புதன், 18 டிசம்பர், 2013

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பொது துறை வங்கிகளை சீரழிக்கும் வங்கி  சீர்திருத்த மசோதாவை எதிர்த்தும் , புதிய ஊதிய உயர்வு உடன்பாட்டை உடனடியாக நிறைவேற்ற கோரியும்  நாளை (18-12-2013 )(புதன்கிழமை) தேசிய அளவிலான ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர் . இதில் நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பதாக ஐக்கிய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்து உள்ளது .இந்த நிலையில் ஐக்கிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து அந்த சங்க நிர்வாகிகளுடன் இந்திய வங்கி நிர்வாகம் கடந்த 14-ந்தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.இந்த நிலையில் மத்திய தொழிலாளர் துறை தலைமை கமிஷனர் பி.கே. சன்வரியா மற்றும் இந்திய வங்கி நிர்வாகத்தினர் நேற்று அனைத்து வங்கி துறையினருடன் நேற்று 2-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர்களின் தேசிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி 18-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறும் என்றும் இதுகுறித்து ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். முக்கிய தொழிற்சங்கம் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் பங்கேற்பதால் நாடு முழுவதும் அன்றைய தினம் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. பொது துறை வங்கிகளை பாதுகாக்க நடைபெறும் வங்கி வேலை நிறுத்தம் வெற்றி பெற கடலூர்  மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்  வாழ்த்துக்கள் 

கருத்துகள் இல்லை: