வெள்ளி, 19 செப்டம்பர், 2014

கடலூர் மாவட்ட JAC கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !
நமது கடலூர் மாவட்ட கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டம் 18.09.2014 அன்று  தோழர்.R.ஸ்ரீதர் தலைவர் JAC தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தின் நோக்கங்களை JAC யின் கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் விளக்கிப்பேசினார். மேலும் தோழர்கள் R.ஜெயபாலன்FNTO, A.அண்ணாமலBSNLEU, R.V.ஜெயராமன்BSNLEU ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுகள்
23.09.2014 அன்று கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை மிகவும் எழுச்சியோடு நடத்துவது.

30.09.2014 அன்று இரண்டு மணி நேர வெளிநடப்பு இயக்கத்தை வெற்றிகரமாக்குவது.

இவைகளை விளக்கி நோட்டீஸ் வெளியிடுவது, மற்றும் பதாகைகள் வைப்பது.

சகோதர சங்க தலைவர்களை அழைப்பது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை வெற்றி பெறச்செய்வீர்
                                                                               தோழமையுடன் 
                                                                                   K.T.சம்பந்தம் 
                                                                                    கன்வீனர்

கருத்துகள் இல்லை: