செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மாநில சங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி...140 குடும்பங்களுக்கு மகிழ்ச்சி...


அன்பார்ந்த தோழர்களே !

சென்னை CGM அலுவலகம் முன்பு 15-09-2014 முதல் நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதத்தின் விளைவாக இன்று மதியம்(16-09-2014) மாநில நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேலூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 140 ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்வது என்று மாநில நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


கடலூர் மாவட்டத்தின் சார்பில் இரண்டாவது நாளில்  கலந்து கொண்டு வெற்றி கரமாக்கிய அனைத்து நிரந்திர ஊழியர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


வேலூர் ஒப்பந்த ஊழியர் பிரச்சினை தீர உண்ணாவிரதம் மேற்கொண்ட தோழர்கள்  A. பாபு ராதாகிருஷ்ணன், M.முருகையா, C.வினோத்குமார் ஆகியோர்களுக்கும், இந்த போராட்ட்த்திற்கு அறைகூவல் விடுத்து வெற்றிகண்ட  நமது மாநிலச் செயலர் தோழர் S.செல்லப்பா அவர்களுக்கும் நமது நன்றியினையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக் கொள்கிறோம் 
                                தோழமையுடன் 
                                      K.T.சம்பந்தம் 
கருத்துகள் இல்லை: