செவ்வாய், 8 ஜூலை, 2014

ரூ.32 செலவிட்டால் ஏழை இல்லையாம்!* கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.32* நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.46 * 110 கோடி மக்களில் 3 கோடி பேர் மட்டுமே ஏழைகள்
புதுதில்லி, ஜூலை 7-நாளொன்றுக்கு நகர்ப்புறத் தில் 47 ரூபாயும், கிராமப்புறத் தில் 32 ரூபாயும் செலவு செய்ப வர்கள் வறுமைக் கோட்டு வரம்புக்கு கீழ் வரமாட்டார் கள் என்றும், அவர்கள் ஏழை கள் அல்ல என்றும் பொருளா தார ‘வல்லுநர்’ சி. ரங்கராஜன் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக் கையில் பரிந்துரைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இன்னும் 3 தினங்களில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், ரங்க ராஜன் குழு மேற்கண்ட பரிந் துரையை மத்திய அரசுக்கு செய்துள்ளது.மேலும் 2011 - 12 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக் கெடுப்பின்படி, இந்திய மொத்த மக்கள் தொகையில் 29.5 சதவீதம் பேர் அல்லது 3 கோடியே 63 லட்சம் பேர் மட்டுமே ஏழைகள் என்றும் அந்த குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரங்கராஜன் குழுவின் இந்த பரிந்துரையை எதிர்க்கட்சிகள் மட்டுமல் லாது ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்களும் கூட கடுமை யாக விமர்சித்துள்ளனர். முந்தைய ஐக்கிய முற்போ க்கு கூட்டணியின் பிரதமர் மன் மோகன் தலைமையிலான அர சால் வறுமைகோடு வரைய றுப்பது சம்பந்தமாக சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட் டது.
இக்குழுவினர் கடந்த 2011-12ம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தனர். இதில் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ரூ.816ம், நகரங்களில் வசிப்பவர்கள் ரூ.1000த்திற்கு மேலும் ஒரு மாதத்திற்கு செலவு செய்யும் பட்சத்தில் அவர்கள் அனைவ ரையும் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழ்பவர்கள் எனக் கருதலாம் என தெரிவித்திருந் தது. இதன்படி கிராமப்புறத் தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு ரூ.27க்கு மேலும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர் ஒரு நாளைக்கு ரூ.33க்கு மேலும் செலவு செய்பவராக இருந்தால் அவர்கள் வறுமை கோட்டிலி ருந்து மீண்டு விட்டதாக குறிப் பிட்டிருந்தது. மேலும், இந்த அளவுகோளின் அடிப்படை யில் கணக்கிட்டதில் இந்தியா வில் 21.9 சதவிகிதத்தினர் மட்டு மே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதாவது இந்தியாவில் 36 கோடியே 30லட்சம் பேர் வறுமையில் உள்ளதாக குறிப்பிடப்பட் டிருந்தது.
இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இது பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியது. மேலும் மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த அறிக் கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப் பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கைக்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய் தன. இதனால் பெரும் நெருக் கடிக்கு உள்ளான மத்திய அரசு, வறுமைக்கோடு நிர்ணயம் சம் பந்தமாக தாக்கல் செய்யப்பட் டிருந்த அறிக்கையை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்தது. இதையடுத்து அப் போதைய பிரதமர் மன்மோ கன் சிங்கின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலை வராக இருந்த டாக்டர் சி.ரங்க ராஜன் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது. இக் குழுவினர் கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் புதிய அறிக் கையை கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளது. இதில் டெண் டுல்கர் தலைமையிலான குழுவி னர் ஏற்கனவே தாக்கல் செய் திருந்த அறிக்கையில் குறிப்பிட் டிருந்த விஷயங்களில் ஒரு சில திருத்தங்களை மட்டும் மேற் கொண்டு புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இதன்படி கிராமப்புறங் களில் ஒரு மாதத்திற்கு ரூ.917க்கு மேலும், நகர்ப்புறங்களில் ஒரு மாதத்திற்கு ரூ.1, 407க்கு மேலும் செலவு செய்பவர்கள் வறுமைக் கோட்டில் இருந்து மீண்டு விட்டவர்களாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கி றது. அதாவது, கிராமப்புறங் களில் ஒரு நாளைக்கு ரூ.32ம், நகர்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.46க்கும் குறைவாக செலவு செய்பவர்கள் மட்டுமே வறு மைக் கோட்டிக்கு உட்பட்ட வர்கள் என அறிக்கையில் குறிப் பிடப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: