சனி, 2 ஜூலை, 2016

TNTCWU
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

கடலூர் மாவட்டம்
           எழுச்சி மிகு விரிவடைந்த செயற்குழு

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!

            வணக்கம். தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 19.06.2016 அன்று கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. செயற்குழுவிற்கு தலைவர் தோழர் V. பாண்டியன் தலைமை தாங்கினார் செங்கொடியை BSNLCCWF அகிலஇந்திய உதவிப்பொதுச்செயலாளர் தோழர்.C.பழனிச்சாமி ஏற்றிவைத்தார் மாவட்ட செயலர் தோழர் M.பாரதிதாசன் வரவேற்புரையாற்றினார் தோழர் J. முரளி மாவட்ட உதவிச்செயலர் அஞ்சலியுரை நிகழ்த்தினார் செயற்குழுவில் BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலாளர். தோழர் . K. T சம்பந்தம் , மாநில அமைப்புச்செயலர் தோழர். A.அண்ணாமலை SNEA சங்கத்தின் மூத்த தோழர். பால்கி TNTCWU சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் V. மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசிய பின் செயற்குழுவை நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலர் தோழர் C. வினோத்குமார் துவக்கிவைத்து பேசினார் அவர் தனது உரையில் ஜுன் மாதத்தில் இதுவரை நடைபெற்ற செயற்குழு கூட்டங்களையும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சுட்டிக்காட்டினார் மற்றும் BSNLEU சங்கம் பெற்ற மகத்தான வெற்றியை நினைவுகூர்ந்து அதற்காக களப்பணியாற்றிய தோழர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார் மேலும் நாம் இதுவரை பெற்ற சலுகைகள் அனைத்தும் போராட்டங்களால் கிடைத்தவை எனவும் இனிவரும் காலங்களில் நமது கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் போராட்டங்களை கட்டுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

செயற்குழு அறிக்கையை மாவட்ட செயலர் தோழர் M.பாரதிதாசன் முன்வைத்த பின் ஐந்து கிளைச்செயலர்களும் (அரக்கண்டநலூர், திண்டிவனம் தவிர) ஆறு மாவட்ட சங்க நிர்வாகிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு பிரச்சனைகளை எடுத்துரைத்தனர் பின்னர் சிறப்புரை நிகழ்த்திய BSNLCCWF அகிலஇந்திய உதவிப்பொதுச்செயலாளர் தோழர்.C.பழனிச்சாமி அவர்கள் அகில இந்திய அளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளையும் அதற்காக அகில இந்திய சங்கம் நடத்திய போராட்டங்களையும் நினைவு கூர்ந்தார் கேரளத்தில் நமது சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் இந்த செயற்குழுவில் நாம் விவாதித்த 18 கோரிக்கைகளும் மாநில நிர்வாகத்திடம் ஏற்கனவே உத்திரவாக பெற்றுத்தரப்பட்டுள்ளது ( விடுமுறை நாட்கள் தவிர) மாவட்ட சங்கம் உடனடியாக  கவனம் செலுத்தி கோரிக்கைகளை வென்றெடுக்க முயற்சி செய்ய வேண்டும் தேவைபட்டால் போராட்டங்களை நடத்த திட்டமிட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.பின்னர் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு கோரிக்கைகளை வென்றடைய போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முடிவுகள்:
1.       ஜுன் மாத இறுதிக்குள் இணைந்த (BSNLEU-TNTCWU) கூட்டங்களை நடத்துவது
2.       ஜூலை முதல் வாரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து கிளைகளிலும் இணைந்த (BSNLEU-TNTCWU) ஆர்ப்பாட்டம் நடத்துவது.
3.       ஜுலை மாதத்தில் இரண்டு சங்கங்களும் (BSNLEU-TNTCWU)  இணைந்து ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை முன்வைத்து கடலூர் G.M அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது.
4.       பிரச்சனைகள் தீர்வில் முன்னேற்றம் இல்லை எனில் மாநில சங்கத்துடன் கலந்தாலோசித்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது.
5.       சங்கத்தின் மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் ID கார்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பது.அதற்காக பொறுப்பாளர்களை நியமிப்பது.
6.       EPF /ESI கணக்கு ஒருங்கிணைக்க பொறுப்பாளர்களை நியமிப்பது.
7.      ஒப்பந்த முறை ஒழிப்பு , குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 18000/- உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கி செப்டம்பர்’ 02.09.2016 ல் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது.
8. ஜுலை மாத ஊதியத்தில் அனைத்து தோழர்களிடமும் ஆண்டு சந்தாவை வசூல் செய்து மாவட்ட சங்கத்திற்கு அனுப்புவது.
9. அனைத்து கிளைசெயலர்களும் 01.05.2009 முதல் 30.04.2010 வரை பணிசெய்த ஒப்பந்த தொழிலாளர்களின் பட்டியலை தயார் செய்து மாவட்ட சங்கத்திற்கு உடனடியாக் அனுப்ப வேண்டும்

பொறுப்பாளர்கள்:
ID கார்டு :
1. தோழர் .R. ராஜ்குமார் கடலூர் 94437 21420 கன்வீனர்
2. தோழர். ராஜபண்ணிர்செல்வம் மாவட்ட துணைத்தலைவர்
3. தோழர் P.ராஜதுரை மாவட்ட உதவிச்செயலர் 99425 93772
4. தோழர் M. பாரதிதாசன் மாவட்ட செயலர் 94888 13123

ESI  ஒருங்கிணைத்தல் குழ
1.தோழர்  V.மாரிமுத்து மாநில செயற்குழு உறுப்பினர் 94863 06500 கன்வீனர்
2.தோழர் J. முரளி மாவட்ட உதவிச்செயலர்  செயலர் 94888 13123
3. தோழர் M. பாரதிதாசன் மாவட்ட செயலர் 94888 13123

EPF  ஒருங்கிணைத்தல் குழ:
1.தோழர். SV. பாண்டியன் மாவட்ட தலைவர் 94885 11298 கன்வீனர்
2. தோழர். திருநீலம் கிளைச்செயலர் நெய்வேலி 94867 86777
3.தோழர். JK வெங்கடேஷ் கிளைச்செயலர் விழுப்புரம்94886 28819
4.தோழர் M. பாரதிதாசன் மாவட்ட செயலர் 94888 13123

தோழர்களே முடிவுகள் அனைத்தும் நாம் கூடி விவாதித்து எடுக்கப்பட்டவை. எனவே நாம் தான் இதை நடைமுறைபடுத்த வேண்டும்ஒப்பந்த தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றம் காண தொடர்ந்து இயக்கம் காண்பது BSNLEU தலைமையிலான நமது இயக்கம் மட்டுமே தொடர்ந்து போராடுவோம் முன்னேருவோம்.

நமது  உரிமைகளை காத்திட அரசாங்கம் மற்றும் நிர்வாகம் பிறப்பித்த உத்திரவுகளை அமுலாக்கிட போராட்ட வாளினை கையில் எடுப்போம் வெகுண்டெழுவோம் அநீதிக்கெதிராக அணிதிரள்வோம் ! ஆர்ப்பரிப்போம் !
                                                தோழமையுடன்
                                                                                                 M.பாரதிதாசன்
                                          மாவட்ட செயலர் TNTCWU

கருத்துகள் இல்லை: