சனி, 28 ஜூன், 2014

சிதம்பரம் கிளைப்பொதுக்குழு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
சிதம்பரம் கிளையின் பொதுக்குழு கூட்டம் 27.06.2014 அன்று நடைபெற்றது.12 தோழர்கள் கலந்துகொண்டனர்.தலமட்ட பிரச்சனைகள் மற்றும் கிளை மாநாடு குறித்து கிளைச்செயலர் தோழர் V.சிதம்பரநாதன் தனது முன்மொழிவுகளை எடுத்துக்கூறினார்.தோழர்கள் M.காமராஜ், G.S.குமார், N.அனந்தன், S.பன்னீர்செல்வம், A. வேல்முருகன் மற்றும் தோழர் K.தென்னரசு ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.பின்னர் எதிர்வரும் 12.07.2014 அன்று கிளை மாநாட்டினை சிறப்பாக நடத்துவது, தலமட்ட பிரச்சினைகளை கோட்ட நிவாகத்திடம் விவாதிப்பது மாற்றம் இல்லை எனில் இயக்கம் நடத்துவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இறுதியாக மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம் மாவட்ட, மாநில செயற்குழு முடிவுகள் மற்றும் மாவட்ட சங்க நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தோழர் G.S.குமார் நன்றி நவில  நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை: