புதன், 25 ஜூன், 2014

சிறப்பாக நடைபெற்ற விழுப்புரம் பொதுக்குழுக்கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
24.06.2014 அன்று விழுப்புரம் கிளையின் பொதுக்குழுக்கூட்டம் தோழர் S.மோகன்குமார் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.கிளச்செயலர் தோழர் A.சுந்தர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று அஞ்சலி உரையாற்றினார். நமது மாவட்டத்தலைவர் தோழர் V.குமார் மாவட்ட செயற்குழு முடிவுகளை விளக்கிப்பேசினார்.மாவட்ட துணைத்தலைவர் தோழர் N.மேகநாதன் RGB தேர்தலில் நாம் ஆற்றிய பணிகள்,மாவட்டச்சங்கம் TM சுழல் மாற்றலில் செய்த சாதனைகள்,விழுப்புரம் கோட்டப் பொறியாளர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உத்திரவை தன் விருப்பதிற்கேற்ப தான்தோன்றித்தனமாக செய்திட்ட குழப்பங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.பங்கேற் 22 தோழர்களில் N.தேவர், R.செல்வம், S.ராஜகோபால் N.உமாசங்கர், S.இரவிச்சந்திரன் ஆகிய தோழர்கள் விவாதத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை மிகச்சிறப்பாக பதிவு செய்தனர்.இறுதியாக நமது மாவட்டச்செயலர் தோழர் K.T சம்பந்தம்  இன்றைய அரசியல் சூழ்நிலை, இந்திய தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள், குறிப்பாக BSNL நிறுவனம் சந்தித்துவரும் தொடர் நஷ்ட்டம் அதன் காரணமாக நாம் இழந்த சலுகைகள், மாநிலச்செயற்ற்குழு முடிவுகள், கிளைச்சங்கத்தின் ஜனநாயக செயல்பாடுகள், உறுப்பினர்களின் கடமைகள்,சங்க ஒற்றுமை,மாவட்ட மாநாடு ஆகியவைகள் பற்றி விளக்கமாக பேசினார். கிளைத்தலைவர் தோழர் S.மோகன்குமார் நன்றி நவில பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.மாலை6.30மணிக்குதுவங்கி 9.30 வரையில் நடைபெற்ற கூட்டத்தில் இறுதிவரையில் அனைத்து தோழர்களும் பங்கேற்றது நமது தோழர்களின் சங்கப்பிடிப்பினை பறைசாற்றியது.மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை: