சனி, 29 நவம்பர், 2014
வெள்ளி, 28 நவம்பர், 2014
நவம்பர் 27 வேலைநிறுத்தம் வெற்றிபெற கடலூர் மாவட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும் நெஞ்சுநிறை நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்
அன்பார்ந்த தோழர்களே !
நமது கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 27 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட JAC சார்பில் தலமட்டங்களுக்கு சென்று விரிவான பிரச்சாரம் மேற்ற்கொண்டோம். இணைந்த சிறப்புக்கூட்டங்கள் பத்து இடங்களில் எழுசிச்கரமாக நடைபெற்றது.மாநிலச்சங்கங்களின் சார்பில் தோழர்கள் P. இந்திரா, S. ஜான்போர்ஜியா, V. லோகநாதன், N. அன்பழகன் மற்றும் A. அண்ணாமலை ஆகியோர் மிகச்சிறப்பான பங்களிப்பினை வழங்கினர்.அனைத்து கூட்டங்களிலும் தோழர்,தோழியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.அனைத்து சங்க தலைவர்களும் இவ்வேலை நிறுத்தம் வெற்றிபெற தொய்வின்றி உழைத்தனர்.இதன் பலனாக கடலூர் மாவட்டத்தில் போராட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்று வெற்றிபெறச்செய்த அனைத்து தோழர்,தோழியர்களுக்கும்,தொடர்ச்சியாக கடும்பணியாற்றிய JAC யில் அங்கம் வகிக்கும் அனைத்து கிளைச்சங்க, மாவட்டசங்க மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கும் நமது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்கள் 814, அதில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோர் 573, உடல்நிலை[?] பாதிக்கப்பட்டோர் 79,அரசாங்கத்திற்கு ஆதரவாக நிர்வாகத்தின் பக்கம் நின்று வேலைக்கு சென்று பணியாற்றியவர்கள் 162 [இதில் புரட்சியாளர்களும் (போலி) உண்டு]. ஆனாலும் நமது மாவட்டத்தில் வேலைநிறுத்தம் 70.39% நடைபெற்றிறுப்பது பெருமைக்குரியதே.
தோழமையுள்ள
K.T.சம்பந்தம்
தோழமையுள்ள
K.T.சம்பந்தம்
புதன், 26 நவம்பர், 2014
ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்ப்பார்கள்
SAVE BSNL SAVE INDIA
தமிழ்நாடு
தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்
(REGD NO: VDR-278) 24-11-2014
வேலை
நிறுத்தப் போராட்டம் 27-11-2014
அன்பார்ந்த தோழர்களே
!!
வணக்கம்...புவனேஸ்வர்
அகில இந்திய செயற்குழு முடிவுக்கேற்ப 11 அம்சக் கோரிக்கைகளுக்காக
BSNL Casual Contract Workers Federation சார்பில்
மாவட்டங்கள் அளவில் ஆர்ப்பாட்டம், தர்ணா,
மாநில அலுவலகம் முன்பு
தர்ணா, BSNL தலைமையகம்
முன்பு தர்ணா, பேரணி ஆகிய இயக்கங்கள் வெற்றிகரமாக
நடைபெற்று முடிந்துள்ளன. அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் என்ற முடிவு செய்திருந்தோம். 27-11-2014 அன்று வேலை நிறுத்தப்
போராட்டம் என்று தீர்மானித்து அதற்கான அறிவிப்பு முறையாக BSNL
நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டு விட்டது. அதே 27-11-2014 தேதியில் வேலை நிறுத்தப் போராட்டம் என்று BSNL-ல் உள்ள அனைத்து
ஊழியர் சங்கங்களும் JAC(Joint
Action Committee) ஏற்கனவே அறிவிப்பு கொடுத்துள்ளன.
நாமும் வேலை நிறுத்த அறிவிப்பை கொடுத்ததையொட்டி நிரந்தர ஊழியர்களும்
ஒப்பந்த ஊழியர்களும் இணைந்து மாபெரும் வெற்றிகரமான போராட்டம் நடக்கவிருக்கின்றது. இந்த
வேலை நிறுத்த
போராட்டத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டு
நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்திடுவோம்.. கோரிக்கைகள்:
1.
விடுபட்ட தற்காலிக மற்றும் ஒப்பந்தத்
தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும்.
2.
தற்காலிக அந்தஸ்து பெற்ற தொழிலாளர்களுக்கு DOT–க்குப் பதிலாக BSNL–இல் உள்ள குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும்.
3.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு
நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படவேண்டும்.
Semi Skilled, Skilled, Highly skilled போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு, அதற்கேற்றாற் போல் சமபளம் நிர்ணயம் செய்யப்பட்டு
வழங்கப்படவேண்டும். A, B,
C நகர தர வரிசைக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட
வேண்டும். வங்கிக்கணக்கு / காசோலை மூலமாக உரிய காலத்தில் சம்பள பட்டுவாடா செய்யப்படவேண்டும்.
ஒப்பந்தக்காரர்
மாறினாலும் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான பணி உறுதி
செய்யப்படவேண்டும்.
4.
சமூக நலத் திட்டங்களான பணிக்கொடை, போனஸ், EPF, ESI வழங்கப் பட வேண்டும்
5.
தற்காலிக/ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிறுவன குடியிருப்பு, வீட்டு வாடகைப் படி வழங்கப் பட வேண்டும்.
6.
EPF கணக்கை ஒப்பந்ததாரருக்குப் பதிலாக முதன்மை பணி வழங்குபவர்
துவக்க வேண்டும்
7.
அடையாள அட்டையை நிறுவனம் வழங்க வேண்டும்.
8.
BSNL வளர்ச்சிக்கும், விரிவாக்கத்துக்கும் தேவையான கருவிகளை வாங்கி BSNL சேவையை மேம்படுத்த. வேண்டும்
9.
சம வேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும்.
10. பழி வாங்கலை ரத்து செய்ய வேண்டும். வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை திரும்ப வேலைக்கு எடுக்க வேண்டும்
11. BSNL Casual and Contract Workers Federation தொழிற்சங்கத்தை
அங்கீகரிக்க வேண்டும்.
தோழமையுள்ள,
M.பாரதிதாசன்
மாவட்டச் செயலர்.
நவம்பர் 11 வேலைi நிறுத்த விளக்கக்கூட்டங்கள்
நவம்பர்’27 வேலைநிறுத்த
விளக்க சிறப்புக்கூட்டங்கள்
விருத்தாசலம் கிளையில் 17-11-2014 அன்று காலை வேலைநிறுத்த போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. தோழர்கள்.V.இளங்கோவன்,கலைமணி
தலைமையில் NFTE தோழர்கள்.
R.செல்வம், இரா.ஸ்ரீதர், BSNLEU தோழர்கள்
K.T. சம்பந்தம், A. அண்ணாமலை போராட்ட
விளக்கவுரையாற்றினர். விழா ஏற்பாடுகளை
சிறப்பாக செய்திருந்த தோழர்களுக்கு நன்றி.
உளுந்தூர்பேட்டையில் 17-11-2014
அன்று மதிய உணவு இடைவெளியில் தோழர் .அம்பாயிரம் தலைமையில் கூட்டம்
நடைபெற்றது. NFTE சார்பில் தோழர்கள்.R.செல்வம்
இரா.ஸ்ரீதர், BSNLEU சார்பில் தோழர்கள் K.T. சம்பந்தம், A. அண்ணாமலை போராட்ட விளக்கவுரையாற்றினர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த உளுந்தூர்பேட்டை
தோழர்களுக்கு நன்றி.
20.11.2014 அன்று மதியம் நெய்வேலியில் போராட்டவிளக்க சிறப்புக் கூட்டம்
நடைபெற்றது. சிறப்புரையாக
தோழியர்.P.இந்திரா
மாநில துணைத்தலைவர் BSNLEU, தோழர். V.லோகநாதன்.மாநில
துணைத்தலைவர்-NFTE. விளக்கவுரையாற்றினர்.
20-11-2014 மாலை கடலூரில் GM அலுவலக
வளாகத்தில் நடைபெற்றது, BSNLEU –B. சந்திரசேகர்
தலைமையேற்றார், BSNLEU மாவட்டத் தலைவர் A.அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தினார், தோழர்கள்.G.ரங்கராஜ்-TMTCLU, M.பாரதி-TNTCWU, NFTE
இரா.ஸ்ரீதர்,BSNLEU K.T.சம்பந்தம் விளக்கவுரையாற்றினர்.
BSNLEU மாநிலத்துணைத்தலைவர் தோழியர்.இந்திரா, NFTE மாநிலத்துணைத்தலைவர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். NFTE மாவட்ட பொருளாளர் A.சாதிக்பாஷா நன்றிவுரையற்றினார். பெருந்திரளாக தோழர்கள், தோழியர்கள்
கலந்துகொண்டது கூட்டத்தின் சிறப்பம்சமாகும். விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடுகளை
செய்த கிளைத் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
வியாழன், 20 நவம்பர், 2014
நவம்பர் 27-2014 வேலைநிறுத்த விளக்க சிறப்புக்கூட்டம்.சிதம்பரம்.
27-11-2014 அன்று காலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்திற்கு தோழர்H.இஸ்மாயில் மரிகார் NFTE, தோழர்N.அனந்தன் BSNLEU, தோழர் K.ராமையாFNTO, தோழர் M.தேவராஜன் NFTE-KTL.ஆகியோர் கூட்டு தலைமையேற்க,
தோழர் V.சிதம்பரநாதன் கிளைசெயலர்BSNLEU வரவேற்க,
துவக்கவுரை தோழர் K.ராமையா FNTO ஆற்றினார்.
தோழர்.K.T.சம்மந்தம்.மாவட்டசெயலர்-BSNLEU, தோழர்.இரா.ஸ்ரீதர்.மாவட்டசெயலர்-NFTE.
போராட்ட விளக்கவுரையாற்றினார்கள்.
சிறப்புரை: தோழியர்.P.இந்திரா. மாநில துணை செயலர்-BSNLEU,
தோழர். V.லோகநாதன்.மாநில துணைத்தலைவர்-NFTE.
நன்றியுரை: தோழர் D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவிசெயலர்.NFTE.. கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
சனி, 15 நவம்பர், 2014
இரங்கல் செய்தி
NFTE சங்கத்தின் தமிழ்
மாநில செயலர் தோழர் பட்டாபியின் தாயார்மங்களம் அம்மாள் 14.11.2014 அன்று காலமானார் . தாயாரை இழந்து
வாடும் தோழர் பட்டாபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட
பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.நல்லடக்கம் இன்று காலை 8.30 மணிக்கு காரைக்காலில் நடைபெறும்.
வெள்ளி, 14 நவம்பர், 2014
கடலூர் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
BSNLEU & NFTE
கிளை சங்கங்கள் ,
கடலூர்
கண்டன ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே ,
கடலூர் மாவட்டத்தில் புதியதாக அமுல்படுத்த உள்ள EOI டெண்டர் சம்மந்தாக அனைத்து கோட்ட பொறியாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் விவாதித்து முடிவுகள் எடுக்கின்ற சூழலில் , கடலூர் கோட்ட பொறியாளர் தானடித்த மூப்பாக செயல்படுவதும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை உதானசீனப் படுத்துவதையும் கண்டித்து 15-11-2014 அன்று மாலை 5:30 மணியளவில் மெயின் தொலைபேசி வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்யுமாறு
வேண்டுகின்றோம்.
கண்டன உரை
K.T.சம்பந்தம் மாவட்டச் செயலர்
BSNLEU
இரா.ஸ்ரீதர் மாவட்டச் செயலர் NFTE
தோழமையுள்ள
BSNLEU & NFTE
கிளை சங்கங்கள் ,கடலூர்.
வியாழன், 13 நவம்பர், 2014
பாஜகவின் இரட்டை நாக்கு அரசியல்
இறுதியாக, தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல்கள்
அடுத்த ஆண்டின் துவக்கத் தில் நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுவிட்டன.
நவம்பர் 4 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின்
சிறப்புக் கூட்டம் தில்லி சட்டமன்றத்தைக் கலைத்திடக் கோரி தில்லிதுணைநிலை
ஆளுநர் அளித்த பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டதை அடுத்துநாட்டின்
தலைநகரில் மீண்டும் புதிதாக தேர்தல் நடத்துவதற்கான நடைமுறை தொடங்கிவிட்டது.
இதன்மூலம், நவம்பர்25 அன்று காலியாக இருந்த மூன்று இடங்களுக்காக
நடைபெறவிருந்த இடைத் தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. (இந்த மூன்று
தொகுதிகளிலும் தேர்வு பெற்ற பாஜக உறுப்பினர்கள் மக்களவைக்குத்
தேர்ந்தெடுக்கப் பட்டதால் இந்த இடங்கள் காலியாயின.) தில்லி சட்டமன்றத்தில்
காங்கிரஸ் கட்சிஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த
ஆம் ஆத்மி கட்சி யின் அரசாங்கம், ராஜினாமா செய்துவிட்டதால், அது 2014
பிப்ரவரியிலிருந்து செயல்படா நிலையிலிருந்தது.
சட்டமன்றம் கலைக்கப்
பட்டதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் மீண்டும் புதிதாகத் தேர்தல்கள்
நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தேர்தல்கள் நடந்து, புதிய ஆட்சி
அமையும்வரை, மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் தற்போதைய குடியரசுத் தலைவர்
ஆட்சி தொடரும் என்பது உறுதி. தில்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மை யைப்
பெறுவதற்காக பாஜக மேற்கொண்ட அனைத்துத் தில்லுமுல்லு வேலைகளும்
தோல்வியடைந்ததை அடுத்தே, இத்தகைய முடிவிற்கு அக்கட்சி வந்துள்ளது. பாஜக,
தில்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக, எல்லாவிதமான
குதிரைபேரங் களிலும் ஈடுபட்டதாக, ஏஏபி கட்சியும் முன் னாள் தில்லி
முதல்வரான அதன் தலைவரும் குற்றம்சாட்டி இருந்தார்கள்.
மகாராஷ்ட்ராவில்
தேர்தல் வெற்றி மற்றும் ஹரியானாவில் தனிப்பெரும் கட்சி அந்தஸ்தைப்
பெற்றதைத் தொடர்ந்து, பாஜக பெரும்பான்மையைப் பெற்றிடுவதற்காக இத்தகைய
தில்லுமுல்லு வேலைகள் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதுபோல்
தோன்றுகிறது. இப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் களில், வெற்றிகளைப்
பெற்றிருந்தபோதிலும், 2014 பொதுத் தேர்தல்களுக்குப்பின் நடைபெற்ற பல்வேறு
சட்டமன்றங்களில் நடைபெற்ற பல்வேறு இடைத் தேர்தல்களிலும் பாஜக
வெற்றிபெறவில்லை. உத்தரப்பிரதேசம், குஜ ராத், ராஜஸ்தான் மாநிலங்களில்
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கு முன்பு, நாட்டின் பல மாநிலங்களில்
50 சட்டமன்ற இடங்களுக்காக இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன.
இவற்றில்
2014 பொதுத் தேர்தல்களுக்கு முன் 35 இடங்களில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில்
முன்னணியில் இருந்தது. ஆயினும் பாஜக தலைமையிலான தேஜகூட்டணி இவற்றில் 18
இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இம் மாநிலங்களில் இதற்கு முன் நடைபெற்ற
சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிட்டால்கூட, கூர்மையான அளவிற்கு வீழ்ச்சியே
ஏற்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில்
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 71 இடங்களை பாஜககைப்பற்றி
இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது மத்தியில் ஆட்சிஅமைத்து சுமார்100
நாட்கள் முடிந்துள்ள நிலையில் மீண்டும் இம்மாநிலத்தில் நடைபெற்ற இடைத்
தேர்தல்களில் சட்டமன்றத்தில் அது பெற்றி ருந்த 8 இடங்களை இழந்து விட்டது.
குஜராத்திலும் பாஜக 3 இடங்களை இழந்துள்ளது.
அதேபோன்றே ராஜஸ்தானிலும்
3 இடங்களை இழந்துவிட்டது. இப்போது ஒன்பது மாநிலங் களில் 32 சட்டப்பேரவை
இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெறும் 12 இடங் களை மட்டுமே
வென்றிருக்கிறது. சமீபத்தில் மகாராஷ்ட்ராவிலும், ஹரியானா விலும் நடைபெற்ற
தேர்தல் வெற்றிகளில்கூட, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தங்களுடைய மிகவும்
அரக்கத்தனமான நிகழ்ச்சி நிரலாக விளங்கும் `இரட்டை நாக்கு’ அரசிய லைப்
பிரயோகிப்பதில் தவறவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. ஒரு
பக்கத்தில் `வளர்ச்சி’ என்றும், `குஜராத் மாடல்’ என்றும், `நல்ல நாள்
வருகுது’ என்றும் சொல்லிக்கொண்டே, மறுபக்கத்தில் தேர்தல் ஆதாயங்களை அறுவடை
செய்வதற்காக மதவெறித் தீயை விசிறி, வன்முறைகளில் ஈடுபடும் தங்கள் உண்மையான
உத்தியைக் கடைப்பிடித்ததையும் பார்த்தோம்.
தில்லியில்
நடைபெறவிருக்கும் தேர்தலின்போதும் இதேபோன்று தேர்தல் உத்திகளைப் பின்பற்றிட
முடிவு செய்திருப்பதை, இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்த
பின்னர் அதன் மூத்த தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களிலிருந்து நன்கு
உணர்ந்து கொள்ளமுடிகிறது. `ஜிகாத் காதல்’ போன்ற முழக்கங் களை
முன்னெடுத்துச் செல்லாததும், முசாபர்நகர், சகாரன்புர் மற்றும் மொராதாபாத்
ஆகியஇடங்களில் நடைபெற்ற வகுப்புக் கலவரங் களை பெரிய அளவிற்குத் தேர்தல்
பிரச்சனை யாக எடுத்துப் போகாததும்தான் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக பல
இடங்களை இழந்ததற்கு முக்கிய காரணம் என்று அவர்கள்கூறத் தொடங்கியுள்ளனர்.
“2014
மக்கள வைத் தேர்தல்களின்போது நாம் அதிக வாக்குகளைப் பெற்றதற்கு நம்
இந்துத்துவா நிகழ்ச்சிநிரலே காரணமாகும். இப்போது இடைத் தேர்தலின்போது தான்
நம்முடைய உண்மையான அடையாளத்தை மறந்ததும், உள்ளார்ந்த அரசி
யலைப்பின்பற்றியதும்தான் நம் தோல்விக்குக் காரணம்,’’ என்றும்
குறிப்பிட்டிருக்கிறது. (மெயில் டுடே, செப்டம்பர் 17, 2014) மகாராஷ்ட்ரா
மற்றும் ஹரியானா வெற்றி களைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ்/பாஜக தங்களுடைய
மதவெறித் தீயை தில்லியில் பலபகுதிகளில் விசிறிவிடத் தொடங்கி இருக்கிறது.
பவானா, நந்னகிரி, திரிலோக்புரி, சமய்பூர் பத்லி மற்றும் பல இடங்களில்
இவ்வாறு அவர்கள் தங்கள் மதவெறி நடவடிக்கை களைத் தொடங்கியுள்ளனர்.
வடக்கு
தில்லி யில் பவானா பகுதியில் நவம்பர் 2 அன்று ஒரு`மகா பஞ்சாயத்து’
நடந்திருக்கிறது. அதில் நவம்பர் 4 அன்று நடைபெறவுள்ள முகரம் ஊர்வலத்தை
எதிர்த்திட வேண்டும் என்று கோரியுள்ளனர். இக்கூட்டத்தில் அப்பகுதி யைச்
சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் மிகவும் வெறித்தனமாகப் பேசியிருக்கிறார்.
வரவிருக்கும் தேர்தல்களை மனதில்கொண்டுதான் இப்பகுதிகளில் பதற்றநிலைமை
உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்ப தாக, அப்பகுதி மக்கள் என்டிடிவி போன்ற
ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இங்கேயுள்ள ஒரு சிறிய வாய்க்கால்
இந்து மற்றும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளைப் பிரிக்கிறது. மதப்பதற்ற
நிலைமையைத் தணிப் பதற்காக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முகர்ரம்
ஊர்வலம் வரும் பாதையை மாற்றி அமைத்திட முஸ்லிம் சிறுபான்மையினர்
ஒப்புக்கொண்ட போதிலும், அங்கே பதற்ற நிலைமைகள் தொடர்கின்றன.
கிழக்கு
தில்லியில் உள்ள திரிலோக் புரியிலிருந்து மிக அருகில், வடகிழக்குத்
தில்லியில் உள்ள நந்னாகிரிப் பகுதியில், சென்ற வாரம்இரு பிரிவினருக்கு
இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வகுப்பு மோதல்கள் நடைபெற்றுள்ளன. மீண்டும்
இங்கே கலகத் தைத் தூண்டி விட்டது பாஜக தலைவர்கள்தான் என்பது ஊடகங்களில்
வந்துள்ளசெய்திகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. தீபாவளியன்று பட்டாசு
வெடிப்பதை சாக் காக வைத்துக்கொண்டு சமய்பூர் பத்லி மற்றும் மஜ்னு கா திலா
ஆகியஇடங்களில் வகுப்புவாதப் பதற்ற நிலைமைகள் உருவாக்கப்பட் டிருக்கின்றன.
ஐம்பது வயது மூதாட்டி ஒரு வர் இதில் பலியாகிவிட்டார். நாற்பதுக்கும் மேற்
பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தேசிய
அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டு மானால் அதற்கு வெறிபிடித்த இந்துத்துவா
நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதும், மதவெறித் தீயை விசிறி
விடுவதும்தான் அடிப் படை என்கிற விதத்தில் பிரதமரே இவற்றை முன்னெடுத்துச்
சென்று கொண்டிருக்கிறார். மும்பையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை
விரிவாகவே ஊடகங்கள் தெரிவித் தன.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இணைய
தளத்தில் காணப்பட்ட ஓர் உரைக்கு, ஓர் அரசியல் விமர்சகர் கீழ்க்கண்டவாறு
கருத்து தெரிவித் திருக்கிறார்: “ஈடிணையற்ற வகையில் புத் தெழுச்சி பெற்ற
இந்துயிசத்தின் தாயத்தாக தற்போதைய இந்தியப் பிரதமர் மீளவும் புதி தாய்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை யார் மறுக்க முடியும்?’’ இந்த
“ஈடிணையற்ற வகை’’ என்பது பிரதமரே பீற்றிக் கொள்வதைப்போல, இந்தியாவில் ஆண்
டாண்டு காலமாய் இருந்து வரும் புராணக் கதைகளையெல்லாம் எவ்வித சிரமமுமின்றி
நாட்டின் வரலாறாக மாற்றுவதும், தத்துவ சாஸ்திரத்தை, மத சாஸ்திரத்துடன்
இணைப்பதுமேயாகும்.
இத்தகைய இவர்களின் அரக்கத்தனமான நிகழ்ச்சிநிரலை
இரக்கமற்ற முறையில் பின்பற்ற இவர்கள் முயற்சிப்பது, இந்தியாவின் நவீன
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்குப் பேரழிவினை ஏற்படுத்திடும். நம்முடைய
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஆர்எஸ் எஸ் பரிவாரங்கள் தங்களுடைய
வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றிட
முயலும் இவர்களின் கொள்கையை முழுமையாக நிராகரித்து, மதவெறி சக்திகளுக்கு
தோல்வியை ஏற்படுத்து வதன் மூலம் நாட்டுமக்கள் இத்தகைய ஆபத்தை முழுமையாக
முறியடித்திட வேண்டும். ஒன்றுபட்ட மதச்சார்பற்ற ஜனநாயக இந்தி யாவின்
அடித்தளங்களைப் பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே நாட்டு மக்கள் அனை வருக்கும்
சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான போராட்டத்தை தீர்மானகரமான முறையில்
முன்னெடுத்துச் செல்ல முடியும்.
- தமிழில்: ச.வீரமணி
ஆர்எஸ்எஸ்/பாஜக
பரிவாரங்கள் தேசிய அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் அதற்கு
வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதும்,
மதவெறித் தீயை விசிறி விடுவதும்தான் அடிப்படை என்கிற விதத்தில் பிரதமரே
இவற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
நன்றி தீக்கதிர் 13.11.2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)