பிஜேபி காலத்தில்தான் பங்கு விற்பனைக்கென்றே தனி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கேந்திர விற்பனை என்ற பெயரில் விஎஸ்என்எல், டாடாவுக்கு விற்கப்பட்டது. பால்கோ, சென்டார் ஓட்டல், மாடர்ன் புட்ஸ் உட்பட 9 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டன.`ஜவானுக்கும் பாதுகாப்பு இல்லை.... கிசானுக்கும் பாதுகாப்பு இல்லை’ என்பது மோடியின் புதிய கவர்ச்சி முழக்கம். மண்டபத்தில் எழுதி தருவது எல்லாம் கார்ப்பரேட்டு மயமாகி உள்ள காலம் இது. இவ்வசனத்திற்கு விளம்பர நிறுவனத்திற்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.இவர்களின் முந்தைய ஆட்சியில் கிசான்கள் (விவசாயிகள்) பட்டபாடு பார்த்தோம். இவர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு விற்ற பால்கோ நிறுவனம்தான் `அக்னி’ மற்றும் `பிரிதிவி’ஏவுகணைகளை தயார் செய்ய உதவிய அலுமினியக் கம்பெனி ஆகும். ரூ.5000 கோடி பெறுமான இந்நிறுவனம் ரூ.551 கோடிக்கு விற்கப்பட்டது. தேசத்தின் பாதுகாப்பு தொடர்புடைய பால்கோ நிறுவனத்தை ஏதோ பால்கோவா போல் விற்றார்கள்.
நன்றி தீக்கதிர்
நன்றி தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக