ஞாயிறு, 5 ஜனவரி, 2014

திண்டிவனம் துணைக்கோட்ட நிர்வாகத்திற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டல்.....

அன்பார்ந்த தோழர்களே!
திண்டிவனம் துணைக்கோட்ட நிர்வாகத்தின் BSNLEUவிரோத நடவடிக்கைகள் குறித்து நமது மாவட்ட செயலகக்கூட்டம் நமது மாநிலச்செயலர் வழிகாட்டலின்படி ஆழமாக 01.01.2014 அன்று  விவாதித்தது.அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. 04.01.2014 அன்று மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு  ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
முடிவுகள்
  தோழர் S.குமார் SLM (TNV) அவர்களுக்கு SDE(I/D) திண்டிவனம் அவர்கள்  27.12.2013 அன்று வழங்கிய ஷோக்காஸ் நோட்டீசும் 30.12.2013 அன்று DE(M) திண்டிவனம் அவர்கள் வழங்கிய மாற்றல் உத்திரவும் முறையற்றது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
7.12.2013 மற்றும் 30.12.2013 ஆகிய தேதிகளில் திண்டிவனம் துணைக்கோட்ட அதிகாரிகளால் போடப்பட்ட முறையற்ற  உத்திரவுகளினால் ஏற்பட்ட தேவையற்ற குழப்பங்களுக்கும் அமைதி குலைவுக்கும் காரணமான  யார் மீதும் நடவடிக்கை இருக்காது.
தோழர் R.ரங்கநாதன் TTA Rule (8) மாற்றல் விண்ணப்பம் நமது மாவட்ட  நிர்வாகத்தால் பரிந்துரைத்து   மாநில நிர்வாகத்திற்கு விரைவில் அனுப்பப்படும் 
திண்டிவனம் பகுதியில் தொழிலமைதி ஏற்பட உரிய நேரத்தில் நமது வேண்டுகோளை ஏற்று    நடு நிலையோடு நடவடிக்கை மேற்கொண்ட நமது முதுநிலை பொதுமேலாளர் அவர்களுக்கும், சுமுகமாக பிரச்சினை தீர வழிகாட்டிய  நமது மாநிலச் செயலர் தோழர் S. செல்லப்பா அவர்களுக்கும்  மாவட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில்  ஊழியர்களும், அதிகாரிகளும் பிரச்சினைகளை அணுகக்கூடாது என்றும் BSNL வளர்ச்சியை கருத்தில் கொண்டு இணைந்து பணியாற்றுவது அவசியம் என்றும் திண்டிவனம் துணைக்கோட்ட தோழர்களுக்கும், அதிகாரிகளுக்கும்  அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம்.
  தோழமையுள்ள 
       K.T.சம்பந்தம்
  மாவட்டச்செயலர்
         

கருத்துகள் இல்லை: