புதன், 26 நவம்பர், 2014

நவம்பர் 11 வேலைi நிறுத்த விளக்கக்கூட்டங்கள்

நவம்பர்’27 வேலைநிறுத்த விளக்க சிறப்புக்கூட்டங்கள்
விருத்தாசலம் கிளையில்  17-11-2014 அன்று காலை வேலைநிறுத்த  போராட்ட விளக்கக் கூட்டம்  நடைபெற்றது. தோழர்கள்.V.இளங்கோவன்,கலைமணி தலைமையில்  NFTE தோழர்கள். R.செல்வம்,  இரா.ஸ்ரீதர், BSNLEU தோழர்கள் K.T. சம்பந்தம்,      A. அண்ணாமலை போராட்ட விளக்கவுரையாற்றினர்.  விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த தோழர்களுக்கு நன்றி.


உளுந்தூர்பேட்டையில் 17-11-2014 அன்று மதிய உணவு இடைவெளியில் தோழர் .அம்பாயிரம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. NFTE சார்பில் தோழர்கள்.R.செல்வம்  இரா.ஸ்ரீதர், BSNLEU சார்பில் தோழர்கள் K.T. சம்பந்தம்,  A. அண்ணாமலை போராட்ட விளக்கவுரையாற்றினர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த உளுந்தூர்பேட்டை தோழர்களுக்கு நன்றி.


20.11.2014 அன்று மதியம் நெய்வேலியில் போராட்டவிளக்க சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சிறப்புரையாக
தோழியர்.P.இந்திரா மாநில துணைத்தலைவர் BSNLEU,       தோழர். V.லோகநாதன்.மாநில துணைத்தலைவர்-NFTE. விளக்கவுரையாற்றினர். 20-11-2014 மாலை கடலூரில் GM அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, BSNLEU –B. சந்திரசேகர் தலைமையேற்றார், BSNLEU மாவட்டத் தலைவர் A.அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தினார், தோழர்கள்.G.ரங்கராஜ்-TMTCLU, M.பாரதி-TNTCWU, NFTE இரா.ஸ்ரீதர்,BSNLEU K.T.சம்பந்தம் விளக்கவுரையாற்றினர். BSNLEU மாநிலத்துணைத்தலைவர் தோழியர்.இந்திரா, NFTE மாநிலத்துணைத்தலைவர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். NFTE மாவட்ட பொருளாளர்  A.சாதிக்பாஷா நன்றிவுரையற்றினார். பெருந்திரளாக தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்டது கூட்டத்தின் சிறப்பம்சமாகும். விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடுகளை செய்த கிளைத் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: