வெள்ளி, 28 நவம்பர், 2014

நவம்பர் 27 வேலைநிறுத்தம் வெற்றிபெற கடலூர் மாவட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும் நெஞ்சுநிறை நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்

அன்பார்ந்த தோழர்களே !
நமது கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 27 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட  JAC சார்பில் தலமட்டங்களுக்கு சென்று விரிவான பிரச்சாரம் மேற்ற்கொண்டோம். இணைந்த சிறப்புக்கூட்டங்கள் பத்து இடங்களில் எழுசிச்கரமாக நடைபெற்றது.மாநிலச்சங்கங்களின் சார்பில் தோழர்கள் P. இந்திரா, S. ஜான்போர்ஜியா, V. லோகநாதன், N. அன்பழகன் மற்றும் A. அண்ணாமலை ஆகியோர் மிகச்சிறப்பான பங்களிப்பினை வழங்கினர்.அனைத்து கூட்டங்களிலும் தோழர்,தோழியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.அனைத்து சங்க தலைவர்களும் இவ்வேலை நிறுத்தம் வெற்றிபெற தொய்வின்றி உழைத்தனர்.இதன் பலனாக கடலூர் மாவட்டத்தில் போராட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்று வெற்றிபெறச்செய்த அனைத்து தோழர்,தோழியர்களுக்கும்,தொடர்ச்சியாக கடும்பணியாற்றிய  JAC யில் அங்கம் வகிக்கும் அனைத்து  கிளைச்சங்க, மாவட்டசங்க மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கும் நமது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்கள் 814, அதில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோர் 573, உடல்நிலை[?] பாதிக்கப்பட்டோர் 79,அரசாங்கத்திற்கு ஆதரவாக நிர்வாகத்தின் பக்கம்  நின்று வேலைக்கு சென்று பணியாற்றியவர்கள் 162 [இதில் புரட்சியாளர்களும் (போலி) உண்டு]. ஆனாலும்  நமது மாவட்டத்தில் வேலைநிறுத்தம் 70.39% நடைபெற்றிறுப்பது பெருமைக்குரியதே.
தோழமையுள்ள
K.T.சம்பந்தம்

கருத்துகள் இல்லை: