செவ்வாய், 10 ஜூன், 2014

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு முடிவுகள்7.6.2014 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழுவின் முடிவுகள்

தோழர்களே! தோழியரே!!
1. ஜூலை மாத இறுதிக்குள் மாவட்ட,மத்திய,மாநிலச் சங்கத்திற்கு செலுத்தவேண்டிய    நன்கொடைகளை கிளைகள் செலுத்தவேண்டும்.
2. தோழர்.கதிர்வேலு அவர்கள் பணி ஓய்வு பெற்றதின் காரணமாக காலியாகவுள்ள மாவட்ட உதவிச் செயலர் பதவிக்கு தோழர் R.V.ஜெயராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. மாவட்டச் சங்கத்திற்கு என்று முகநூல் ஒன்றை தொடங்குவது . அதனை தோழர் R.V.ஜெயராமன் பராமரிப்பது மேலும் நமது மாவட்ட சங்கத்தின் இணையதளத்தினையும் தோழர் R.V.ஜெயராமன் பராமரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது
4. ஜூலை மாத இறுதிக்குள் கிளை மாநாடுகள் நடத்தாத கிளைகள் கிளை மாநாட்டினை நடத்த     வேண்டும் .
5. சென்னை சொசைட்டி தேர்தலில் நமது கூட்டணி சங்க வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடு பட்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கபட்டது.
6. கடலூரில் நமது 7 வது மாவட்ட மாநாட்டினை நடத்திட கடலூர் கிளைத் தோழர்கள் முன்வந்ததின் காரணமாக கடலூர் செப் 5 ,6 தேதிகளில் மாநாட்டினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
7. குறுகிய காலத்தில் சங்கத்தின் முன்னணி ஊழியர்களுக்கு 2 நாள் பயிற்சி பட்டறை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது 
8. விருத்தாசலம், கள்ளக்குறிச்சி,பண்ருட்டி ஆகிய கிளைகளில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளின் தீர்வுக்கு தல மட்ட இயக்கங்கள் நடத்திட செயற்குழு அக்கிளைகளுக்கு ஆலோசனை வழங்கியது.
9. ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் மாதந்தோறும் தாமதப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.இதனால் ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் EPF,ESI முறையாக செலுத்தப்படாத நிலை நிலவுகிறது. இன்னோவேடிவ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி TNTCWU மாவட்டச் சங்கத்துடன் இணைந்து இயக்கங்கள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது
10. குறுகிய காலத்தில் மாவட்ட செயற்குழுவை ஏற்று நடத்த வேண்டும் என்று கேட்டு கொண்டதும் கள்ளக்குறிச் சி கிளைத் தோழர்கள் அப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு மிகச் சிறப்பாக நடத்தி கொடுத்தமைக்கு கள்ளக்குறிச்சி கிளைத் தோழர்களுக்கு செயற்குழு நன்றியை தெரிவித்துக்கொண்டது.

கருத்துகள் இல்லை: