல் வாழ்த்துக்கள்.

8மணி நேரம் வேலை, 8மணி நேரம் ஒய்வு, 8மணி நேரம் உறக்கம் கேட்டு சிக்காக்கோ வீதியில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகள் நினவைப் போற்றுவோம் 130 வது மேதின புரட்சிகர நல் வாழ்த்துக்கள்.
BSNL ஊழியர் சங்கத்தின் மீது SEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்