செவ்வாய், 28 அக்டோபர், 2014

தோழர் N.சுந்தரம் STS அவர்களை மாவட்டசங்கத்தின் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உங்கள் தொண்டுகள் தொடரட்டும் தோழா ....அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்டசங்கத்தின் உதவித்தலைவர் தோழர் N.சுந்தரம் STS அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக செஞ்சியை சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் வாழுகின்ற ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை இருளர் இன  மக்களுக்கு பல்வேறு  சமுக நலப்பணிகள்செய்து வந்ததையும், அவர்களுக்கான உரிமைப் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியதையும் அங்கீகரித்து சென்னை  ஜெருசேலம் பல்கலைக்கழகம் சமுகநல சேவருக்கான டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது .ட்டமளிப்புவிழா 17.10.2014 அன்று சென்னை இராஜாஅண்ணாமலைமலை மன்றத்தில் நடைபெற்றது. யர் நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் இராமசுப்ரணியன் அவர்கள் பட்டம் வழங்கி கவுரவித்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.தோழர் சுந்தரம் அவர்களின் மக்கள்பணி தொடரட்டும் என மனதார வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை: