திங்கள், 9 ஜூன், 2014

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுசிறப்பாக நடைபெற்ற கடலூர் மாவட்ட கள்ளக்குறிச்சி செயற்குழு
7.6.2014 அன்று காலை 11மணியளவில் BSNLEU  கடலூர் மாவட்டச் செயற்குழு  கள்ளகுறிச்சியில்  சிறப்பாக நடைபெற்றது.கள்ளக்குறிச்சி கிளைத் தோழர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.தோழர் V.குமார் மாவட்டத் தலைவர் தலைமை தாங்கினார்.நமது மாநிலச் செயலர் தோழர் S.செல்லப்பா , மாநிலப் பொருளாளர் தோழர் K. சீனுவாசன் மற்றும் மாநில  உதவிப் பொருளாளர் தோழர். மகேந்திரன் ,கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் , முன்னணி ஊழியர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.காலை 11 மணியளவில் மாநிலச் செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் நமது சங்கக் கொடியை யேற்றி வைத்தார் பின்னர் மாவட்டச் செயற்குழு துவங்கியது. தோழர் P.ரத்தினம் கள்ளகுறிச்சி கிளைச் செயலர் வரவேற்புரையாற்றினார். தோழர் S.பொன்மலை மாவட்ட அமைப்புச் செயலர் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.பின்னர் மாவட்டச் செயலர் தோழர் K.T.சம்பந்தம் நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்திப் பேசினார் .பின்னர் கிளைச் செயலர்களின் விவாதம் நடை பெற்றது.   தோழர் K. சீனுவாசன் மாநிலப் பொருளாளர் மற்றும் மாநில  உதவிப் பொருளாளர் தோழர். மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். விவாதத்தின் தொகுப்புரையாக தோழர் S.செல்லப்பா சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் நமது மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். குறிப்பாக சென்னை சொசைட்டி தேர்தலில் நமது பங்களிப்பு சம்பந்தமாக வெகுவாகப் பாராட்டி பேசினார். அதே போன்று போன் மெக்கானிக் சுழல் மாற்றல் பிரச்சனையில் நமது மாவட்ட சங்கத்தின் பங்கு பணி குறித்து பாராட்டினார்.நிறைவுரையாக தோழர் K.T.சம்பந்தம் விவாதத்தில் வந்த கருத்துகளைத் தொகுத்து  செயற்குழுவின் முடிவுகளை அறிவித்தார்.நன்றியுரை மாவட்டப் பொருளாளர் தோழர்.G.S.குமார் கூற மாவட்டச் செயற்குழு இனிதே நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை: