மாநில சங்க போராட்ட அறைகூவலை அடுத்து மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவுகள்
மாநில நிர்வாகத்தின் உத்தரவுகள்.-மேலும் படிக்க -டவுன்லோடு செய்யுலிங்கை கிளிக் செய்யவும்.pdf
வியாழன், 31 ஜூலை, 2014
திங்கள், 28 ஜூலை, 2014
சனி, 26 ஜூலை, 2014
07.08.14அனைத்து சங்கங்களின் JAC சார்பாக"கோரிக்கை நாள்"
அருமைத் தோழர்களே! நமது BSNL-லில் உள்ள அனைத்து NON-EXECUTIVE சங்கங்களின் JAC சார்பாக எதிர்வரும் 07.08.14 "கோரிக்கை நாள்"கடைபிடித்து மதிய உணவு இடைவேளையில் கோரிக்கை அட்டை அணிந்து "ஆர்ப்பாட்டம் "நடத்திட நமது BSNLEU பொதுச் செயலர் தோழர் பி.அபிமன்யு அறைகூவல் விடுத்துள்ளார்.
JAC அறைகூவல் காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.வெள்ளி, 25 ஜூலை, 2014
அடுத்த நேசனல் கவுன்சிலுக்கான (NJCM) விவாத பொருட்கள் ...
அருமைத் தோழர்களே! நமது பொதுச் செயலர் தோழர்.பி.அபிமன்யு அவர்கள் அடுத்த நேசனல் கவுன்சிலுக்கான விவாதத்திற்கான கீழ்க்கண்ட பிரச்சனைகளை நிர்வாகத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.உங்களின் கவனத்திற்கு . . .
78.2 சத IDA இணைப்புக்கேற்ப ஊழியர்களின் சம்பள விகிதங்களை மாற்றுதல்.
ERP நடைமுறைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை தீர்த்தல்
BSNL CDA நன்னடத்தை விதிகளில் திருத்தம்.
GPF நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்துதல்.
MRS மருத்துவத்திட்டத்தில் சகோதர சகோதரிகளை சேர்த்தல்.
BSNL மாற்றல் கொள்கையில் திருத்தம்.
மருத்துவப்படியை ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வழங்குதல்.
தொழிற்சங்க பொறுப்பாளர்களுக்கான மாற்றல் சலுகையில் திருத்தம்.
ஆயுள் காப்பீட்டுத்தொகையை உயர்த்துதல்.
ஓய்வுக்கு ஓராண்டு முன்பாக ஆண்டு உயர்வுத்தொகை தரும் திட்டத்தை உயிர்ப்பித்தல்.
கூட்டு ஆலோசனைக்குழுக்களுக்கான விதிமுறைகளை வகுத்தல்.
TELECOM FACTORY தயாரிப்புக்கு தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை தாமதமின்றி தருதல்.
இரண்டாவது கேடர் சீரமைப்பு அமுல்படுத்துதல்.
மக்கள் தொகைக்கு ஏற்ப வீட்டுவாடகைப்படியை உயர்த்துதல்.
தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கேடர் சீரமைப்பு.
பல்முனை திறமை கொண்ட ஊழியர்களை உருவாக்குதல்.
விடுப்பைக்காசாக்கும் திட்டத்தில் ஆயுள் காப்பீடு உருவாக்குதல்.
தேசியமொழி அதிகாரி பணியிடங்களை முறைப்படுத்துதல்.
எதிர்மறை மதிப்பெண் திட்டத்தைக் கைவிடுதல்.
BSNLகாசுவல்&காண்ட்ராக்ட் ஊழியர் போராட்ட அறைகூவல்.
அருமைத் தோழர்களே! புவனேஷ்வரில் BSNL காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்தியசெயற்குழு கூட்டம் கடந்த 18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில் நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும்காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது. நமது BSNLஊழியர்சங்கத்தின் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராஜ்கோட் மத்திய செயற்குழு BSNLகாசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்சம்மேளனத்தின் அறைகூவலை வெற்றிகரமாக்க கேட்டு கொண்டது .அந்த அடிப்படையில் தற்போது 21.07.14 அன்று டெல்லியில் கலந்து கொண்ட BSNL காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்தின்மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்து போராட்ட அறைகூவல் விடப்பட்டுள்ளது .
26-08-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம்
- 25-09-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி
- 15-10-2014 அன்று CMD அலுவலகம் நோக்கி பேரணி பிரச்சனைகள் தீராவிட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தம்(தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
- விடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
- அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
- சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.
- பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
- சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
- EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
- வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
- பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
- BSNL காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும். ஒப்பந்த ஊழியர்சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டை தமிழ் மாநில சங்கம் எதிர் வரும் 2014 டிசம்பர் மாதம் நடத்த இசைவு தந்துள்ளது.
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுஅறைகூவல்.
அருமைத் தோழர்களே! நமது தமிழ் மாநில உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழுவின் மாநில மையம் பெண்களுக்கான கோரிக்கையை முன்னிறுத்தி, நமது BSNL-CMD அவர்களுக்கு சமர்ப் பித்திட ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தி அதை மாநில கண்வீ னருக்கு அனுப்ப அறைகூவல் விடுத்துள்ளது.
புதன், 23 ஜூலை, 2014
செவ்வாய், 22 ஜூலை, 2014
மத்திய செயலக முடிவுகள்
நமது BSNLEU மத்திய சங்கத்தின் செயலக கூட்டம் டெல்லியில் கடந்த 20.07.14 அன்று, கே.ஜி.போஸ் அரங்கத்தில் நமது அகில இந்திய தலைவர் தோழர்.வி.எ.என். நம்பூதிரி தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டம் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது.அம் முடிவுகள் குறித்து நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய செயலக முடிவுகள்
மத்திய செயலக முடிவுகள்.-இந்த லிங்கை கிளிக் செய்யவும்- மேலும் படிக்கf
ஞாயிறு, 20 ஜூலை, 2014
BSNL-MTNL இணைப்பு தொடர்பான BSNL ஊழியர் சங்க கூட்ட முடிவுகளும், FORUM கூட்ட முடிவுகளும்.
சுற்றறிக்கை எண்:157-BSNL-MTNL இணைப்பு தொடர்பான BSNL ஊழியர் சங்க கூட்ட முடிவுகளும், FORUM கூட்ட முடிவுகளும்.
மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
8வது கிளை மாநாடு. 19 07 14
8வது திண்டிவனம் கிளை மாநாடு சிறப்பாக நடந்தது. 19 07 14 தொலைபேசி நிலையம்-
மாநில உதவிச் செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
தோழர் ராஜேந்திரன் தலைவராகவும்-தோழர் புண்ணியகோடி செயலாளராகவும் -தோழர் இருதயநாதன் பொருளாளராகவும் ஏன மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட சங்கம் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
வெள்ளி, 18 ஜூலை, 2014
திண்டிவனம் கிளை மாநாடு 19 07 14
திண்டிவனம் தொலைபேசி நிலையத்தில் நாளை மாலை 3-30 மணிக்கு கிளை மாநாடு நடைபெறுகிறது. மாநில நிர்வாகி தோழர் பாபு ராதாகஷ்ணன் மாவட்ட செயலர் தோழர் சம்பந்தம் பங்கேற்கிறார்.
ரு 39458 கோடி முதலீடு
அடுத்த ஐந்து ஆண்டுகளில்
பீ.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்களில் ரூ.39,458 கோடி முதலீடு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவுபுதுடெல்லிபொதுத்துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்களில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.39,458 கோடி முதலீடு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இழப்பை சந்தித்து வரும் இந்த நிறுவனங்களை இதன் வாயிலாக மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கடன் சுமைஜூன் மாத இறுதி நிலவரப்படி, இந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த கடன் ரூ.21,208 கோடியாக உள்ளது. வருவாய் குறைந்தது மற்றும் செலவினம் அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்த நிறுவனங்களுக்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது என்று மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 2012 மார்ச் மாதத்தில் இருந்து இந்த இரண்டு நிறுவனங்களின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. 2014 மார்ச் மாதத்தில் பீ.எஸ்.என்.எல்-ன் கடன் ரூ.6,448 கோடியாக உயர்ந்துள்ளது. 2012 மார்ச் மாதத்தில் கடன் ரூ.3,335 கோடியாக இருந்தது. இதே ஆண்டுகளில் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் கடன் சுமை ரூ.9,648 கோடியிலிருந்து ரூ.14,760 கோடியாக உயர்ந்துள்ளது.இரண்டு நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பு குறைந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டில் மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களில் 15 சதவீதத்தினர் பீ.எஸ்.என்.எல். இணைப்புகளை பெற்றிருந்தனர். இது, மே மாதத்தில் 11 சதவீதமாக குறைந்துள்ளது. அதுபோல், எம்.டி.என்.எல். சந்தைப் பங்கு 11 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக சரிந்துள்ளது.கடும் சரிவுபீ.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லேண்டுலைன் மற்றும் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக சரிவடைந்துள்ளது. எம்.டி.என்.எல்-ன் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.
07 08 14 கோரிக்கைகள் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
07 08 14 ஊழியர்களுக்கு - நமது நிர்வாகம்- நியாயமான கோரிக்கைகளைத் தீர்க்க காலம் தாழ்த்துகிறது. நமது நியாயமான கோரிக்கைகளைத் தீர்க்க வலியுறுத்தி 07 08 14 கோரிக்கை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A meeting of the JAC of
the Unions and Associations of the Non-Executives was held
yesterday the 17.07.2014. A review of the discussions,
held between the JAC and the Management, in the meeting
held on 27.06.2014, was made. The meeting expressed it’s
utter dissatisfaction, since no progress has taken place
in the settlement of the demands. Hence it is decided to
observe a “Demands Day” on 07.08.2014, to urge the
Management to settle the demands without further delay.
Badge wearing and Lunch Hour Demonstrations will take
place on that Day. The next meeting of the JAC will take
place on 11.08.2014, to decide the further course of
action.
புதன், 16 ஜூலை, 2014
திங்கள், 14 ஜூலை, 2014
DoT செயலரக திரு ராகேஷ் கார்க் பதவியேற்பு. அவருக்கு நம் வாழ்த்துக்கள்.
DoT செயலரக திரு ராகேஷ் கார்க் பதவியேற்பு. அவருக்கு நம் வாழ்த்துக்கள்.
Shri Rakesh Garg will be the new Secretary, DoT.
Shri Rakesh Garg, an IAS
officer of the 1980 batch will be the next Secretary of
the DoT. At present shri Rakesh Garg is the Principal
Secretary of Uttar Pradesh. The post of the Secretary DoT
became vacant after the retirement of shri Farooqui on 30th
June. BSNLEU heartily welcomes the new Secretary DoT.
சனி, 12 ஜூலை, 2014
ஏழையின் வயிற்றில் அடிக்கும் பட்ஜெட்!
1. பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உண்மையில்லாதவை. 2. இதன் அடிப்படை நிதிக் கொள்கை என்பது, இந்த நாட்டு ஏழை-எளிய மக்களின் மீது சுமையை ஏற்றி, அந்த பலன்களை இந்த நாட்டில் நல்ல நிலையில் உள்ள செல்வந்தர்களுக்கு குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு, உயர்தட்டில் உள்ள நடுத்தர மக்களுக்கு அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. 3. நாட்டின் பொருளாதாரத்தை மிகப் பெருமளவில் தனியார்மயமாக்கலுக்கு உட்படுத்தும் அம்சத்தை உள்ளடக்கியுள்ளது. அதாவது “பொது-தனியார் கூட்டு” என்பதைச் சார்ந்த திட்டமிடல் பரவலாக அனைத்துத் துறைகளிலும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, பொதுத் துறைகளின் பங்கு விற்பனை என்பது மிகப் பெருமளவில் திட்டமிடப்பட்டுள்ளது. 4. தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதுதான் இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்று தெரியப்படுத்தினாலும், இந்தியப் பொருளாதாரத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற, நெருக்கடியில் தள்ளியுள்ள மந்த நிலையையோ அல்லது பணவீக்கத்தையோ குறைப்பதற்கான எந்த நம்பிக்கையையும் இந்த பட்ஜெட் அளிக்கவில்லை என்று விவரிக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக
புதிய அரசின் பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும், 2014-2015ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியை விட்டுப் போகும் முன்பு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் புள்ளிவிவரங்களும் ஒன்றே என்பது நாம் கவனிக்கத்தக்கது. இடைக்கால பட்ஜெட்டில் வருவாயாகக் காட்டப்பட்டிருந்த அம்சங்கள் அதீத நம்பிக்கையுடன் முன்வைக்கப்பட்டவையாக இருந்தன. அதில் கூறப்பட்டிருந்த புள்ளிவிவரங்கள் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன. தற்போதைய பட்ஜெட் நேரடி வரிகளில் ரூ. 22,200 கோடியை நிகர வருவாய் இழப்பாகக் காட்டுகிறது. மறைமுக வரிகளைப் பொறுத்த வரையில் நிகரவருவாய் ஈட்டாக ரூ. 7,525 கோடியைகாட்டுகிறது. எனில், ஒட்டுமொத்த நிகரவருவாய் இழப்பு என்பது ரூ. 14,776கோடியாகும். நிதியமைச்சர் அருண்ஜெட்லி, எந்த செலவினங்களையும் தமது அரசாங்கம் வெட்டவில்லை என்றுகூறுகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில், இந்தத் தொகையை முந்தைய அரசின் இடைக்கால பட்ஜெட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதம் என்று காட்டிய அளவிலேயே தற்போதைய பட்ஜெட்டின் புள்ளிவிவரமும் இருக்கிறது. எனவே தற்போதைய புள்ளிவிவரங்களும் நம்ப முடியாதவையாக, சந்தேகமளிப்பவையாகவே உள்ளன.
பட்ஜெட் ஆவணங்களே சாட்சி
இதையே வேறு கோணத்தில் பார்ப்போம். 2014-15ம் ஆண்டிற்கான மொத்தவரி வருவாயையும் வரியல்லாத வருவாய்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், அந்தத் தொகையானது 2013-14ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டினை விட 16 சதம் அதிகமாகும். இது நிச்சயம் சாத்தியமில்லை. ஏனெனில், வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும்போது, மொத்தஉள்நாட்டு உற்பத்தியின் உண்மை மதிப்பில் ஒரு 5 சதமானம் உயர்வு இருக்கும்போது, பண வீக்க விகிதம் 11 சதமானத்திற்கு உயர்ந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். 2013-14ம் ஆண்டைவிட, தற்போது 2014-15ம் ஆண்டில் அனுமானிக்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 13.4 சதம் மட்டுமே அதிகமாகும். இப்படி 13.4 சதம் மட்டுமே உயரக் கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சத நடப்பு வருவாய் உயர்வு என்பது வரி விகிதத்தில் எந்த உயர்வும் இல்லாமல் சாத்தியமாகாது என்பதை பட்ஜெட் ஆவணங்களே தெளிவாக்குகின்றன.
அதிக நிதிப்பற்றாக்குறை நிதிமூலதனத்திற்கு ஆகாது
எனவே, 2014-15ம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் செலவு விகிதங்கள் சரிக்கட்டப்படும் என்று கொண்டால், தற்போது நிதிப்பற்றாக்குறையாகக் காட்டப்படும் 4.1 சதத்தை விட நிச்சயம் மிக அதிகமாகத்தான் இருக்கும். உண்மையில் இது ஒன்றும் பெரியவிஷயமல்ல. ஆனால், இப்படிப்பட்ட ஒரு முடிவை நிதி மூலதனம் விரும்பாது. நிதி மூலதனம் நிதிப்பற்றாக்குறையினை விரும்பாது என்ற ஒரே கட்டாயத்தினால்தான், அரசாங்கம் செலவினங்களை சுருக்குகிறது. ஏழை-எளிய மக்களுக்கென்று குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை சுருக்கிக் கொள்கிறது.
வரிவிலக்குகளும்உயர்தட்டு மக்களுக்கே!
இரண்டாவதாக, இங்கே நாம்கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் உள்ளது. இந்த பட்ஜெட்டில் கலால்மற்றும் சுங்க வரிகள் அனைத்துமே உள்நாட்டு உற்பத்தியாளர்களின் லாப விகிதத்தை மட்டுமே அதிகரிக்கும் வகையில் வரையறை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் என்று சொல்லும்போது, அவர்களில் நிச்சயம் கார்ப்பரேட் முதலாளிகள் பிரதானமாக இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நேரடி வரியைப் பொறுத்த வரையில் அதில்ஏற்படுத்தப்பட்டுள்ள அத்தனை மாற்றங்களும் அந்நிய ஊக முதலீட்டாளர்களுக்கும், உயர் மத்திய தர வர்க்கத்தினருக்கும் வரிச் சலுகையை வழங்கும் விதத்திலுமே அமைந்துள்ளன. வருமான வரி விலக்கு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சம் வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது ஏதோ ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் பயனளிப்பதாக கருதப்படும். ஆனால், உண்மையில் மத்தியதர வர்க்கப் பிரிவில் உள்ள உயர்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த வருமான வரி விலக்கு என்பது வெறும்ரூ.50,000 அல்ல, மாறாக ரூ.1,50,000ஆகும். இதில் கூட ஒரு பிற்போக்குத்தனமான அணுகுமுறை இருப்பது தெளிவாகிறது. (இந்த ரூ.1,50,000 என்பதில் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன. வருமான வரிவிலக்கிற்கான உச்ச வரம்பு ரூ. 2லட்சம் என்பதில் இருந்துரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு வசதிக் கடனுக்கான வட்டிவிகிதத்திற்கான விலக்கு என்பதில் இன்னொரு ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளளது. முதலீடு வகையில் விலக்கு உயர்வாக இன்னொரு ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளது. இப்படி இவை அனைத்துமே நடுத்தர வர்க்கத்தின் உயர்தட்டிற்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது). மாறாக, இந்த பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் சமூக நலத்துறையைப் பொறுத்த வரையிலும் சரி, அல்லது கிராமப்புற அபிவிருத்தித் துறையைப் பொறுத்த வரையிலும் சரி, ஒரு கருமித்தனமான அணுகுமுறையே காணப்படுகிறது. நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டைவிட இந்த பட்ஜெட்டில் எந்த ஒதுக்கீட்டுத் தொகையும் குறைக்கப்படவில்லை என்று சொல்லியுள்ள போதும், இங்கே மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய பிரிவினருக்கு அளிக்க வேண்டிய கவனம் போதுமான அளவில் வழங்கப்படவில்லை.
வசதிபடைத்தவருக்கு சாதகமானகுரூர மனோபாவம்
பணவீக்க விகிதத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்தோமானால், ஒட்டு மொத்தசமூக நலத்துறை சார்ந்த பயன்களுக்கும் அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது தெளிவாகும். அரசாங்கம் இந்த செலவினங்களை மிகக் கடுமையாக வெட்டிச் சுருக்கியுள்ளது. இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் கடைப்பிடித்துள்ள நிதிக் கொள்கை என்பது வசதி படைத்தவர்களுக்கு கூடுதல் லாபத்தை அளிப்பது என்பதும்,அதே நேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டிச் சுருக்குவது என்பதும் ஆகும். ஆனால், இதற்கு நேர் எதிர் மாறாக, தொலைக்காட்சிப் பேட்டிகளில் நிதியமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் பாஜக கூட்டணி செல்வந்தர்களுக்கு சாதகமான குரூர மனோபாவத்துடன் இருக்கும் என்ற பொதுவான மதிப்பீட்டிற்கு பாதகமில்லாமல் நடந்து கொண்டுள்ளது.
அந்நிய முதலீட்டை49 சதமாக்கும் முயற்சி
மூன்றாவதாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கும் முயற்சியை இந்த பட்ஜெட் மிகத் தெளிவாக்கியுள்ளது. அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டை26 சதத்தில் இருந்து 49 சதமாகஉயர்த்துவது என்பதில் இராணுவத்திலும், இன்சூரன்சிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் மற்றும்தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும்) எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்று நம்பச் சொல்வது அபத்தமானது. இது தான் உண்மை என்றால், அரசாங்கத்திலேயே கூடதனியார் பங்குகளுக்கான பாதுகாப்பு எல்லை என்பது 26 சதம் என்று நிர்ணயம் செய்வதில் எந்த நியாயமும் இல்லை, அர்த்தமும் இல்லை. 26 சதத்திற்கு அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரருக்கு வீட்டோ அதிகாரம் (ரத்து அதிகாரம்) கிடைக்கும் என்பது ஒரு புறம். அது மட்டுமல்லாமல், ஒரு பங்குதாரர் 49 சதமானம் பங்குகளை வைத்திருந்தால், அவரை சாதாரணமாக புறக்கணித்துவிட முடியாது. எனவே, 49 சதமானத்திற்கு அந்நிய பங்குகளை அனுமதிப்பது என்பது பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் நலன்களை உயர்த்துவதற்கான முயற்சியாகும்.
அர்த்தமற்ற வாதம்
பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டினை உயர்த்த நிதியமைச்சர் வைக்கும் வாதம் - “இராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக நாமே தயாரித்துக் கொள்ளலாம். அப்படி நாமே இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து கொள்ளலாம் எனும்போது, இந்த 49 சதமான அந்நிய பங்குகள் என்பது உள்நாட்டு சுய தேவையை பூர்த்தி செய்யும். இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும். அந்நியச் செலாவணியைப் பேணுவதற்கும் கூட இது உதவும்“ - என்றெல்லாம் நிதியமைச்சர் வாதிடுகிறார். ஆனால், இப்படி “இறக்குமதிக்குப் பதிலாக அந்நிய முதலீடு” என்ற வாதம் 49 சத அந்நிய மூலதன முதலீட்டிற்கான வாதமாக மட்டும் இருக்காது; அதையும் தாண்டிப் போகலாம்.கிருஷ்ணமேனன் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோதே, இப்படி இராணுவத் தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்வது என்ற முயற்சி எழுந்தது. ஆனால், அப்போது 49 சதமானம் அந்நிய நேரடி மூலதனம் என்பது இராணுவத் தளவாட உற்பத்தித் துறையில் தேவை என்ற பேச்சு எழவில்லை. ஒரு வேளை இப்படி அந்நிய நேரடி மூலதன முதலீட்டை அனுமதிக்காவிடில் தொழில்நுட்பம் வராது என்ற வாதத்தை முன் வைக்கலாம். ஆனால், தற்போதைய நிதியமைச்சர் தான் இராணுவ இலாகாவிற்கும் பொறுப்பு வகிக்கிறார் என்ற சூழலில், அவர் இந்த வாதத்தை முன்வைக்கவில்லை. மேலும், நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால், இராணுவத் தளவாட உற்பத்தியில் நம் சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்றால், உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, 49 சதமானம் அந்நிய மூலதனத்தை அனுமதிப்போம் என்பது அர்த்தமற்றது, ஆபத்தானது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால கோரிக்கை
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தனியார் பங்குகளை அனுமதிப்பதற்கு வைக்கப்படும் வாதங்களும் அர்த்தமற்றவை.உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். நமது அரசாங்கம் வங்கிகளின் முதலீட்டு ஆதாரங்களை உயர்த்துவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து அது அச்சடித்து வைத்துள்ள தொகையை, அரசாங்கப் பத்திரங்களின்பேரில் கடனாக வாங்கிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். இப்படி வாங்கப்படும் பணம் செலவு செய்யப்படாது. மாறாக கையிருப்பாக வைக்கப்படும்.
எனவே, இப்படி அச்சடிப்பது பணவீக்க விகிதம் உயர்வதற்கு வழிவகுத்துவிடும் என்று யாராலும் வாதம் செய்ய முடியாது. அமெரிக்க நிதித்துறையில் நெருக்கடி ஏற்பட்டபோது, அமெரிக்க நிதித்துறையை தூக்கி நிறுத்துவதற்கு 13 டிரில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது. ஒபாமா நிர்வாகம் பல உத்தரவாதங்கள் உட்பட பல்வேறு வடிவங்களில் அமெரிக்க நிதித்துறைக்கு முட்டுக் கொடுத்து நின்றது. ஆனால், இந்த அளவிற்கான நிதியிருப்பை அது உருவாக்குவதாகச் சொல்லவில்லை. இந்த அளவு நிதியும் செலவிடப்படவில்லை. ஆனால், 13 டிரில்லியன் டாலர்கள் இருந்தால் மட்டுமே அமெரிக்க நிதித் துறையின் நெருக்கடி சமாளிக்கப்படும் என்றுசொல்லப்பட்டது. அதே போல,இந்திய அரசாங்கமும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வங்கி கையிருப்பு தொடர்பாக வலிந்து மேற்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின் படி வைத்திருக்க வேண்டிய தொகையை அப்படியே நாணய வடிவில் வைக்கவேண்டியதில்லை.
இந்த “நிபந்தனைகள் மற்றும் வரையறைகள்” எல்லாம் நெருக்கடி நிலைக்கானவை. எனவே, மேலே கூறப்பட்ட முறையில் பணத்தைஅச்சடித்துக் கொள்வது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இப்போதும் அமெரிக்கவில் கடுமையான நெருக்கடி உள்ளது. எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனம், தனது நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள, இந்தியாவிடம் இப்படியொரு நீண்ட கால கோரிக்கையினை வற்புறுத்துகிறது. இதை நியாயப்படுத்துவதற்கு பாஜகஅரசாங்கம் வைக்கும் சாக்குப் போக்குதான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயப்படுத்தும் முயற்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நெருக்கடியை தொடரச் செய்யும் பட்ஜெட்
“நிதி பலப்படுத்துதுல்” என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பட்ஜெட் இது. அதற்காக, ஏழை மக்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட பொது முதலீட்டினை வெட்டிச் சுருக்கிவிட்டு, வசதிபடைத்தவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இந்த நிதி பலன்களை அதிகரிக்கும் திசை வழியில் உள்ள பட்ஜெட் இது. எனவே, இந்த பட்ஜெட்உள்நாட்டு சந்தையை விரிவாக்க உதவாது. அதே போல தொடர்ந்து கொண்டிருக்கும் உலக முதலாளித்துவ நெருக்கடியால் வெளிநாட்டுச் சந்தைகளிலும் ஒரு தேக்க நிலையே நீடிக்கிறது. இதனால் அங்கும் பொருட்களுக்கான விற்பனை மந்தநிலையில் உள்ளது. எனவே, கிராக்கி குறைந்துள்ள நிலையில் இந்த நெருக்கடி இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை தணிக்க முடியாது. மேலும் தற்போது உள்ள பணவீக்க விகிதம் என்பது அதிக கிராக்கியினால் ஏற்பட்டதல்ல. மாறாக விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்பட்டது. அதே போல, உணவு தானியங்கள் வெளிச் சந்தைகளில் விற்கப்படுவதால் ஊக வணிகம் மேலும் ஊக்கப்படுத்தப்பட்டு பணவீக்க விகிதம் குறைவதற்கான வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டது. எனவே, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இனியும் தீவிரமாகத் தொடரும்.
தமிழில் :………ஆர். எஸ்.செண்பகம், திருநெல்வேலி.
மத்திய பட்ஜெட் - 2014 : குறி வைப்பது யாரை !- க.சுவாமிநாதன்
அதிகம் தொடர்ச்சியே . . . மாற்றத்தை விட . . . இது இந்து நாளிதழின் தலையங்கத்தின் தலைப்பு. ஆனால் தலையங்கத்தின் உள்ளடக்கமும் மாற்றத்தை நாடியதாக இல்லை என்பது வேறு கதை.ற பட்ஜெட்டின் முதல் குறியாக இன்சூரன்ஸ் துறை உள்ளது. 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அந்நிய முதலீடு உயருமென அறிவிக்கப்பட்டுள்ளது. 2000லிருந்து அந்நிய முதலீடுகள் இந்திய இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. டாடாவோடு கைகோர்த்து வந்த அமெரிக்க நிறுவனமான ஏஐஜி இப்போது வெளியேறிவிட்டது. சன்மார் உடன் கைகுலுக்கிய ஆஸ்திரேலிய நிறுவனமான ஏஎம்பியும் குட்பை சொல்லிவிட்டது.
10 ஆண்டுகள் கூட தொழிலில் நிலைக்காத அந்நிய முதலீடுகளை ஊக்குவித்து இந்தியாவில் இன்சூரன்ஸ் பயன் கிடைக்காதவர்களுக்கெல்லாம் அதனை விரிவாக்கப் போவதாக அருண் ஜெட்லி கூறியுள்ளார். இதன் மூலம் ரூ.18,000 கோடி அந்நிய முதலீடு கிடைக்குமென்கிறார்கள். ஆனால் 2000லிருந்து இதுவரையிலான 13 ஆண்டுகளில் வந்திருப்பது 6,300 கோடிகள்தான்.ற பட்ஜெட்டின் இன்னொரு குறி பொதுத்துறை நிறுவனங்கள். நிகர வரி வருமானம் 17 சதவீதம் அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதீத மதிப்பீடு என பட்ஜெட் ஆதரவாளர்களே கூறுகின்றனர்.
அப்படியெனில் வரவுகள் வராவிட்டால் செலவுகளில்தான் கை வைப்பார்கள். திட்டச் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்டதிலோ, மானியங்களிலோதான் வெட்டு விழக்கூடும். இல்லாவிட்டால் யார் தலைமீது கை வைக்கலாம்!. பொதுத் துறை பங்கு விற்பனை மூலமே இடைவெளியை நிரப்ப முடியும் என்பார்கள். அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.43,000 கோடி, பொதுத்துறை அல்லாத நிறுவனங்களில் உள்ள அரசுப் பங்குகளில் ரூ.15,000 கோடியை விற்கலாம் என்கிறது பட்ஜெட். ற மூன்றாவது வங்கித் துறையை நோக்கி அம்பை வீசியுள்ளார்கள். பொதுத்துறை வங்கிகள் பங்குத் சந்தையில் மூலதனம் திரட்டுவது ஊக்குவிக்கப்படும் என்கிறார் அருண்ஜெட்லி. 2018க்குள்ளாக பேசல் ஐஐஐ விதிமுறைகளுக்கு ஏற்ப இந்திய வங்கிகளுக்கு 2.8 லட்சம் கோடி கூடுதல் மூலதனம் தேவைப்படுமாம்.
எங்கே போவது! இப்போதே ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகளில் அரசின் பங்கு 58 சதவீதம்தான். பரோடா வங்கியிலோ 56 சதவீதம்தான். இருப்பது இவ்வளவுதான். ஆனால் பங்கு விற்பனை தொடருமென்றால் என்ன அர்த்தம்! பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 51 சதவீதம் இருக்க வேண்டுமென்ற வரம்பும் தளர்த்தப்படும் என்பதுதான்.ற பீடிகையே பட்ஜெட்டைவிட பெரிசாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளார் பொருளாதார நிபுணர் சி.பி.சந்திரசேகர். பட்ஜெட்டின் பகுதி - ‘அ’ வெறும் அறிவுப்புகள்தான். பகுதி - ஆ பட்ஜெட்டின் விவரங்களை தாங்கியது. ஆனால் ‘அ’ பகுதிக்கான பக்கங்கள் அண்மை ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பட்ஜெட்டுக்கு சம்மந்தமில்லாத அறிவிப்புகள், மிக சிறுசிறு தொகையிலான திட்டங்கள் பூதாகரமாய் அ பகுதியில் காட்டப்படுகின்றன. 28 திட்டங்களுக்கு ரூ.100 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டச் செலவு, திட்டமில்லாத செலவினங்கள் மொத்தம் 18 லட்சம் கோடிகளைத் தொடுகிறது.
அதில் 28 திட்டங்களுக்கான 2800 கோடி ரூபாய் என்பது டீ குடிக்கிற செலவு மாதிரி. இதை கவர்ச்சிகரமாய்க் காட்ட பகுதி - அ-வில் பலூன் ஊதப்படுகிறது.ற பலியாடுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு போவது போல பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சதவீதம் பங்குகளை ஒவ்வொரு நிறுவனத்திலும் விற்றால் என்ன கிடைக்கும். டீசூழுஊ யின் ஒரு சதவீதம் 3,400 கோடி. கோல் இந்தியா 2,380 கோடி. ஸ்டேட் வங்கி 1923 கோடி. சூகூஞஊ 1,259 கோடி. ஐடீஊ 803 கோடி. க்ஷழநுடு 595 கோடி என பட்டியல் நீள்கிறது.ற நேற்று வரை “பாதுகாத்தவர்” இன்று பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீட்டை 49 சதமாக உயர்த்துவது நாட்டின் பாது காப்பிற்கே அச்சுறுத்தல் என்கிறார்.
அவர் யாருமல்ல. மே மாதம் வரை மத்தியபாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தஏ.கே.அந்தோணிதான் இப்படி கூறுகிறார். இம்முடிவு இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனங்களை அந்நிய பன் னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வருமென அலாரம்அடித்துள்ளார். பதவியில் இல்லாவிட் டால்தான் மனசாட்சி இருக்கும் போல.
நவீன காலத்தில்தான்இந்தியா வாழ்கிறதா?
ஒரு பக்கம் இந்தியாவில் நவீன தொழில்நுட்பங்கள் பரவுகின்றன. இன்னொரு பக்கம், அத்தனை நவீனங்களுக்கும் சம்பந்தமே இல்லா மல் பல பிற்போக்குச் செயல்களும் நடந்தேறுகின்றன. கின்றன. கடைப்பிடிக்கும் சடங்குகளில் பிற் போக்கு என்பதோடு அது முடியவில்லை, மனசாட்சியற்ற கொடுமைகளும் இழைக்கப்படு கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அநீதிகள், வயது வேறுபாடின்றி, நாட்டின் பொதுச் சட்டங்களுக்குக் கட்டுப்படாத கட்டப்பஞ்சாயத்துகளின் கட்டளைப்படி தொடர்கின் றன. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு 13 வயது சிறுமி, அப்படியொரு கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பின்படி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது நாகரிகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலேயாகும்.
அந்த மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில் உள்ள குல்குலியா என்ற கிராமத்தில் திங்களன்று (ஜூலை 7), பழிக்குப் பழியாக இக்கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. முதல்நாள் அந்தச் சிறுமி யின் அண்ணன் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து,அங்கிருந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. மறுநாள், அந்தப் பெண்ணின் கணவன் சமூகப் பஞ்சாயத்துத் தலைவரிடம் புகார் செய்ததோடு, பழி வாங்குவதற்காக அந்த வாலிபனின் தங்கையை வன்புணர்ச்சி செய்ய தன்னை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டானாம். ஊரார் முன்னிலையில் அந்தசமூகத் தலைவர் அதற்கு அனுமதி கொடுத்தா ராம். சிறுமியின் தாயார் கதறியழுததைப் பொருட் படுத்தாமல் சிறுமியை வனப்பகுதிக்குள் கடத்திச்சென்றார்களாம். பல மணி நேரம் கழித்து உறவினர் கள் ரத்தக்கசிவோடு கிடந்த சிறுமியை மீட்டு வீட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.ஏதோ ஒரு மூலையில் எப்போதாவது நடக்கிற ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இதை ஒதுக்குவதற் கில்லை. நாடு முழுவதும் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளின் தொடர்ச்சிதான் இது. நகரங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஓரளவுக்காவது ஊடக வெளிச்சத் தைப் பெறுகின்றன.
குல்குலியா கிராமத்துக் கொடுமை போன்றவை அரிதாகத் தான் வெளியே வருகின்றன.சமூகக் கட்டுப்பாட்டின் பெயரால் எந்த அளவுக்கு மனித நேய உணர்வுகள் மதிப்பிழந்து போகின்றன, மனித உரிமைகள் காலில் போட்டு நசுக்கப்படுகின்றன என்பதற்கு மற் றொரு சாட்சியாகவே குல்குலியா கிராமம் காட்சியளிக்கிறது. தேசிய மகளிர் ஆணையம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டிருக்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியுள்ளது. மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகள் விரைவாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டு உரிய தண்ட னைகள் உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.
அதே வேளையில், இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான பஞ்சாயத்துகள் தமிழகத்திலும் வேறு பல மாநிலங்களிலும் பல்வேறு வடிவங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. சமுதாயத் தின் மனசாட்சியை உலுக்குகிற, மாற்றத்திற்கு வழிவகுக்கிற, பெண்ணின் கவுரவத்தையும் உரிமையையும் வலியுறுத்துகிற மாபெரும் சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தேவையையே இது அழுத்தமாக உணர்த்துகிறது.
வியாழன், 10 ஜூலை, 2014
வருமான வரி விலக்கு -
80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1
லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5
லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2
லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5
லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
புதன், 9 ஜூலை, 2014
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 % IDA இணைத்தல்
மத்திய சங்க நிர்வாகிகள் டெலிகாம் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 % IDA இணைத்தல் குறித்து பேச்சு வார்த்தை
Meeting with Member (Services), Telecom Commission, regarding pension revision, based on 78.2% IDA merger.
Com. P. Abhimanyu, GS and
Com. Swapan Chakraborty, AGS, met Shri S.C. Misra, Member
(Services), Telecom Commission,
today the
09.07.2014,
and urged him to
expedite
the issue of pension revision, based on 78.2% IDA
merger.
The Member (Services) explained that the work of
sending
the file to the Department of Expenditure again is
going
on seriously, and is likely to be signed by the
Secretary, DoT, within a day or two, and thereafter it would be sent
to the DoE.
ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம்.
Based on talks held with JAC, Corporate Office directs all CGMs to send compliance certificate, regarding implementation of minimum wage, EPF and ESI for contract workers.
The JAC of Unions and
Associations of the Non-Executives, in it’s talks with the
Director (HR), held on 27.06.2014, severely complained
that the Corporate Office orders on Minimum Wage, EPF, ESI
etc. are not being implemented in most of the circles.
Director (HR) finally told that a report will be called
for from all the CGMs regarding the implementation of
Corporate Office orders on this issue, and based on the
report, further action would be taken. According to the
assurance given by the Director (HR), to the JAC,
Corporate Office has issued letter yesterday the
08.07.2014, directing all the CGMs to send compliance
certificates.
EPF and ESI குறித்து ரிபோர்ட் -மேலும் படிக்க லிங்கை கிளிக் செய்யவும்.
மத்திய சங்கம் கடிதம்.
CHQ writes to Corporate Office, on implementation of Social Security Measures (EPF/ESI) to the casual labour working in BSNL.
Casualஊழியர்களுக்கு EPF , ESI குறித்து மத்திய சங்கம் நமது நிறுவனத்திற்கு கடிதம்- மேலும் படிக்க லிங்கை கிளிக் செய்யவும். pdf
<<view letter>>
11 07 14 போராட்டம் ஒத்தி வைப்பு
அருமைத் தோழர்களே!
நமது மாவட்ட,மாநில சங்கங்களின் அறைகூவலுக்கினங்க கடந்த 04.07.14 அன்று மிக சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்தினோம்
அதன் பயனாக 09.07.14 அன்று மதியம் CGMஅவர்களிடம் நமது மாநில சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்த படியால் 11.07.14 அன்று நாம் நடத்த இருந்த தர்ணாவை நமது மாநில சங்கம் ஒத்திவைத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாக கலந்து கொண்ட அனைவருக்கும் , போராட்ட திட்டத்தை கையில் எடுத்த நமது BSNLEU மாநில சங்கத்திற்கும், நமது நியாமான உணர்வுகளை புரிந்து கொண்டு பிரச்சனை தீர்விற்கு வழிவகுத்த மாநில நிர்வாகத்திற்கும் நமது பாராட்டுக்களை உரித்தாக்குகிறோம்.
மாநிலச் சங்கம்- மாநில நிர்வாகம் -பேச்சு வார்த்தை -பிரச்சனைகளில் முன்னேற்றம்- போராட்டம் தள்ளி வைப்பு-- தகவல் பலகையில் தெரியப்படுத்த இந்த லிங்கை டவுன் லோடு செய்யவும்.
செவ்வாய், 8 ஜூலை, 2014
11 07 14 தர்ணா
11.07.2014 அன்று நாம் நடத்த இருக்கின்ற தர்ணா போராட்டத்தை கைவிடக் கோரி மாநில நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனினும் நமது போராட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
நிர்வாகத்திலிருந்து நமது சங்கத்திற்கு கடிதம்.-டவுன் லோடு செய்ய -கிளிக் செய்க
ஓய்வு பெறும்- ஓய்வு பெற்ற ஊழியர்கள்- தொலை பேசி குறித்து
ஓய்வு பெறும்- ஓய்வு பெற்ற ஊழியர்கள்- உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தால் -நமது நிறுவனத்தில் பணி புரியும் அதிகாரி - ஊழியர் proof of life certificate regarding. -கொடுக்கலாம். -விதிகள் தளர்த்தல்
Corporate Office letter on modification in policy for grant of concessional telephone facility to retired / retiring employees of BSNL.
உத்தரவு படிக்க -கிளிக் செய்யவும்.
ஊழியர்களின் வேலை திறமை முன்னேற BSNL CMD யிருந்து கடிதம்.
CMD's DO letter on improving performance and efficiency through effective implementation of Performance Management System.
நமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வேலை திறமை முன்னேற BSNL CMD யிருந்து கடிதம். -கடிதம் டவுன்லோடு செய்ய -கிளிக் செய்யவும்.
மதச்சார்பற்ற பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம்--= ஜோதிபாசு
இந்திய
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் களங்கரை விளக்கம். மார்க்சிய இயக்கத்தின் மகத்தான
வழிகாட்டி. புகழ்மிகு தலைவர். மங்காத ஜோதி தோழர் ஜோதிபாசு. 1998 நவம்பர்
16 அன்று புதுதில்லியில் ஆற்றிய நேரு நினைவுச் சொற்பொழிவில் அவர்
கூறியதாவது:
நிலச் சீர்திருத்தம் இல்லாமல், ஜனநாயக அதிகாரப் பரவல்
இல்லாமல் ஒருசிலர் கரங்களில் செல்வமும், அதிகாரமும் அதிக அளவுக்குக்
குவிவது நீடித்துக் கொண்டே போகிறது. கையாள முடியாத அளவுக்கு அதிகார
வர்க்கம் பெருகிக்கொண்டே போகிறது.அதே சமயத்தில் பெருமளவு மக்கள் வறுமையில்
மூழ்கிக் கிடக்கிறார்கள். அரசியல் சட்டத்தின் செயல்பாடுகளிலுள்ள
பிறழ்வுகள், பொருளாதார முன்னேற்றத்தில் அசமத்துவம், ஒரு மையப்படுத்தப்பட்ட
அரசியல் அமைப்பு மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வு போன்றவைகளுக்கு இட்டுச்
சென்றுள்ளது.
இவை சில சமயங்களில் மையத்துக்கு எதிராகக் குமுறல்களை
ஏற்படுத்தி விடுகின்றன.சாதீய மற்றும் மதவாத வாக்கு வங்கிகளை உருவாக்குவது,
பணத்தைப் பயன்படுத்துவது, உயர்மட்டங்களில் லஞ்ச லாவண்யம், குண்டர்களைப்
பயன்படுத்துவது மற்றும் கிரிமினல்கள், அரசியல்வாதிகள் கூட்டு ஆகியவை
நம்முடைய சமூக அரசியல் வியாதிகளில் ஒருசில. 80ம் ஆண்டுகளிலிருந்து நடை
பெற்றுவரும் சம்பவங்கள், நல்லெண்ணங்கொண்ட சக்திகள் அனைத்துக்கும் மிகுந்த
கவலை அளிக்கிறது.
21வது நூற்றாண்டில் நாம் நுழையவிருக்கும்
நேரத்தில் இந்தத் தவறான போக்குகளை திருத்துவதற்கு உணர்வுப்பூர்வமான
முயற்சிகள் தேவைப்படுகின்றன.1992ம் ஆண்டில் பாபர் மசூதியை தகர்த்த
அருவருக்கத்தக்க செயல், அடிப்படைவாதிகளால் செய்யப்பட்டது என்பதுடன் அதனுடைய
வகுப்புவாத விளைவு இந்தியாவின் மரியாதையையே களங்கப்படுத்திவிட்டது.
பிஜேபியினரால் தலைமை தாங்கப்படும் அரசாங்கம் உண்மையான மதச்சார்பின்மை என்று
அது கூறிக்கொள்வதை உயர்த்திப் பிடிக்கப்போவதாக, அதனுடைய
தேசியத்திட்டத்தில் பிரகடனம் செய்துள்ளது; உண்மையில் அது, மதச்சார்பின்மை
என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டை மாற்ற வேண்டுமென்பதற்கான
அறைகூவல்தான்.
நாம் அனைவரும் அறிந்திருப்பதுபோல் மதச்சார்பின்மை
என்பதன் அடிப்படையான கோட்பாடுகளையே அப்பட்டமாக மீறுவதாகும். வகுப்புவாத
மற்றும் செக்டேரியன் அரசியல் என்பது இந்தியாவின் நீண்டகால போற்றுதலுக்குரிய
பாரம்பரியமான மதங்களை மதிக்கும் தன்மையையும், சகிப்புத்தன்மையையும்
அச்சுறுத்துவது ஆழ்ந்த கவலைக்குரிய ஒன்று. இந்து மதம் என்பது பிஜேபியால்
திரித்துக் கூறப்படுகின்றது.தேசத்தைக் கட்டுவதற்கான ஒரு மாற்றுப் பாதையை
நாடு தேடிக் கொண்டிருக்கும்போது அது மேற்குவங்க, கேரளா மற்றும்
திரிபுராவின் இடது முன்னணி அரசுகளின் மாதிரி நிர்வாகத்தைக் காணவேண்டிய தேவை
உள்ளது. உபரி நிலங்களை மீட்டு அதை விநியோகம் செய்வதில் மேற்குவங்கம் ஒரு
புதிய சாதனையை படைத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
நாங்கள்
தற்பொழுது எங்களுடைய நிர்வாகத்தை நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் மூலம் கிராம
மட்ட அளவுக்குஅதிகாரப் பரவல் செய்திருக்கிறோம். இன்றுமாநிலத்தில்
வருடாந்திர திட்டச் செலவில் 50 சதவீதம் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ்யமுறை
மூலம் செலவிடப்படுகிறது. நிர்வாகப்பரவலை செய்தது ஒரு புதிய தலைமுறையைச்
சேர்ந்த தலைமை தோன்றுவதற்கு உதவியுள்ளது. அது உள்ளாட்சி அமைப்புகளில் 33
சதவீத ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பெண்களுக்கு அரசியல் வாய்ப்புகளை
திறந்துவிட்டுள்ளது. இந்த விதி, பின்னர் பஞ்சாயத்து சட்டத்தில்
சேர்க்கப்பட்டுள்ளது.
கிராமப்புற நிலையில் குணரீதியான மாற்றம்
ஏற்பட்டுள்ளதன் தவிர்க்க முடியாத விளைவாக மேற்குவங்க மக்களின், குறிப்பாக
கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாங்கும் சக்தி ஒரு குறிப்பிடத்தக்க
வளர்ச்சியை அடைந்துள்ளது. இது பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின்,
அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத்தின் கூட்டு என்ற அடிப்படையில்
தொழில்மயமாக்கல் என்ற ஒரு புதிய உணர்வுக்கு தேவைப்படும் சமூக தளத்தை
உருவாக்கியுள்ளது.சுயநல சக்திகளுக்கெதிரான மக்கள் இயக்கங்கள் மூலம்
கிராமப்புறங்களில் இந்த மாறுதல்கள் ஏற்படுவது சாத்தியமாகியுள்ளது. நல்ல
கலாச்சார இயக்கங்களை ஆதரித்து உற்சாகப் படுத்துவதன் மூலம் நாங்கள்
இந்தியாவின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்க
முடிந்துள்ளது.
இன்று (ஜூலை 8) தோழர் ஜோதிபாசுவின் 101வது பிறந்தநாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)