புதன், 27 ஜூலை, 2016

ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

27.07.2016 அன்று சென்னையில் நடைபெற இருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கான தர்ணா போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .- இது குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை <<<Read>>>

ஓய்வூதியருக்கு 78.2% IDA இணைப்பு!!!

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
ஓய்வூதியருக்கு 78.2% IDA இணைப்பு!!! ஓய்வூதியம் வழங்க 60% உச்ச வரம்பு நீக்கம்!!! வெற்றி விழா- 27.07.2016 
மாநிலச்சங்கம் 
வெளியிட்டுள்ள சுற்றறிக்கை 
கிளிக் செய்யவும் <<<
Read
>>>

மத்திய செயற்குழு முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

மத்திய செயற்குழு முடிவுகள் குறித்தும், மத்திய சங்கம் நிர்வாகத்துடன் 
விவாதித்த முக்கிய பிரச்சனை குறித்தும்
நமது மாநிலச்சங்கம்
வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 120 ஐக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<
Read
>>

நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!


தகவல் பலகைக்கு கிளிக் செய்யவும் <<<Read>>>

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையை உடனே துவங்குக

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையை உடனே துவங்குக மற்றும் சில மத்திய சங்க  செய்திகள் குறித்து நமது 
மாநிலச்சங்கம்
வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 118 ஐக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<
Read>>>

வெள்ளி, 15 ஜூலை, 2016

மாவட்ட செயலகக் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
நமது மாவட்ட சங்கத்தின் செயலகக் கூட்டம் 15.07.2016 மாலை 5.30 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் A.அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது.மாவட்ட மையத்தில் உள்ள கிளைச்செயலர்களும், மாவட்ட சங்க நிர்வாகிகளும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்

வியாழன், 14 ஜூலை, 2016

மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் CMD BSNL உடன் FORUM தலைவர்கள் சந்திப்பு

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் CMD BSNL உடன் FORUM தலைவர்கள் சந்தித்து, பல முக்கிய பிரச்சனைகளை விவாதித்தனர்.இது குறித்து நமது மாநிலச்சங்கம்  
வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 117 ஐக் காண இங்கேகிளிக் செய்யவும்<<<
Read>>>

BSNL ஊழியர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் Sr.GM ஆக இருந்த B.N, அங்குள்ள BSNL ஊழியர் சங்க தலைவர்களையும்,முன்னணி தோழர்களையும் பழிவாங்கி வந்தார்.அதனை ஜார்கண்ட் மாநில நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்தது.இப்பிரச்சனையை நமது மத்திய சங்கம் கார்ப்பரேட் நிர்வாகத்திடம் கொண்டுசென்றது.உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.எனவே நமது அகிலஇந்திய தலைவர்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டனர்.நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது.இது குறித்தும், மேலும் சில மத்திய சங்க செய்திகளைத் தாங்கி நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>> 

.

புதன், 13 ஜூலை, 2016

இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

 நமது இரண்டு சங்கங்களின் (BSNLEU & TNTCWU) இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 13.07.2016 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை , தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

தோழமையுள்ள,
  K.T.சம்பந்தம்

செவ்வாய், 12 ஜூலை, 2016

கடலூர் FORUM சார்பில் ஆர்ப்பாட்டம்

FORUM OF BSNL UNIONS /ASSOCIATIONS CUDDALORE DISTRICT
கண்டன ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
டிலாட்டீ கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 18 SSA க்களை 1௦ மாவட்டங்களாக பிரித்து நமது கார்ப்ரேட் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நமது மாவட்டம் புதுச்சேரி மாவட்டத்துடன் இணைக்கப்படும். என்று தெரியவருகிறது. புதுவை தனியாகவும்,கடலூர் தனியாகவும் தொடரவேண்டுமென கடலூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனுவினை தலைமைப் பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ளோம்.
அடுத்த கட்டமாக 13.07.2016 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                              தோழமையுள்ள
K.T.சம்பந்தம்  R.ஸ்ரீதர்  R.ஜெயபாலன்  P.சிவக்குமரன்  S.ஆனந்த்

     BSNLEU         NFTE       FNTO            SNEA(I)           AIBSNLEA

புதிய தொலை தொடர்பு அமைச்சராக திரு.மனோஜ் சின்ஹா

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
புதிய தொலை தொடர்பு அமைச்சராக திரு.மனோஜ் சின்ஹா பதவியேற்றுள்ளார்.மேலும் சில மத்திய சங்க  செய்திகள் குறித்தும் 
நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 115 ஐக் காண இங்கே கிளிக் செய்யவும்<<<
Read >>>

சனி, 9 ஜூலை, 2016

JTO இலாகா தேர்வில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

நமது கடலூர் தொலைதொடர்பு மாவட்டத்தில் JTO இலாகா தேர்வில் 21 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர்களுக்கு BSNL ஊழியர் சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

தேர்ச்சி பெற்ற தோழர் , தோழியர்கள் :

1. A.சுரேஷ் BSS
2. K.சண்முகம் BSS
3. N.செந்தில் குமார்BSS
4. A.ரமேஷ் குமார் BSS
5. G.தேவனாதன் BSS
6. A.சக்திவேல் TRANS
7. K.அருண் பிரசாத் TNV
8. மலர்விழி NTS
9. கிருஷ்ணமூர்த்தி NTS
10. குமரகுரு NTS
11. சிவகாமி NTS
12. பிரபா CDL
13. வைதேகி CDL
14. P.அருள் CDM
15. பாலமுருகன் ANR
16. கிருஷ்ணகுமார் CDM
17. திவ்யகுமாரி CDM
18. கமலக்கண்ணன் VDC
19. சுதந்திரதாசன் CDL
20. சுகந்தி CDL
21. L. கணேஷ் 

வியாழன், 7 ஜூலை, 2016

ஓய்வூதியதாரர்க்கு 78.2% பஞ்சப்படி இணைப்பு

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!! 
ஓய்வூதியதாரர்க்கு 78.2% பஞ்சப்படி இணைப்பு மற்றும் இதர செய்திகள்குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 114 ஐக் காண இங்கேகிளிக் செய்யவும்<<<Read>>>

செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் மத்திய பொதுத்துறை தொழிற்சங்கங்களின் கருத்தரங்கம் முடிவு.மேலும் சில மத்திய சங்க செய்திகளைத் தாங்கி நமது மாநிலச்சங்க சுற்றறிக்கை கிளிக் செய்யவும்.<<<Read>>>

சனி, 2 ஜூலை, 2016

TNTCWU
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

கடலூர் மாவட்டம்
           எழுச்சி மிகு விரிவடைந்த செயற்குழு

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!

            வணக்கம். தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 19.06.2016 அன்று கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. செயற்குழுவிற்கு தலைவர் தோழர் V. பாண்டியன் தலைமை தாங்கினார் செங்கொடியை BSNLCCWF அகிலஇந்திய உதவிப்பொதுச்செயலாளர் தோழர்.C.பழனிச்சாமி ஏற்றிவைத்தார் மாவட்ட செயலர் தோழர் M.பாரதிதாசன் வரவேற்புரையாற்றினார் தோழர் J. முரளி மாவட்ட உதவிச்செயலர் அஞ்சலியுரை நிகழ்த்தினார் செயற்குழுவில் BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலாளர். தோழர் . K. T சம்பந்தம் , மாநில அமைப்புச்செயலர் தோழர். A.அண்ணாமலை SNEA சங்கத்தின் மூத்த தோழர். பால்கி TNTCWU சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் V. மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசிய பின் செயற்குழுவை நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலர் தோழர் C. வினோத்குமார் துவக்கிவைத்து பேசினார் அவர் தனது உரையில் ஜுன் மாதத்தில் இதுவரை நடைபெற்ற செயற்குழு கூட்டங்களையும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சுட்டிக்காட்டினார் மற்றும் BSNLEU சங்கம் பெற்ற மகத்தான வெற்றியை நினைவுகூர்ந்து அதற்காக களப்பணியாற்றிய தோழர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார் மேலும் நாம் இதுவரை பெற்ற சலுகைகள் அனைத்தும் போராட்டங்களால் கிடைத்தவை எனவும் இனிவரும் காலங்களில் நமது கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் போராட்டங்களை கட்டுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

செயற்குழு அறிக்கையை மாவட்ட செயலர் தோழர் M.பாரதிதாசன் முன்வைத்த பின் ஐந்து கிளைச்செயலர்களும் (அரக்கண்டநலூர், திண்டிவனம் தவிர) ஆறு மாவட்ட சங்க நிர்வாகிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு பிரச்சனைகளை எடுத்துரைத்தனர் பின்னர் சிறப்புரை நிகழ்த்திய BSNLCCWF அகிலஇந்திய உதவிப்பொதுச்செயலாளர் தோழர்.C.பழனிச்சாமி அவர்கள் அகில இந்திய அளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளையும் அதற்காக அகில இந்திய சங்கம் நடத்திய போராட்டங்களையும் நினைவு கூர்ந்தார் கேரளத்தில் நமது சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் இந்த செயற்குழுவில் நாம் விவாதித்த 18 கோரிக்கைகளும் மாநில நிர்வாகத்திடம் ஏற்கனவே உத்திரவாக பெற்றுத்தரப்பட்டுள்ளது ( விடுமுறை நாட்கள் தவிர) மாவட்ட சங்கம் உடனடியாக  கவனம் செலுத்தி கோரிக்கைகளை வென்றெடுக்க முயற்சி செய்ய வேண்டும் தேவைபட்டால் போராட்டங்களை நடத்த திட்டமிட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.பின்னர் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு கோரிக்கைகளை வென்றடைய போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முடிவுகள்:
1.       ஜுன் மாத இறுதிக்குள் இணைந்த (BSNLEU-TNTCWU) கூட்டங்களை நடத்துவது
2.       ஜூலை முதல் வாரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து கிளைகளிலும் இணைந்த (BSNLEU-TNTCWU) ஆர்ப்பாட்டம் நடத்துவது.
3.       ஜுலை மாதத்தில் இரண்டு சங்கங்களும் (BSNLEU-TNTCWU)  இணைந்து ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை முன்வைத்து கடலூர் G.M அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது.
4.       பிரச்சனைகள் தீர்வில் முன்னேற்றம் இல்லை எனில் மாநில சங்கத்துடன் கலந்தாலோசித்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது.
5.       சங்கத்தின் மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் ID கார்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பது.அதற்காக பொறுப்பாளர்களை நியமிப்பது.
6.       EPF /ESI கணக்கு ஒருங்கிணைக்க பொறுப்பாளர்களை நியமிப்பது.
7.      ஒப்பந்த முறை ஒழிப்பு , குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 18000/- உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கி செப்டம்பர்’ 02.09.2016 ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது.
8. ஜுலை மாத ஊதியத்தில் அனைத்து தோழர்களிடமும் ஆண்டு சந்தாவை வசூல் செய்து மாவட்ட சங்கத்திற்கு அனுப்புவது.
9. அனைத்து கிளைசெயலர்களும் 01.05.2009 முதல் 30.04.2010 வரை பணிசெய்த ஒப்பந்த தொழிலாளர்களின் பட்டியலை தயார் செய்து மாவட்ட சங்கத்திற்கு உடனடியாக் அனுப்ப வேண்டும்

பொறுப்பாளர்கள்:
ID கார்டு :
1. தோழர் .R. ராஜ்குமார் கடலூர் 94437 21420 கன்வீனர்
2. தோழர். ராஜபண்ணிர்செல்வம் மாவட்ட துணைத்தலைவர்
3. தோழர் P.ராஜதுரை மாவட்ட உதவிச்செயலர் 99425 93772
4. தோழர் M. பாரதிதாசன் மாவட்ட செயலர் 94888 13123

ESI  ஒருங்கிணைத்தல் குழ
1.தோழர்  V.மாரிமுத்து மாநில செயற்குழு உறுப்பினர் 94863 06500 கன்வீனர்
2.தோழர் J. முரளி மாவட்ட உதவிச்செயலர்  செயலர் 94888 13123
3. தோழர் M. பாரதிதாசன் மாவட்ட செயலர் 94888 13123

EPF  ஒருங்கிணைத்தல் குழ:
1.தோழர். SV. பாண்டியன் மாவட்ட தலைவர் 94885 11298 கன்வீனர்
2. தோழர். திருநீலம் கிளைச்செயலர் நெய்வேலி 94867 86777
3.தோழர். JK வெங்கடேஷ் கிளைச்செயலர் விழுப்புரம்94886 28819
4.தோழர் M. பாரதிதாசன் மாவட்ட செயலர் 94888 13123

தோழர்களே முடிவுகள் அனைத்தும் நாம் கூடி விவாதித்து எடுக்கப்பட்டவை. எனவே நாம் தான் இதை நடைமுறைபடுத்த வேண்டும்ஒப்பந்த தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றம் காண தொடர்ந்து இயக்கம் காண்பது BSNLEU தலைமையிலான நமது இயக்கம் மட்டுமே தொடர்ந்து போராடுவோம் முன்னேருவோம்.

நமது  உரிமைகளை காத்திட அரசாங்கம் மற்றும் நிர்வாகம் பிறப்பித்த உத்திரவுகளை அமுலாக்கிட போராட்ட வாளினை கையில் எடுப்போம் வெகுண்டெழுவோம் அநீதிக்கெதிராக அணிதிரள்வோம் ! ஆர்ப்பரிப்போம் !
                                                தோழமையுடன்
                                                                                                 M.பாரதிதாசன்
                                          மாவட்ட செயலர் TNTCWU

வெள்ளி, 1 ஜூலை, 2016

மத்திய சங்க செய்திகள்.

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிப்பு மற்றும் சில செய்திகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 1112 ஐக் காண இங்கேகிளிக் செய்யவும்<<<Read>>>

8ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான லோகோ

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!8ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான லோகோ வரவேற்கப்படுகிறது
தோழர்களே, நமது  BSNL ஊழியர் சங்கத்தின் 8ஆவது அகில இந்திய மாநாடு 31, டிசம்பர் 2016 முதல் 3,ஜனவரி 2017 முதல் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரியும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டிற்கான லோகோ ஒன்றை உருவாக்க வேண்டி உள்ளது. இதனை உருவாக்கி தர விருப்பம் உள்ள தோழர்கள் ஜூலை 8ஆம் தேதிக்குள் மாநில சங்க அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அஞ்சலிலோ, தமிழ் மாநில சங்கத்தின் மின்னஞ்சல் முகவரியான bsnleutnc@gmail.com என்ற முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு தமிழ் மாநில சங்கம் தோழமையுடன் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் லோகோக்களில் ஒன்றை தமிழ் மாநில சங்கத்தின் மையம், மத்திய சங்கத்தின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுக்கும். நமது அகில இந்திய மாநாட்டிற்காக, கலை நயம் மிக்க நமது தோழர்களின் ஆலோசனையை நமது தோழர்கள் வழங்கலாம்.

சென்னை சொசைட்டியின் முறைகேடுகளை கண்டித்து எழுச்சிமிகு தர்ணா

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
28.06.2016 அன்று சென்னையில் சொசைட்டி சீர்கேடுகளை கண்டித்து தர்ணா போராட்டம் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது.இது குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கேகிளிக் செய்யவும்<<<Read >>>

FORUM கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!

FORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செய்திகளைத் தாங்கி நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 110-ஐக் காண இங்கேகிளிக் செய்யவும் <<<Read>>>