புதன், 30 மே, 2018

இரங்கல் செய்தி

தோழர்களே ,

            நம்முடன் விழுப்புரம் பகுதியில் பணியாற்றி வரும் தோழர்.சுந்தர் அவர்களின் மனைவி திருமதி.ஜெயலட்சுமி அவர்கள் இன்று(30.05.2018) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

     அன்னாரை பிரிந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும் பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இறுதிச்சடங்கு  நாளை விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். 

புதன், 23 மே, 2018


BSNL –ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் கிளைகள்

கண்டன ஆர்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !!
              நமது இரு மாநில சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க  22.05.2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஜனநாயக வழியில் போராடிய அப்பாவி மக்கள் மீது அத்துமீறி காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையைக் கண்டித்தும் தமிழக காவல்துறைக்கு கட்டளையிட்ட தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து நமது இரண்டு சங்கங்களின்  சார்பாக இன்று மாலை 5.30 மணிக்கு G.M அலுவகலத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்.
                                               
தோழமையுடன்
   K.விஜய்ஆணந்த்                K.சிவசங்கர்                          P. ராஜதுரை
    கிளைச்செயலர்                  கிளைச்செயலர்                  கிளைச்செயலர்
 வெளிபகுதி கிளை         GM (O) கிளை                                        TNTCWU


செவ்வாய், 8 மே, 2018

இரங்கல் செய்தி

தோழர்களே ,

       நம்முடன் அரகண்டநல்லூர் பகுதியில் பணிபுரியும் தோழர். K.குமார் TT, அவர்கள் நேற்றிரவு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார், அவரது இறுதி சடங்கு இன்று (08.05.2018) மாலை 4.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. 

அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.