திங்கள், 19 ஜனவரி, 2015

கிளை செயலர்கள் கூட்டம் - 21-01-2015 அன்று மாலை தவறாமல் பங்கேற்ப்பீர்


அன்பார்ந்த தோழர்களே !..
                   21-01-2015 அன்று மாலை 5:00 மணிக்கு   கிளை செயலர்கள் கூட்டம்  மாவட்டத் தலைவர் தோழர் A.அண்ணாமலை அவர்களின் தலைமையில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். அனைத்து  கிளைச் செயலர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                                             தோழமையுடன்
                                                                                                 K.T. சம்பந்தம்


கையெழுத்து இயக்கம் – நெய்வேலி 12-01-2015நெய்வேலி இந்திரா நகர் ஆர்ச் கேட் அருகில் NFTE மாநில துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.நமது கிளைச்செயலர் தோழர்.N.மூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.கூட்டமைப்பின் கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் அறிமுக உரையாற்றினார்.வடகுத்து ஊராட்சி மன்றத்தலைவர் திரு.ஜெகன் அவர்கள் முதல் கையெழுத்து இட்டு வாழ்த்துரை வழங்கினார்.மேலும் திரு.ஆனந்தஜோதி, இந்திராநகர் ஊராட்சி தலைவர்,தோழர்..சங்கிலிபாண்டியன் தலைவர்CITU, தோழர்.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர்AITUC, திரு.சிவராமசேது,ஊராட்சிமன்றத்  தலைவர்
குருவம்பேட்டை, திரு.மோகன்- ஊராட்சி மன்றத் தலைவர் நைனார்குப்பம், தோழர்.குப்புசாமி- CPM மாவட்டக்குழு, திரு.மணிவேல் பெரியார் கழகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர்கள் P.வெங்கடேசன் AIBSNLEA மாவட்டச்செயலர், ஜெயராமுலு SNEA கிளைசெயலர், NFTE மாவட்டத் தலைவர் R.செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.70க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டுசிறப்பித்தனர்.NFTE கிளைச்செயலர் தோழர். E.அப்துல்லா நன்றி உரையாற்றினார்                                                                                         

கருத்துகள் இல்லை: