செவ்வாய், 17 அக்டோபர், 2017

இரங்கல் செய்தி

தோழர்களே,


  நம்முடன் கடலூர் OT தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரியும் தோழர். T. ராஜா அவர்களின் தகப்பனார் திரு.தியாகராஜன் அவர்கள் நேற்று 16.10.2017 இரவு  காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

      அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மதியம் 2.00 .மணிக்கு கடலூர்  OT தொலைபேசி நிலையம் எதிரே உள்ள அவரது இல்லத்திலிருந்து(1, தேசாய் செட்டி தெரு, கடலூர் OT) புறப்பட்டு பச்சையாங்குப்பம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யபடும்.

 அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

திங்கள், 9 அக்டோபர், 2017

தீபாவளி பண்டிகைக்கு முன், 2016-2017 ஆண்டிற்கான போனஸ் ருபாய் 7000/ (ஏழாயிரம்) வழங்கிட வலியுறித்தி அனைத்து சங்கங்கள் சார்பில் போட்டம்.

BSNLEU         NFTE        SNEA      AIBSNLEA

சட்டத்தில் இருந்தால் போதுமா?
சட்டைப் பைக்கு வர வேண்டாமா?
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் கோரி போராட்டம்
அன்புள்ள தோழர்களே!.. தோழியர்களே!!..
        வணக்கம். பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து திகழும் BSNL  நிறுவனத்தின் பணிகள் நிரந்திர ஊழியர்களால் மட்டும் நடைபெறுவதில்லை. பெரிய மரத்தின் வேர்கள் கண்ணுக்குத் தெரியாதது போல பல நூறு தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாய் கடுமையாகப் பணியாற்றுகின்றனர். தரப்படும் ஊதியமோ குறைவு. சமவேலைக்கு சம சம்பளம் கோர்ட் உத்தரவாக மட்டுமே இருக்கிறது. சட்டப்படி குறைந்தபட்ச போனஸ் தரப்பட வேண்டும் என பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் சொல்கிறது. சட்டப்படி உரிய குறைந்தபட்ச போனஸ் ரூ 7000/-ஐ தீபாவளிக்கு முன் காண்ட்ராக்டர் தர வேண்டுமா இல்லையா? தர மறுக்கும் போது BSNL உயர் அதிகாரிகள் தலையிடக் கோரி இந்தப் போராட்டம்.
        மத்திய தொழிலாளர் நல  ஆணையர் உத்திரவின் படியும், BSNL மாநில நிர்வாகத்தின் உத்திரவின்படியும்  ஒப்பந்த தொழிலாளர்கள் குறைந்தபட்ச போனஸ்ரூ7000/ பெறுவதற்கு BSNLEU, NFTE, SNEA , AIBSNLEA ஆகிய அனைத்து சங்கங்களும் இணைந்து கடலூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட போராட்ட முடிவுகளை எடுத்துள்ளோம்.
v  09-10-2017 மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து சங்கங்களின் சார்பில்  கடிதம் கொடுப்பது
v  11-10-2017 அனைத்து கிளைகளில் ஆர்ப்பாட்டம்
v 13-10-2017 அனைத்து கிளைகளில் தர்ணா
v  16-10-2017 மாவட்ட  அலுவலகம் முன்பு பெருந்திரள் தர்ணா
            தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கோரிக்கை வென்றடைய கடமையாற்றும்படி தோழமையுடன் வேண்டுகிறோம்.
தோழமையுடன்
K.T.சம்பந்தம்        இரா.ஸ்ரீதர்                  K.சிவக்குமார்                S.ஆனந்த்
BSNLEU                                                   NFTE                                       SNEA                           AIBSNLEA
M.பாரதி                   G.ரங்கராஜ்
TNTCWU                              TMTCLU

( மாவட்ட செயலர்கள் ), கடலூர்.

2016-2017 ஆண்டிற்கான போனஸ் ருபாய் 7000/ (ஏழாயிரம்) வழங்கிட வலியுறித்தி அனைத்து சங்கங்கள் சார்பில் போட்டம். நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது.


சனி, 7 அக்டோபர், 2017

இரங்கல் செய்தி

தோழர்களே, 

      நம்முடன் பண்ருட்டி  பகுதியில்   பணிபுரியும் தோழியர் G.ராஜேஸ்வரி OS, அவர்கள் இன்று(07.10.2017) காலை அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

     அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும்தெரிவித்துக்கொள்கிறோம்.


      அம்மையாரது இறுதி ஊர்வலம் நாளை (08.10.2017) காலை 9.00 மணியளவில் பண்ருட்டி, சென்னை மெயின் ரோடு , LN புரம், TRV நகரில் இருந்து நடைபெறும்.

வியாழன், 5 அக்டோபர், 2017

இணைந்த கிளைச்செயலர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!


         நமது இரண்டு சங்கங்களின் (BSNLEU & TNTCWU) இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 07.10.2017 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை, தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
  
தோழமையுள்ள,
 K.T.சம்பந்தம்

மாவட்ட செயலர்

புதன், 4 அக்டோபர், 2017

BSNLEU/TNTCWU

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்.

போனஸ் ரூபாய் . 7௦௦௦/-  தீபாவளிக்கு முன் வழங்கப்படும்

அன்பார்ந்த தோழர்களே:

வணக்கம். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  இந்த ஆண்டு போனஸ் ரூபாய் : 7000 வழங்கப்படும் என நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.

   நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டு போனஸ் ரூபாய் 7000  வழங்க வேண்டுமென நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தது. ஒப்பந்தகாரர் (Balaji Agency) எனக்கு  ஜூலை , ஆகஸ்டு மாத பில் பெண்டிங் உள்ளதாகவும் நிர்வாகம் பட்டுவாடா செய்தால் போனஸ் வழங்குவதாகவும் உறுதியளித்ததின் பெயரில் நமது மாநில, மாவட்ட சங்கள் எடுத்த தொடர்முயற்சியின் காரணமாகவும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாகவும்  ஒப்பந்த காரருக்கு வழங்க வேண்டிய ஜூலை மாத பில்லும்  ஆகஸ்ட் மாதபில்லும் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. அது மட்டுமின்றி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனசாக வழங்க கடலூர் BSNL  நிர்வாகம் ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளர் கணக்கிளும் மாதா மாதம் ரூபாய் : 591  ஒப்பந்தகாரரிடம் செலுத்தி வருகிறது .  

 எனவே இந்த  மாத   ஊதியம் அக்டோபர் முதல் வாரத்திலும் இந்த  ஆண்டுக்கான போனஸ் இரண்டாவது வாரத்திலும் வழங்கப்படும் என்பதை நிர்வாகம் ஒப்பந்தகாரரிடம்  பேசி உறுதி செய்துள்ளது . ஒப்பந்த தாரர் 2017 ஆண்டுக்கான போனஸ் வழங்க மறுப்பதற்கான வாய்ப்பே இல்லை, நம்மிடமிருந்து ஒப்பந்த தாரர் தப்பமுடியாது மாவட்ட நிர்வாகமும் விடாது . தேவைபட்டால் BSNLEU சங்கமும் TNTCWU சங்கமும் வழக்கம் போல் களப்போராட்டதில் இறங்கும். ஒப்பந்த ஊழியர்களின் இம்மாத ஊதியம் மற்றும் போனஸ் பெற்றிட தொடர்முயற்சி எடுத்த நமது மாநில சங்கத்திற்கும் உரிய நேரத்தில் ஊதியம் மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்க  நடவடிக்கை மேற்கொண்ட கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் நமது  நன்றியை உரித்தாக்கி கொள்கிறோம்.

தோழர்களே! ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தினை தொடர்ந்து நடத்துவது நமது  சங்கம் மட்டுமே . இதற்கு சான்று கடந்த ஆண்டு நாம் நடத்திய போனசுக்கான போராட்டம் நினைவில் நிற்கும் என நம்புகிறோம். சென்ற ஆண்டு நாம் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் நமது கடலூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்மாநிலத்திலேயே மிக சிறந்த ஒரு டெண்டர் ஒப்பந்தத்தினை உருவாக்கியுள்ளது.  
       இன்று போனஸ் உறுதிசெய்யபட்டுள்ளது என தெரிந்த பிறகு  முன்பே போராட்டம் என்கிற பெயரில் மாலை நேர தர்ணாவை நடத்தும் மாற்று சங்கம்  கடந்த ஆண்டு என்ன செய்தது. சட்டரீதியாக போனஸ் பெற்று தறுவோம் ALC இடம் வழக்கு தொடுத்துவிட்டோம் என கூறிய மற்றொரு சங்கம் கடந்த ஆண்டு என்ன செய்தது. 
மற்றவர்களை போல் போராட்டம் என்கிற பெயரில் அலுவலகம் முடிந்த பின்பு கூடி சோறுபோட்டு உண்ட பின்  கலைந்து செல்லும்  கூட்டம் அல்ல நாம். போராட்ட களம் கண்டு சம்பளத்தை இழந்து களத்தில் நிற்பவர்கள் நாம் என்பதை அனைத்து தோழர்களும் அறிவர். கோரிக்கை விளம்பரம் செய்து ஓர் இடத்தில் கூடி கலைபவர்களும் அல்ல.  கோரிக்கை வைத்து உறுதியோடு களத்தில் நின்று போராட்டம் நடத்தி வெற்றி பெறுபவர்கள் நாம்.

ஒப்பந்த ஊழியர்களுக்கான உரிமைக்கான போராட்டத்தினை தொடந்து நடத்துவோம் வெற்றி பெறுவோம்.

வாழ்த்துக்களுடன்



தோழமையுடன்
M.பாரதிதாசன்                                                                                               K.T .சம்பந்தம்
மாவட்ட செயலர் TNTCWU                        மாவட்ட செயலர் BSNLEU

தகவல் பலகைக்கு இங்கே கிளிக் செய்யவும்...