வெள்ளி, 12 செப்டம்பர், 2014

மாவட்ட செயலகக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்ட செயலக கூட்டம் 11.09.2014அன்று மாலை  5 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது .நமது மாவட்ட தலைவர் தோழர்.A.அண்ணாமலை தலைமைதாங்கினார்.அதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுகள் 
மாநிலச்சங்க அறைகூவலின்படி 16.09.2014 அன்று ஒப்பந்த ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது.அன்றையதினம் சென்னைக்கு 200 க்கும் மேற்பட்ட தோழர்களை திரட்டுவது.

17.09.2014 அன்று கடலூர் மாவட்ட JAC கூட்டத்தை நடத்தி அனைத்திந்திய அறைகூவலை நிறைவேற்ற திட்டமிடுவது.

20.09.2014 அன்று கிளைச்செயலர்கள் கூட்டம் நடத்தி, வரவேற்புக்குழு கணக்குகளை முடிக்க ரசீது புத்தகங்களை திரும்பப்பெறுவது.மேலும் 26.09.2014 அன்று நடைபெறவுள்ள ஒப்பந்த ஊழியர் சென்னை பேரணிக்கு திட்டமிடுவது.

அக்டோபர் 15 அன்று  டெல்லியில் நடைபெறவுள்ள பேரணியில் கடலூர் மாவட்டத்தின் சார்பில் 15தோழர்கள் பங்கேற்பது.

நமது அகிலஇந்திய மாநாட்டு சார்பாளர்களுக்கு பயணப்படி தீர்மானிக்கப்பட்டது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை அமுலாக்கிட கிளைச்சங்க, மாவட்டச்சங்க நிர்வாகிகள் இணைந்து பணியாற்றி வெற்றிகரமாக்கிட தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                           தோழமையுடன்
                                                                                      K.T.சம்பந்தம் 

கருத்துகள் இல்லை: