செவ்வாய், 7 ஜனவரி, 2014

நாடுமுழுவதும் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம்

        நாடுமுழுவதும் வங்கித்துறை ஊழியர்கள் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளதாவது:
 
வங்கித்துறையில் வெளிநாட்டு வங்கிகளை அனுமதிக்க கூடாது, வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20 மற்றும் 21ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப் போவதாகவும் இந்த வேலைநிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மட்டுமின்றி மண்டல கிராம வங்கிகளைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் நாடுமுழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளின் 50 ஆயிரம் கிளைகளில் உள்ள சுமார் 8 லட்சம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
                   <நன்றி :- தினமணி >

கருத்துகள் இல்லை: