ஞாயிறு, 2 நவம்பர், 2014

ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்திய அமைச்சருடன் சந்திப்பு கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்திட நிர்ப்பந்தம்ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இந்தியக் கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது.தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வின் தலைமை அமைப்பாக விளங்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி மற்றும் தத்தத்ரேயா ஹோஷாபாலே ஆகிய இருவரும் மத்திய அமைச்சர் இரானியுடன் தற்போதைய கல்வி முறை குறித்து விவாதித்து, இதனை மாற்றி அமைத்திட வேண்டும் என்கிற தங்கள் பரிந்துரைகளையும் அளித்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கம் எவ்வாறு இந்துத்துவா என்னும் மதவெறிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிடும் வகையில் கல்வி அமைப்பின் கீழ் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரலாறு மற்றும் பாடத் திட்டங்களில் இந்துத்துவாக் கருத்துக்களைத் திணித்திடத் துணிந்துள்ளத

சமீபத்தில் மத்திய அரசின் மூத்த அமைச்சர்களுடன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்எஸ்எஸ்-க்கும் அரசாங்கத்திற்கும் இடையே மிகவும் சிறந்த முறையில் ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் தீனனாத் பத்ரா தலைமையில் இயங்கிவரும் சிக்ஷா பச்சாவோ அந்தோலான் சமிதி, “இந்தியாவின் மாண்புகளை’’ப் பிரதிபலிக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனைகளை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டிருந்தது. மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே தீனனாத் பத்ராவின் புத்தகங்கள் கட்டாயமாக்கப்பட்டுவிட்டன. இதற்கு எதிராக நாடு முழுதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புள்ள யோகா குரு ராம்தேவ் என்று அழைக்கப்படும் சாமியாரும் கல்வி அமைப்பை “இந்தியமயமாக்கும்’’ விதத்தில் ஒரு புதிய தேசியப் பள்ளி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். இத்திட்டத்திற்கு மோடியின் ஆதரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இவர்கள் அளிக்க இருக்கும் பாரதிய இடைநிலைக் கல்வி ஆணைக் குழுவின் பாடத்திட்டங்கள், பண்டைக் காலத்துக் குருகுலக் கல்வி முறையுடன் நவீனக் கல்வி முறையைக் கலந்து போதிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனவாம்.
நன்றி தீக்கதிர் 02.11.2014

கருத்துகள் இல்லை: