திங்கள், 9 அக்டோபர், 2017

தீபாவளி பண்டிகைக்கு முன், 2016-2017 ஆண்டிற்கான போனஸ் ருபாய் 7000/ (ஏழாயிரம்) வழங்கிட வலியுறித்தி அனைத்து சங்கங்கள் சார்பில் போட்டம்.

BSNLEU         NFTE        SNEA      AIBSNLEA

சட்டத்தில் இருந்தால் போதுமா?
சட்டைப் பைக்கு வர வேண்டாமா?
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் கோரி போராட்டம்
அன்புள்ள தோழர்களே!.. தோழியர்களே!!..
        வணக்கம். பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து திகழும் BSNL  நிறுவனத்தின் பணிகள் நிரந்திர ஊழியர்களால் மட்டும் நடைபெறுவதில்லை. பெரிய மரத்தின் வேர்கள் கண்ணுக்குத் தெரியாதது போல பல நூறு தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாய் கடுமையாகப் பணியாற்றுகின்றனர். தரப்படும் ஊதியமோ குறைவு. சமவேலைக்கு சம சம்பளம் கோர்ட் உத்தரவாக மட்டுமே இருக்கிறது. சட்டப்படி குறைந்தபட்ச போனஸ் தரப்பட வேண்டும் என பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் சொல்கிறது. சட்டப்படி உரிய குறைந்தபட்ச போனஸ் ரூ 7000/-ஐ தீபாவளிக்கு முன் காண்ட்ராக்டர் தர வேண்டுமா இல்லையா? தர மறுக்கும் போது BSNL உயர் அதிகாரிகள் தலையிடக் கோரி இந்தப் போராட்டம்.
        மத்திய தொழிலாளர் நல  ஆணையர் உத்திரவின் படியும், BSNL மாநில நிர்வாகத்தின் உத்திரவின்படியும்  ஒப்பந்த தொழிலாளர்கள் குறைந்தபட்ச போனஸ்ரூ7000/ பெறுவதற்கு BSNLEU, NFTE, SNEA , AIBSNLEA ஆகிய அனைத்து சங்கங்களும் இணைந்து கடலூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட போராட்ட முடிவுகளை எடுத்துள்ளோம்.
v  09-10-2017 மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து சங்கங்களின் சார்பில்  கடிதம் கொடுப்பது
v  11-10-2017 அனைத்து கிளைகளில் ஆர்ப்பாட்டம்
v 13-10-2017 அனைத்து கிளைகளில் தர்ணா
v  16-10-2017 மாவட்ட  அலுவலகம் முன்பு பெருந்திரள் தர்ணா
            தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கோரிக்கை வென்றடைய கடமையாற்றும்படி தோழமையுடன் வேண்டுகிறோம்.
தோழமையுடன்
K.T.சம்பந்தம்        இரா.ஸ்ரீதர்                  K.சிவக்குமார்                S.ஆனந்த்
BSNLEU                                                   NFTE                                       SNEA                           AIBSNLEA
M.பாரதி                   G.ரங்கராஜ்
TNTCWU                              TMTCLU

( மாவட்ட செயலர்கள் ), கடலூர்.

கருத்துகள் இல்லை: