வியாழன், 25 செப்டம்பர், 2014

செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது மங்கள்யான். விண்வெளியில் இந்தியா புதிய வரலாறு எழுதியது




இந்தியாவின் மங்கள்யான் சோதனை முழு வெற்றியடைந்துள்ளது. செவ்வாய்கிர கத்தின் சுற்று வட்டப் பாதையில்இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் புதனன்று வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ள நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய நாடுகள் ஏற்கெனவே செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பி வெற்றி பெற்றுள்ளன. ஆனால், அந்த விண்கலங்களை பலமுறை முயற்சி செய்த பிறகே சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்த முடிந்தது. ஆனால் இந்தியா முதல்முயற்சியிலேயே மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தி விண்வெளியில் புதிய வரலாறை எழுதியுள்ளது.
சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி 15சி 25 எனும் ராக்கெட் மங்கள்யானை சுமந்து சென்றது. பூமியிலிருந்து 246 ஒ 23566 கி.மீ நீள் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் நிறுத்தப்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக 1.12.2013அன்று மங்கள்யான் புவி விசையிலிருந்து விலகி செவ்வாய்க்கிரகம் நோக்கி தனது பயணத்தைத் துவக்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அதன்பாதை சற்று மாற்றியமைக்கப்பட்டது. ஜூன் மாதம் 11ம் தேதி மங்கள்யானின் பாதை மாற்றப்பட்டு செவ்வாய் நோக்கி திருப்பப்பட்டது.
செவ்வாய் கிரகத்தை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொண்ட மங்கள்யான் புதனன்று சூரிய வட்டப்பாதையிலிருந்து செவ்வாய் சுற்று வட்டப்பாதைக்குள் புதன்கிழமை செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மிகக்கடினமான பணி 300 நாட்கள் கழித்துவிண்கலத்தில் உள்ள திரவ எஞ்ஜினை இயக்குவதுதான். இந்த சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டால் விண்கலத்தை செவ்வாய்க்கிரகத்தை ஒட்டி பாதைக்குள் செலுத்த முடியும் என்று இஸ்ரோ தொலையுணர்வு அறிவியல் செயற்கைக்கோள் தலைமைத்திட்ட இயக்குநர் மயில்சாமிஅண்ணாதுரை தெரிவித்துள்ளார். செவ்வாய்கிரகத்தை ஒட்டி செல்லும் போது மங்கள்யான் விண்கலத்தின் வேகத்தை குறைத்து சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான மிக முக்கியப் பணி புதன்கிழமை காலை 7.17க்கு துவங்கியது. மங்கள்யான் சோதனை வெற்றிகரமாக நடந்தேறியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். செவ்வாய் சுற்றுப்பாதையை அடைந்தமங்கள்யான் நிலைநிறுத்தப்பட்ட சில நிமிடங்களில் பூமிக்கு சிக்னல்களை அனுப்பியது.
இது விஞ்ஞானிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மங்கள்யான் விண்கலம் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள மையத்திலிருந்து பார்வையிட் டார். விஞ்ஞானிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தை ஆராய இதுவரை உலக நாடுகள் 52 விண்கலன்களை அனுப்பியிருந்தபோதும் அதில் 22 மட்டுமே வெற்றி பெற்றது.மங்கள்யான் சோதனை வெற்றிபெற்றதன் மூலம் விண்வெளியில் இந்தியா புதிய சாதனையை வரலாறை நிகழ்த்தியுள்ளது.
நன்றி தீக்கதிர் 24.09.2014

புதன், 24 செப்டம்பர், 2014


மாவட்ட செயலகக்கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !

நமது மாவட்ட செயலகம் கூட்டம் 01.10.2014அன்று மாலை  5 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க செயலகக் கூட்ட நிர்வாகிகள்   தவறாமல் குறித்த நேரத்தில்  கலந்து கொள்ள வேண்டுகிறோம். 
                                                       தோழமையுள்ள
                                                          K.T.சம்பந்தம் 

சனி, 20 செப்டம்பர், 2014


கிளைச்செயலர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

அன்பார்ந்த தோழர்களே !
இன்று(20.09.2014) நடைபெற இருந்த கிளைச்செயலர்கள்கூட்டம் 23.09.2014 அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.JAC சார்பில் நடைபற உள்ள தர்ணா போராட்டத்திற்கு மிகவும் சக்தியாக தோழர்களை திரட்டிட வேண்டும்.கட்டாயமாக மாவட்ட மாநாட்டு ரசீது புத்தகங்களை கொண்டுவர வேண்டும்.
                                      தோழமையுடன்
                                          K.T.சம்பந்தம்

வெள்ளி, 19 செப்டம்பர், 2014



கடலூர் மாவட்ட JAC கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !
நமது கடலூர் மாவட்ட கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டம் 18.09.2014 அன்று  தோழர்.R.ஸ்ரீதர் தலைவர் JAC தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தின் நோக்கங்களை JAC யின் கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் விளக்கிப்பேசினார். மேலும் தோழர்கள் R.ஜெயபாலன்FNTO, A.அண்ணாமலBSNLEU, R.V.ஜெயராமன்BSNLEU ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுகள்
23.09.2014 அன்று கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை மிகவும் எழுச்சியோடு நடத்துவது.

30.09.2014 அன்று இரண்டு மணி நேர வெளிநடப்பு இயக்கத்தை வெற்றிகரமாக்குவது.

இவைகளை விளக்கி நோட்டீஸ் வெளியிடுவது, மற்றும் பதாகைகள் வைப்பது.

சகோதர சங்க தலைவர்களை அழைப்பது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை வெற்றி பெறச்செய்வீர்
                                                                               தோழமையுடன் 
                                                                                   K.T.சம்பந்தம் 
                                                                                    கன்வீனர்

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மாநில சங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி...140 குடும்பங்களுக்கு மகிழ்ச்சி...


அன்பார்ந்த தோழர்களே !

சென்னை CGM அலுவலகம் முன்பு 15-09-2014 முதல் நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதத்தின் விளைவாக இன்று மதியம்(16-09-2014) மாநில நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேலூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 140 ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்வது என்று மாநில நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


கடலூர் மாவட்டத்தின் சார்பில் இரண்டாவது நாளில்  கலந்து கொண்டு வெற்றி கரமாக்கிய அனைத்து நிரந்திர ஊழியர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


வேலூர் ஒப்பந்த ஊழியர் பிரச்சினை தீர உண்ணாவிரதம் மேற்கொண்ட தோழர்கள்  A. பாபு ராதாகிருஷ்ணன், M.முருகையா, C.வினோத்குமார் ஆகியோர்களுக்கும், இந்த போராட்ட்த்திற்கு அறைகூவல் விடுத்து வெற்றிகண்ட  நமது மாநிலச் செயலர் தோழர் S.செல்லப்பா அவர்களுக்கும் நமது நன்றியினையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக் கொள்கிறோம் 
                                தோழமையுடன் 
                                      K.T.சம்பந்தம் 




வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பொறுப்பதற்கில்லை பொங்கி எழுவோம் தோழர்களே !


மாவட்ட செயலகக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்ட செயலக கூட்டம் 11.09.2014அன்று மாலை  5 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது .நமது மாவட்ட தலைவர் தோழர்.A.அண்ணாமலை தலைமைதாங்கினார்.அதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுகள் 
மாநிலச்சங்க அறைகூவலின்படி 16.09.2014 அன்று ஒப்பந்த ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது.அன்றையதினம் சென்னைக்கு 200 க்கும் மேற்பட்ட தோழர்களை திரட்டுவது.

17.09.2014 அன்று கடலூர் மாவட்ட JAC கூட்டத்தை நடத்தி அனைத்திந்திய அறைகூவலை நிறைவேற்ற திட்டமிடுவது.

20.09.2014 அன்று கிளைச்செயலர்கள் கூட்டம் நடத்தி, வரவேற்புக்குழு கணக்குகளை முடிக்க ரசீது புத்தகங்களை திரும்பப்பெறுவது.மேலும் 26.09.2014 அன்று நடைபெறவுள்ள ஒப்பந்த ஊழியர் சென்னை பேரணிக்கு திட்டமிடுவது.

அக்டோபர் 15 அன்று  டெல்லியில் நடைபெறவுள்ள பேரணியில் கடலூர் மாவட்டத்தின் சார்பில் 15தோழர்கள் பங்கேற்பது.

நமது அகிலஇந்திய மாநாட்டு சார்பாளர்களுக்கு பயணப்படி தீர்மானிக்கப்பட்டது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை அமுலாக்கிட கிளைச்சங்க, மாவட்டச்சங்க நிர்வாகிகள் இணைந்து பணியாற்றி வெற்றிகரமாக்கிட தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                           தோழமையுடன்
                                                                                      K.T.சம்பந்தம் 

சனி, 6 செப்டம்பர், 2014

மாவட்ட மாநாடு 05 09 14




















 கிளிக் செய்யவும் மேலும் 120 புகைப்படங்களுக்கு

 
https://plus.google.com/photos/101615389522202919238/albums/6055876508568552577

BSNLEU 7வது மாவட்ட மாநாடு – கடலூர் -05-09-2014 ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல்


தலைவர்                           தோழர் A. அண்ணாமலை SSS CDL

உதவிதலைவர்                                    தோழர் N. தேவர் TM VLU
உதவிதலைவர்                                    தோழர் N .சுந்தரம் SSS GIE
உதவிதலைவர்                                    தோழர் .S.பொன்மலைTM KAC
உதவிதலைவர்                                    தோழர்.S.ரகோத்துமன் STS CDL   

செயலாளர்                       தோழர்.K.T.சம்பந்தம் TM  CDL

உதவி செயலாளர்                             தோழர் S.பழனிTM TNV
உதவி செயலாளர்                             தோழர் R.V.ஜெயராமன்SSS CDL
உதவி செயலாளர்                             தோழர் G.S.குமார் STM CDM
உதவி செயலாளர்                             தோழர் E.பாலு TM CDL

பொருளாளர்                      தோழர்  V.குமார் STM VLU

உதவி பொருளாளர்                            தோழர் P.சேகர் STS தோழர்CDL

மாவட்ட அமைப்பு செயலாளர்            தோழர் S. பரதன்  SS  CDL
மாவட்ட அமைப்பு செயலாளர்            தோழர் V.சுரேஷ்பாபு TM  NTS
மாவட்ட அமைப்பு செயலாளர்            தோழர் K.பிரேமா TTA VDC
மாவட்ட அமைப்பு செயலாளர்            தோழர் S. சுந்தரமூர்த்தி TM VLU
மாவட்ட அமைப்பு செயலாளர்            தோழர் S.பிரபு TTA KAC
மாவட்ட அமைப்பு செயலாளர்            தோழர் G. ஜெகதீசன் TTA TNV

தணிக்கையாளராக தோழர் G.  நாகராஜன் SSS VLU  நியமிக்கப்பட்டார்
மாவட்ட அமைப்பு செயலாளர் ஒரு பதவி நிரப்பபடாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளது

டவுன்லோடு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

https://docs.google.com/file/d/0ByGily1KUKELQ0p5NzdKdHptWUk/edit

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

மாவட்ட மாநாடு -5 9 14




கடலூர் 7வது மாவட்ட மாநாடு 05 09 14






கடலூர்   BSNLEU         7 வது  மாவட்ட மாநாடு  இன்று கடலூர் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் நடந்தது.

 மாநாட்டிற்கு தோழர் V.  குமார் தலைமை தாங்கினார் .

மாநில அமைப்பாளர் BSNLWWCC தோழர்   V.P. இந்திரா துவக்க உரையாற்றினார்.

மாநிலச் செயலர் தோழர் S.  செல்லப்பா சிற்ப்புரையாற்றினார்.

 மாநில தலைவர்   TNTCWU தோழர் எம்.  முருகையா  பொருளாய்வுக் குழுவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மாவட்டச் செயலர்  K.T.சம்பந்தம்  செயல்பாட்டறிக்கையை தாக்கல் செய்தார்.

மாவட்டப் பொருளாளர் தோழர்G.S.  குமார் வரவு செலவு  தாக்கல் செய்தார்.

தோழர்கள்  
A. அண்ணாமலை , K.T.  சம்பந்தம்   விழுப்புரம் V.  குமார் -தலைவர் .செயலர் . பொருளாளராக ஏன மனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

சேவை   கருத்தரங்கில் அதிகாரிகள் . சகோதர சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் மாநிலப் பொருளாளர்   கே சீனுவாசன். மாநில உதவிப் பொருளாளர் தோழர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளைக் கடலூர் வரவேற்புக் குழுவினர்   செய்திருந்தனர்.



திங்கள், 1 செப்டம்பர், 2014

SPECIAL CASUAL LEAVE LETTER




கிளிக் செய்யவும். விடுமுறை கடிதம். 05 09 14 

https://docs.google.com/document/d/16d8R5RrHyByPEz9ro8csjwJDjvlwis-Z9scOyHBViP8/edit

கடலூர் மாவட்ட செயற்குழு 03 09 14





கடலூர்  மாவட்ட செயற்குழு  03 09 14
     

 03 09 14 அன்று  மாலை 3-00 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர்   குமார் தலைமையில்  கடலூர் -நமது சங்க அலுவலகத்தில் -  மாவட்ட செயற்குழு நடைபெறும்.

      
                                                             பொருள்
 மாநாட்டு செயல்பாட்டறிக்கை மற்றும் வரவு செலவு  குறித்து.


மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இந்த செயற்குழுவில்தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


                                                                                                   இப்படிக்கு


                                                                                               K.T.   சம்பந்தம்.
                                                                                          மாவட்ட செயலர்.




LETTER REQUESTING SPECIAL CASUAL LEAVE

From



To

Sub Divisional Engineer
Telephone exchange
……………………

Sir/Madam,
                                Sub: Grant of Special Casual Leave requested on 05-09-2014-reg
====0000====
                                Our BSNLEU conducts a seminar on “SAVE BSNL” in its  7TH District  conference to be held at Cuddalore on 05-09-2014. The Senior General Manager  and other officers will attend and address our members in this seminar. I have  proposed to attend  the conference . Hence I request you to grant me special casual leave on 05-09-2014(Friday).
                                Thanking you,

……………..                                                                                                              Yours faithfully,
----09-2014.