செவ்வாய், 26 ஜூன், 2018


BSNL –ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்

28.06.2018
நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !!
BSNL நிறுவனத்தில் 1984-ஆம் ஆண்டு முதல் ஆளெடுப்பு தடை சட்டம் அமுல்படுத்த பட்டது அதன் விளைவாக Group D பணிகளில் நேரடி ஊழியர்கள் நியமனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள்  பணியமர்த்தப்பட்டு நிரந்திர தன்மை கொண்ட  Housekeeping , Cable mtce , security  போன்ற பணிகளை ஒப்பந்த முறையில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு  நிலையான ஊதியம், சட்டபடியான சலுகைகள் எதுவும் வழங்கப்படமால் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த இவர்களை பாதுகாக்க வேண்டும், அவர்களுக்கு சட்ட பாதுகாப்பை உருவாக்கி தர வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு BSNL ஊழியர் சங்கம் நாடு முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களை அணிதிரட்டி அவர்களுக்கென்று ஓரு சங்கத்தை அமைத்து  பல ஆண்டுகாலமாக ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை முன்வைத்து அவர்களின் போராட்டத்தை தலைமையேற்று கடந்த 15 ஆண்டுகளாகத்  நடத்தியதன் விளைவாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 10000 EPF , ESI போன்ற சட்ட சலுகைகள் அமுல்படுத்த பட்டன அதுமட்டுமின்றி திறனுக்கேற்ற ஊதியம் (skilled wages ) வழங்கப்பட வேண்டுமென  வழக்கு தொடர்ந்து போராடி உத்திரவை பெற்றுள்ள இந்த சூழலில் BSNL நிர்வாகம் நஷ்டத்தை காரணம் காட்டி சிக்கனம் என்கிற பெயரில் 40% ஒப்பந்த தொழிலாளர்களை குறைக்க வேண்டுமென முடிவெடுத்து உத்திரவு பிறப்பித்தத்தோடு  அதிதீவிரமாக நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த உத்திரவை நமது மத்திய சங்கம் கடுமையாக எதிர்த்து வருவதோடு, போராட்டங்களை  நடத்த அறைகூவல் விடுத்துள்ளது எனவே கடலூர் மாவட்டத்தில் அனத்துகிளைகளிலும் 28.06.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சக்திகரமாக நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.                                       
தோழமையுடன்
M.பாரதிதாசன்                                            K.T.சம்பந்தம்
மாவட்ட செயலர்                                      மாவட்ட செயலர்
TNTCWU                                                                                                   BSNLEUTNTCWU
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலார சங்கம்
கடலூர் மாவட்டம்
6 வது  மாவட்ட மாநாட்டில்  ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்
தலைவர்.                     தோழர். S.V.பாண்டியன்  CLR KAC
உதவி தலைவர்.                 தோழர். R.V. ஜெயராமன்  OS ,CDL
தோழர். V. மாரிமுத்து CLR  NVI
தோழர். R.தியாகராஜன் CLR CDL
தோழர். P.ஜெகதீசன் CLR CDM
செயலர்.                      தோழர். M.பாரதிதாசன் CLR  CDL
உதவி செயலர்கள்.               தோழர். K.T.சம்பந்தம் TT CDL
தோழர். D. முரளி CLR  CDL
தோழர். K. திருநீலம் CLR  NVI
தோழர் .P. சுதாகர் CLR GIE
பொருளர்.                     தோழர்.J.முரளி CLR CDL
உதவி பொருளர்.                 தோழர் S.சந்திரசேகர். CLR VLU
அமைப்பு செயலர்கள்:           தோழர்.D.சங்கரன் CLR CDL
தோழர்.M.மணிகண்டன் CLR  TNV
தோழர்.M. குமார் CLR ARA
தோழர்.S.சின்ன அய்யனார் CLR VLU   
தோழர். A. ராமமூர்த்தி CLR KAC
தோழர்.R.ராஜ்குமார் CLR CDL  
தோழர்.S. ஜெயசூர்யா CLR KAC   
தோழர். B. கிருஷ்ணராஜ் CLR  PRT
தோழர். K.கஜேந்திரன் CLR  VDC

தணிக்கையாளர்     :          தோழர்.S.பரதன் OAS CDL
                                     வாழ்த்துகளுடன்
                                                                   M.பாரதிதாசன்
                                                                               மாவட்ட செயலர் திங்கள், 25 ஜூன், 2018

இரங்கல் செய்தி


தோழர்களே ,

            நம்முடன் கடலூர் பகுதியில் CM section இல்  பணியாற்றி வரும் தோழர்.ஜெயச்சந்திரன் TT, அவர்களின் தாயார் திருமதி.சுலோச்சனா (83) அவர்கள் இன்று(25.06.2018) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

     அம்மையாரை பிரிந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும் பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இறுதிச்சடங்கு  நாளை சென்னை, பூந்தமல்லி யில் நடைபெறும்.