ஐரோப்பாவின் பொருளாதாரச் சரிவு இன்னும் ஒரு சில வருடங்களுக்குள் நிகழலாம்
என்றும் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு அதற்கு முன்னதாக நிகழலாம் என்று
பொருளாதார வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்த
நிலையில் இத்தாலியில் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவது
இலகுவானதல்ல என்றும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வது குறித்துக் எதிர்வுகூற
முடியாதென்றும் இத்தாலிய ஜனாதிபதி ஜோர்ஜியோ நாப்புலிதானோ கூறியுள்ளார். 2014
ஆம் ஆண்டு சமூகப் பதற்றமும் அமைதியின்மையும் நிறைந்ததாக இருக்கும் என்று
அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம்
மீட்க முடியாத நிலையை நோக்கிச் சரிந்து செல்கிறது. ஐ.எம்.எப், உலக வங்கி,
பல்தேசிய நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டுக்கொள்ளை மக்களைப் வறுமைக்
கோட்டுக்குக் கீழ் தள்ளிக்கொண்டிருக்கின்றது. 41.6 வீத இளைஞர்களுக்கு வேலையில்லை.
மக்கள் நாள்தோறும் தெருக்களில்ன் இறங்கிப் போராடுகிறார்கள். போராட்டங்கள்
மூர்க்கத்தனமாக ஒடுக்கப்படுகின்றன. பல கம்யூனிஸ்ட் தலைவர்கள்
காலவரையறையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதன்
மற்றைய எல்லையில் 57 வீதமான இளைஞர்கள் ஸ்பெயின் நாட்டில்
வேலையற்றவர்களாகியுள்ளனர். கிரேக்கத்தில் நிலைமை அனைத்திலும்
கவலைக்கிடமானது. பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி ஆகியன பொருளாதாரச்
சரிவையும் பல்தேசிய வியாபாரிகளின் பகல்கொளையையும் நிறுத்த முடியாமல்
மக்க்கள் மீது சுமைகளை செலுத்துகின்றன.போர்களையும்,
அழிவுகளையும் கட்டவிழ்த்துவிட்டு தற்காலிகமாக பொருளாதாரச் சரிவை
எதிர்கொள்ள முனையும் அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்னும் சில ஆண்டுகள்
மட்டுமே வரலாற்றில் ஏகபோக நாடுகள் என்று எழுதப்பட்டிருக்கும்.
<நன்றி :பி பி சி தமிழ் >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக