வெள்ளி, 24 அக்டோபர், 2014

மானியம் பிச்சை அல்ல!


நீண்டகாலத்துக்குப் பிறகு, டீசல் விலை கணிசமாகக் குறைந்திருக்கும் செய்தி முகத்தில் புன்னகையை உருவாக்கிக் கொண் டிருக்கும்போதே, முதுகில் வலியே தெரியாமல் மயக்கமருந்து தடவிய கத்தியைச் செருகியிருக்கிறது மோடி அரசு. சர்வதேச சந்தையில் கச்சா பெட் ரோலியத்தின் விலை சரிந்துவிட்ட நிலையில், லிட்டருக்கு ரூ.3க்கு மேல் குறைத்து, அந்த மகிழ்ச்சி யில் நுகர்வோர் ஆழ்ந்திருக்கும்போதே, டீசல் விலைக்கட்டுப்பாட்டு மீதான தன்னுடைய அதிகாரத்தைக் கைவிட்டிருக்கிறது. அதாவது, பெட்ரோல் விலையைப் போலவே இனி, டீசல் விலை நிர்ணயத்திலும் அரசு தலையிடாது. அதாவது, அரசு மானியம் தராது; எண்ணெய் நிறு வனங்கள் நிர்ணயிப்பதே விலை.மன்மோகன் சிங் அரசு தொடங்கிய `சீர் திருத்தம்‘ மோடி அரசிலும் தொடர்கிறது.
மழைபெய்யும்போது வீட்டுச் சாக்கடையைத் திறந்துவீதியில் விடும் சாமர்த்தியம்தான் இது. அமெரிக் கப் பயணத்தின்போது, `பொருளாதாரச் சீர் திருத்த நடவடிக்கைகள்’ தொய்வில்லாமல் தொடரும் என்று மோடி வாக்குறுதி அளித்ததன் தொடர்ச்சியாக இதையெல்லாம் பார்க்கலாம்.மானியம் என்பது பிச்சை அல்ல; தன்னுடைய கொள்கைகளால் மெலிந்த மக்களுக்கு ஓர் அரசு தரக்கூடிய ஆதரவு. ஒரு வகையில் அதை இழப்பீடு என்றும் கூடச் சொல்லலாம். அடுத்த இலக்கு என்ன? உலக வர்த்தக நிறுவனம் வலியுறுத்தும் உணவு மானியச் செலவுக் குறைப்பா?காங்கிரஸின் தொடர் வீழ்ச்சியைக் கொண் டாடும் மோடி அரசும் பாஜகவும், காங்கிரஸை இந்த அளவுக்கு மக்கள் வெறுப்பதற்கு அது முன்னெடுத்த இப்படியான `சீர்திருத்தக் கொள்கை கள்’தான் காரணம் என்பதை உணர வேண்டும்
நன்றி : `இந்து, தமிழ்’(அக்.22) தலையங்கத்தின் பகுதிகள்
.

கருத்துகள் இல்லை: