சனி, 30 மார்ச், 2019

பஞ்சப்படி உயர்வு

அன்பார்ந்த தோழர்களே !
2019, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2.6% பஞ்சப்படி உயர்ந்துள்ளது. பஞ்சப்படி கணக்கீட்டின் படி இதுவரை 138.8%ஆக இருந்த பஞ்சப்படி (IDA) 01.04.2019 முதல் 2.6% உயர்ந்து 141.4%ஆக மாற வேண்டும். இதற்கான உத்தரவை DPE வெளியிட்டதற்கு பின் BSNL வெளியிடும்

ஞாயிறு, 17 மார்ச், 2019

இரங்கல் செய்தி
தோழர்களே,

                   நம்முடன் திண்டிவனம் பகுதியில் பணியாற்றிவரும் தோழர்.D.மனோகரன் TT, அவர்களின் தந்தையும், கடலூர் மாவட்டத்தில் K.G. போஸ் அணியில் முக்கிய தலைவர்களில்  ஒருவரும்,ITEU சங்கத்தின் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் ஏற்று சிறப்பாக பணியாற்றியவர்,

   தோழர். S.துரைசாமி,  Retd.LI.BSNL,  அவர்கள் 16.03.2019, இரவு 10.00 மணி அளவில்  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரைப் பிரிந்து வாடும் தோழர் மனோகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு நமது இரங்கலையும்,பரிவினையும் தெரிவித்துக்கொள்கிரோம். 

 அன்னாரது இறுதி நிகழ்வுகள் திண்டிவனத்தில் இன்று 17.03.2019 மாலை 04.00 மணிக்கு நடைபெறும்.

வெள்ளி, 15 மார்ச், 2019

05.04.2019 சஞ்சார் பவன் நோக்கி பெருந்திரள் பேரணி

அன்பார்ந்த தோழர்களே!
ஒட்டுமொத்த தொலை தொடர்பு சந்தையயும் ரிலையன்ஸ் ஜியோ கைப்பற்ற உதவும் வகையில் BSNLஐ ஒழிக்க அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. BSNLன் நிர்வாக அமைச்சகமான DoTம் BSNLஐ ஒழிக்கும் அரசின் முடிவுகளை கடுமையாக அமலாக்குகிறது. அரசாங்கமும், DoTயும் எடுத்து வரும் நடவடிக்கைகள், ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காத அளவிற்கான சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. தனது செயல்பாட்டு செலவினங்களை சந்திப்பதற்காக வங்கியில் இருந்து BSNL நிறுவனம் கடனை வாங்குவதற்கு DoT அனுமதி தர மறுக்கிறது. அரசாங்கத்திற்காக BSNL நிறுவனம் செய்த பணிகளுக்காக அரசு தர வேண்டிய 2,500 கோடி ரூபாய்களை BSNLக்கு DoT வேண்டுமென்றே தராமல் உள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக மின்கட்டணங்களை கட்ட BSNLக்கு இயலவில்லை. அதன் காரணமாக டவர்கள் மற்றும் தொலைபேசி நிலயங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப் பட்டன. இவற்றால் சேவைகளும் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகிறது. கடந்த மூன்று நாட்களாக இதனை விவாதித்த AUAB, மத்திய அரசு மற்றும்DoTயின் சதிகளை நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது என உறுதியுடன் முடிவு செய்துள்ளது. எனவே 05.04.2019 அன்று சஞ்சார் பவன் நோக்கிய பெருந்திரள் பேரணியை நடத்த AUABமுடிவு செய்துள்ளது. இந்த பேரணியில் உரையாற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைப்பது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த பேரணியை வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாற்றும் வகையில் பெருவாரியான அளவில் ஊழியர்களை திரட்ட அனைத்து மாவட்ட, மாநில சங்கங்களையும் மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது
- தோழர் P.அபிமன்யு, பொதுச்செயலாளர்

திங்கள், 11 மார்ச், 2019

CMD BSNLஐ AUAB தலைவர்கள் 07.03.2019 அன்று சந்திப்பு- தொடர் உண்ணாவிரதம் ஒத்தி வைப்பு

அன்பார்ந்த தோழர்களே !
07.03.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்ட முடிவுகளின் அடிப்படையில் அன்று மாலையே AUAB தலைவர்கள் BSNL CMD அவர்களை சந்தித்தனர். நிர்வாகத்தின் தரப்பில் மனிதவள இயக்குனரும் உடன் இருந்தார். பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக AUAB தலைவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் BSNL CMD அவர்களிடம் AUAB தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டிருந்த GPF/EPF, வங்கி தவணைகள் மற்றும் இதர தொகைகள் அனைத்தையும் பிப்ரவரி மாதம் வரையில் BSNL நிறுவனம் முழுமையாக செலுத்தி விட்டதாக CMD BSNL தெரிவித்தார். இதற்கு மேல் ஊழியர்களின் ஊதியத்திற்கு தரவேண்டிய 700 கோடி ரூபாய்களுக்கான நிதி நிர்வாகத்திடம் இல்லையென அவர் தெரிவித்தார். வங்கிகளிடம் இருந்து கடனை பெறுவதற்கு DoT அனுமதிக்காததால், தனது தினசரி வருவாய் வசூலையே BSNL நம்பி இருக்க வேண்டி உள்ளது. தற்போது தினம் ஒன்றுக்கு ரூ.70 கோடி ரூபாய்கள் மட்டுமே வசூலாவதால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பத்து நாட்கள் பிடிக்கும். எனினும், விரைவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு நிர்வாகம் முயற்சி செய்யும். 

பழி வாங்குதல் நடவடிக்கைகள் தொடர்பாக கூறுகையில், DoTயின் கறாரான உத்தரவின் படிதான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, BSNL CMD மற்றும் மனிதவள இயக்குனர் ஆகிய இருவரும் தெரிவித்தனர். ஆனால் நிர்வாகம் இதுவரை யாரையும் தண்டிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். BSNL CDA விதிகளில் FR 17A இல்லையென்பதால், தலைவர்களுக்கு FR 17A அடிப்படையில் விளக்கம் கோரும் கடிதம் கொடுத்துள்ளது சரியல்ல என AUAB தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த மனிதவள இயக்குனர், இது தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

பிப்ரவரி மாத ஊதியத்தை விரைவில் பட்டுவாடா செய்யவும், பணி முறிவு பிரச்சனையை பரிசீலிப்பதாகவும் CMD BSNL கொடுத்துள்ள உறுதிமொழியின் அடிப்படையில், கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்தை AUAB ஒத்தி வைத்துள்ளது. 
---மாநிலச் சங்க செய்தி 

வெள்ளி, 8 மார்ச், 2019

இந்த மாதம் GPF விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 11

அன்பார்ந்த தோழர்களே!
இந்த மாதம் 11ஆம் தேதிக்குள் GPF விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.தேவைப்படுவோர் விண்ணப்பிக்கவும்.

வியாழன், 7 மார்ச், 2019

அரசாங்கத்தின் இந்த திட்டமிட்ட சதிகளை நாம் ஒன்று பட்டு உறுதியாக நின்று எதிர்த்து போராடி முறியடிப்போம்.

அன்பார்ந்த தோழர்களே !
BSNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை தரப்படவில்லை. 'எங்களிடம் பணம் இல்லை' என BSNL நிர்வாகம் சொல்கிறது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வங்கிகளிடம் இருந்து BSNL நிறுவனம் கடன் வாங்க வேண்டும். ஆனால் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட செயல்பாட்டு செலவினங்களுக்காக வங்கிகளிடம் இருந்து BSNL நிறுவனம் கடன் வாங்க DoT அனுமதி தருவதில்லை. இதர தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களை ஒப்பிடுகையில், BSNLஇன் கடன் மிக குறைவானது. பின்னர் BSNL நிறுவனம், வங்கியில் கடன்களை வாங்க DoT ஏன் அனுமதி தர மறுக்கிறது? ஊதியம் தராமல் BSNL ஊழியர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த அரசாங்கத்தின் திட்டம் தெளிவானது. ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களை VRS திட்டத்தில் வெளியேற செய்வதற்கான திட்டமிட்ட சதி இது. BSNL ஊழியர்களுக்கு VRS திட்டத்தை DoTயும், BSNLம் பரிசீலித்து வருவதாக ஏற்கனவே பத்திரிக்கை செய்திகள் வெளியாகி உள்ளன. ஆகவே, பெரும்பாலான ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேறச் செய்வதற்காக அனைத்து சதிகளும் வடிவமைக்கப் பட்டுள்ளன. குறைந்த அளவிலான ஊழியர்கள் இருந்தார்கள் என்றால், எதிர்காலத்தில் BSNLஐ ஏதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்க இலகுவாக இருக்கும். நாம் இந்த அரசாங்கத்தின் திட்டமிட்ட சித்து விளையாட்டை புரிந்து கொள்வோம். அரசாங்கத்தின் இந்த திட்டமிட்ட சதிகளை நாம் ஒன்று பட்டு உறுதியாக நின்று எதிர்த்து போராடி முறியடிப்போம்.
----தோழர் P.அபிமன்யு பொதுச்செயலாளர்

AUAB சார்பில் சர்வதேச "மகளிர் தினம்" அனைவரும் பங்கேற்பீர்...