வெள்ளி, 31 ஜனவரி, 2014
வியாழன், 30 ஜனவரி, 2014
காந்தி ஏன் கொல்லப்பட்டார்?
65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”
சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”
உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”
இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”
பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்
யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.
அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?
நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.
மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.
கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!
என் உயிர் போகட்டும்!
காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.
மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி
.
.
“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.
“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.
தனியாள் திட்டமா கொலை?
காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.
இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!
நன்றி ஹிந்து 30/01.2014 ---ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர்,
புதன், 29 ஜனவரி, 2014
ஞாயிறு, 26 ஜனவரி, 2014
சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிப்பு!
அன்பார்ந்த தோழர்களே !
சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
மனு தாக்கல் : பிப்ரவரி 19 முதல் 21 வரை.
தகுதியுள்ளவர்கள் அறிவிப்பு: பிப்ரவரி 24
மனு திரும்ப பெற கடைசி நாள்: பிப்ரவரி 25 முதல் 27 வரை.
போட்டி இருந்தால் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு:பிப்ரவரி28.
தேர்தல் மார்ச் மாதத்தில் இருக்கும்.
சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
மனு தாக்கல் : பிப்ரவரி 19 முதல் 21 வரை.
தகுதியுள்ளவர்கள் அறிவிப்பு: பிப்ரவரி 24
மனு திரும்ப பெற கடைசி நாள்: பிப்ரவரி 25 முதல் 27 வரை.
போட்டி இருந்தால் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு:பிப்ரவரி28.
தேர்தல் மார்ச் மாதத்தில் இருக்கும்.
வெள்ளி, 24 ஜனவரி, 2014
விவசாய நிலங்களிலும் அந்நிய நேரடி முதலீடா?
சில
மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு
வர மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில்
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, வெளியேறுவதற்கு முன் உலகச் சந்தை
சக்திகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடத் துடிக்கிறது. ஏற்கெனவே
சில்லறை வர்த்தகம், காப்பீடு, வங்கி, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, மருந்து
ஆகிய துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டது
மன்மோகன் சிங் அரசு. விவசாயத்தை மட்டும் விட்டுவைப்பதா என்று இப்போது
விவசாய நிலங்களில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து ஆராய
முடிவு செய்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது.
இதற்காக மத்திய
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத், நிதியமைச்சர் ப. சிதம்பரம்,
வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் கொண்ட குழு
அமைக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள சட்டத்தின்படி விவசாய நிலங்களில் நேரடி
அந்நிய முதலீடு தடை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்களும் கூட
விவசாய நிலங்களை வாங்குவதற்கு வங்கிக் கடன் வழங்கப்படுவதில்லை. விவசாய
நிலங்களை பெரு நிறுவனங்கள் மனை வணிக வளாகங்களாக மாற்றிவிடும் என்பதாலேயே
அப்படியொரு சட்டப் பாதுகாப்பு. நிலங்களுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை
ஏற்படுத்தி, ஊக வணிகமாகவும் மாற்றிவிடுவார்கள் என்பதாலும் அந்நிய
முதலீட்டாளர்கள் இதில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நோக்கங்களையெல்லாம்
சிதைக்க நினைக்கிறதா மத்திய அரசு?டுனீஷியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க
நாடுகளில் இது அனுமதிக்கப்பட்டது.
காலப்போக்கில், அந்நாடுகளின்
விவசாயிகள் தங்கள் நிலங்களை வாங்கிய அந்நிய நிறுவனங்களின் கூலித்
தொழிலாளர்களாகிவிட்டனர். தென்கொரியாவின் தாவூ என்ற நிறுவனம் மடகாஸ்கரில்
13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆண்டுக்கு ஐந்து
லட்சம் டன் மக்காச்சோளம் பயிரிட முடிவு செய்தபோது அது மிகப்பெரிய
கலவரத்திற்கு வித்திட்டது. விவசாய நிலங்களில் அந்நிய நேரடி முதலீடு என்பது
நில அபகரிப்பேயன்றி வேறொன்றுமில்லை.விவசாய நிலங்கள் வேறு நோக்கங்களுக்கு
மாற்றப்படுவதால் உணவு நெருக்கடி ஏற்படுவதோடு உணவுப் பொருட்களின் விலையும்
கடுமையாக உயரும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் கழகம் எச்சரிக்கிறது.
ஏற்கெனவே விவசாய நிலங்களில் பயிர்களுக்கு பதிலாக கட்டடங்கள்
முளைத்திருக்கின்றன. பல பெரிய மனைவணிக நிறுவனங்கள் பல்வேறு வழிகளில்
கிராமப்புற நிலங்களை வாங்கி, வீட்டடி மனைகளாக மாற்றி, பலரிடமிருந்து
மனைகளுக்காகவும், வீடுகளுக்காகவும் பணம் பெற்றுள்ளன. சட்டத்தின் தடையால் பல
இடங்களில் கட்டடங்கள் எழாமலுள்ளன.
அந்த நிறுவனங்களுக்கு
உதவுவதுதான் அரசின் நோக்கமா? விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும்
வாழ்வாதாரங்களை இழந்தவர்களாகப் புலம்பெயர்வதை வேகப்படுத்துவதற்கே அந்நிய
நேரடி முதலீடு உதவும் என்பதால், அமைச்சர்கள் குழுவும், அரசும் அதை
அனுமதிப்பதில்லை என்ற முடிவையே எடுக்க வேண்டும். கார்ப்பரேட்
நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல் இந்த முடிவை தடுக்க மக்கள் சக்தி வலுப்பெற
வேண்டும்.
நன்றி தீக்கதிர் 24.01.2014
புதன், 22 ஜனவரி, 2014
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே !
புவனேஷ்வரில்
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின்
மத்திய செயற்குழு கூட்டம் 18-01-2014 மற்றும் 19-01-2014
தேதிகளில் நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது .
26-02-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
26-03-2014 அன்று தர்ணா போராட்டம்
23-04-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி
CMD அலுவலகம் நோக்கி பேரணி (தேதி பின்னர் அறிவிக்கப்படும் )
ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
கோரிக்கைகள் :-
1.விடுபட்டஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்து .
2. அரசாங்கத்தின் உத்தரவு படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடு
3. சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI /போனஸ் /கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்து
4. பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும் .
5. சம வேலைக்கு சம ஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிடு
6 EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்
7. வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும் .
8. பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் .
9. பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும் .
தோழர்களே மேற்கண்ட முடிவுகளை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்கிடுவோம் ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்போம்.
இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் அனைத்திந்திய மாநாடு
அனைத்திந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டில் நமது பொது செயலர்:- பார்க்க Click Here
சனி, 18 ஜனவரி, 2014
மாவட்ட செயற்குழு கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே!
04.01.2014 அன்று நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்க செயலக கூட்டத்தின் முடிவின்படி TNTCWU மாவட்ட செயற்குழு கூட்டம் 19.01.2014. அன்று காலை 10.00 மணிக்கு கடலூர் சங்க அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் கிளைச்செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும் .
தலைமை : தோழர் . S.V.பாண்டியன் மாவட்ட தலைவர்
வரவேற்புரை : தோழர் . J .முரளி மாவட்ட உதவி செயலர்
துவக்கவுரை : தோழர் . K.T.சம்பந்தம் மாவட்ட செயலர் BSNLEU
வாழ்த்துரை : தோழர் . V. குமார் மாவட்ட தலைவர் BSNLEU தோழர். A.அண்ணாமலை மாவட்டஉதவிசெயலர் BSNLEU
தோழர் . I.M.மதியழகன் மாவட்ட அமைப்பு செயலர் BSNLEU
தோழர்.V .மாரிமுத்து மாநில செ.குழு உறுப்பினர் TNTCWU
தோழர்.I.S .சுந்தரக்கண்ணன் மாநில உதவி செயலர் TNTCWU
சிறப்புரை : தோழர் .K.விஸ்வநாதன்
மாநில பொருளாளர்TNTCWU
ஆய்படு பொருள் :
1. மாநில செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
2. EPF /ESI பிரச்சனைகள்
3. நிதிநிலை
4. மற்றவை தலைவர் அனுமதியுடன்
நன்றியுரை : J.கந்தன் மாவட்ட பொருளர் TNTCWU
தோழமையுடன்
M.பாரதிதாசன்
மாவட்ட செயலர்
வெள்ளி, 17 ஜனவரி, 2014
2014 ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்ந்துள்ள 5 % IDA
உத்தரவை பி எஸ் என் எல் நிர்வாகம் வெளியிட்டு
விட்டது .உத்தரவை பார்க்க :-Click Here
உத்தரவை பி எஸ் என் எல் நிர்வாகம் வெளியிட்டு
விட்டது .உத்தரவை பார்க்க :-Click Here
பரிவு அடிப்படையில் பணி நியமனம்
பரிவு அடிப்படையில் பணி நியமனம் விசயமாக கீழ்கண்ட சில திருத்தங்களை நிர்வாகம் செய்ய உள்ளது.இந்த திருத்தங்கள் நிர்வாக கமிட்டி ஒப்புதலுக்கு விரைவில் செல்ல உள்ளது
i )உடல் ஊனமுற்ற மகன் / மகள்.
(ii) பெற்றோர் இருவரையும் இழந்த மகன் / மகள். (iii)வாடகை வீட்டில் வாழும் விண்ணப்பதாரர்.
(iv)அரசாங்க ஓய்வூதியம் வராத இறந்தவரின் வாரிசு
பரிவு அடிப்படையில் வேலை நியமனத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற நமது BSNLEU சங்கத்தின் தீவிர முயற்சியே இம்மாற்றம் .
வியாழன், 16 ஜனவரி, 2014
சுவரை இடித்துசித்திரம் வரைவதா?
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி யிலிருந்து ஜெயந்தி நடராஜன் விலகியபோது வரவிருக்கும் தேர்தலையொட்டி “கட்சிப் பணிகளைச் செய்வதற்காகவே” அவர் விடுவிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சொல்லிக் கொண்டது. ஆனால், பல உள் நாட்டு - வெளி நாட்டுப் பெரு நிறுவனங்களின் தொழில் திட்டங்கள் சுற்றுச் சூழலுக்கு இடையூறு செய்வதாக இருப்பதால் அவற்றுக்கு அவர் அனுமதி வழங்காமல் இருந்ததால், அந்த நிறுவனங் கள் அளித்த நிர்ப்பந்தம் காரணமாகவே அவரிட மிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்று ஊடகங்களில் ஊகச் செய்திகள் வந்தன.
அது உண்மைதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது, அவரைத் தொடர்ந்து பொறுப் பேற்றுக் கொண்ட எம். வீரப்ப மொய்லி தெரிவித் துள்ள தகவல்.அவர் இந்த அமைச்சகத்திற்குப் பொறுப் பேற்றபிறகு கடந்த ஒரு மாதத்திற்குள் ஒன் றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70க்குமேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறாராம். சட்டப்படி முறையான நடை முறைகள் முடி வடைந்த திட்டங்களுக்கான அனுமதி ஒரு நாள் கூட கிடப்பில் இருக்கக்கூடாது என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.குறிப்பிட்ட வட்டாரத்தின் தொழில் வளர்ச்சிக் கும், மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவுகிற திட்டங்கள் முறைப்படி வேகமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது நியாயமே. ஆனால், தற்போது இப்படி ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல்களின் நோக்கம் அதுதானா? ஒடிசா மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சர்ச்சைக்குரிய தென் கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ நிறுவனத்தின் ரூ.52,000 கோடி இரும்புத் தொழிற்சாலைத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார் அமைச்சர். தங்களுடைய நிலத்தைப் பறித்து, பாரம்பரிய வேலைவாய்ப்புகளை சீர்குலைத்து, சுற்றுச் சூழ லையும் கெடுப்பதாக அந்த வட்டார மக்கள் - குறிப் பாகப் பழங்குடியினரும் தலித்துகளும் கடந்த ஏழுஆண்டுகளாகப் போராடி வந்திருக்கிறார்கள். அவர்களுடைய அச்சம்போக்கப்படவில்லை, நிலத்தை இழப்போரின் மறுவாழ்வு திட்டவட்டமாக உறு திப்படுத்தப்படவில்லை.
போஸ்கோ நிறுவனம் “சமுதாயப் பொறுப்பு” நடவடிக்கைகளுக்காகக் கூடுதலாக 60 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது வெறும்கண்துடைப்பு ஏற்பாடாகவே முடியும் என்பது தான் கடந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கிடைத் திருக்கிற அனுபவப் பாடம்.அதே ஒடிசாவில், கிராமசபைகள் ஒப்புதல் அளிக்கும் வரையில் வேதாந்தா நிறுவனத்திற்குத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். அதைஏற்றுள்ள மத்திய அரசு போஸ்கோ உள்ளிட்ட இதர நிறுவனங்களுக்கு அதே விதியை ஏன் செயல்படுத்தவில்லை? முன்பு ஆறாண்டு காலம் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமை யிலான பாஜக கூட்டணி அரசு இதே போல், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் புறக்கணித்து அமெரிக்காவின் என்ரான் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்ததுதான் நினைவுக்கு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிற நிலையிலும், இந்த ஒப்புதல்களை அளிக்க அமைச்சரும் அரசும் இப்படி அவசரப்படுவது, இவர்களை ஆட்டுவிப்பது யார் என்ற உண்மையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நன்றி தீக்கதிர் 16.01.2014
தேசம் நாசமாக கரம் கோர்த்தவர்கள்
``சார் ! இந்த வருஷம் நடை பெற உள்ள எம்.பி தேர்தலில் யாரு ஜெயிப்பாங்க?” - இந்தக் கேள்வி டீக் கடைகளில் , நண்பர்கள் உறவினர்கள் சந்திக்கும் சாவு வீடுகளில், கல்யாணவீடுகளில் எங்கும் உரக்கக் கேட்கப்படுகிறது. இந்திய தேர்தல் களம் முன்னெப்போதையும் விட இப்போது பரபரப்பாகி இருக்கிறது. சூடாய் தகிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னமே தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது.எங்கும் எல்லோர் வாயிலும் காங்கிரஸ் மென்று துப்பப்படுகிறது .
காங்கிரஸ் ஒழிந்து போகவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. தாங்க முடியாத விலையேற்றமும் வாழ்க்கைத் துயரங்களும்தான் மக்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது .அதே போல “ மோடி வந்து விடுவாரா ?” எனப் பயங்கலந்து கேட்காத இடம் குறைவு. மக்கள் மத நம்பிக்கை உள்ளவராகவே உள்ளனர் ஆயினும் யாரும் மதச் சண்டையை, கலவரத்தை விரும்பவில்லை. மதச் சார்பின்மை பற்றிய தெளிவு மக்களிடம் குறைவாக இருக்கலாம்.
ஆனாலும் மதமோதலை வெறுக்கின்றனர். வளர்ச்சி பற்றி மோடி பேசுவதும் குஜராத் மாடலென அவரது ஊது குழல்கள் தமுக்கடிப்பதும் ஒரளவு அரசியல் விழிப்புணர்வும் ஊடக பரிச்சயமும் உள்ள ஒரு பகுதியினர் மட்டுமே அறிந்த செய்தி. அவற்றின் பொய்மை அம்பலப்பட்டிருப்பினும் அதை கார்ப்பரேட் ஊடகங்கள் பூசி மெழுகுவதால் இன்னும் போதுமான அளவுப் போய்ச்சேரவில்லை. அதேசமயம் மோடி மீது மக்களுக்கு ஒருவித அச்சமும் பீதியும் உள்ளது. காங்கிரஸ், பாஜக இரண்டில் எது பொருளாதாரச் சீரழிவிற்குக் காரணம்.
நிச்சயமாக முதல் குற்றவாளி காங்கிரஸ். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நடந்த நாடகக் காட்சிகளை மனதில் கொஞ்சம் ஓடவிட்டுப் பாருங்கள். பட்ஜெட் கூட்டத்தொடர். மழைக்கால கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத்தொடர் என ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போதும் நடந்தது என்ன? அவையில் கூச்சல் குழப்பம், அவை ஒத்திவைப்பு, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பிரதான எதிர்க்கட்சி முடக்கியது.
ஆயினும் கடைசி நாள் பலமுக்கிய மசோதாக்கள் சத்தமின்றி நிறைவேற பாஜக முழு ஒத்துழைப்பு. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வை நாசப்படுத்தியுள்ள அனைத்து மசோதாக்களையும் கொண்டு வந்தது காங்கிரஸ் , விவாதமே செய்யவிடாமல் சபையை முடக்கிவிட்டு மசோதாக்கள் நிறைவேறத் தோள் கொடுத்தது பாஜக. பெருமுதலாளிகள் அந்நிய முதலைகள் தேசத்தை சூறையாடுவதில் இருவருக்கும் மாற்றுக் கருத்து ஒருபோதும் இருந்ததில்லை.
ஆனால் தேவையற்ற கூச்சலைக் கிளப்பி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு தேசமும் மக்கள் வாழ்வும் நாசமாக இரகசியமாக கரம் கோர்த்து செயல்பட்டவர்கள்தாம் இருவரும். ஆனால் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராடியவர்கள். போராடிக்கொண்டே இருப்பவர்கள் இடதுசாரிகளே !நேற்றும் இன்றும் அதுவே உண்மை.பாஜகவிடம் மோடியிடம் மாற்றுக்கொள்கை எதுவும் கிடையாது என்பதுடன் மக்களை மோதவிடும் மதவெறியும் சமூகநீதிக்கு எதிரான கோரப்பற்களும் இந்துத்துவம் என்கிற விஷக் கொடுக்கும் கூடுதலாக உண்டு .
மக்கள் இந்த கோரப்பற்களை,விஷக் கொடுக்கை வெறுப்பவர்களே. ஆனால் தண்ணீரில் தத்தளிப்பவன் கரையேற தெப்பம் தேடுவான் என்பதை அறிந்து வாய்மூடி அருகே வருகிறது முதலை; நம்பி ஏறினால் முதலைக்கு - மதவெறிக்கு தேசம் இரையாகிவிடும் . ஆம். வெள்ளத்தின் சுழலில் இருந்தும் முதலையின் வஞ்சகத்திலிருந்தும் ஒரே நேரத்தில் தேசமும் மக்களும் காப்பாற்றப்பட வேண்டும். சிக்கலானதுதான். கடுமையானதுதான்.
ஆயினும் முயன்றால் முடியும் . தில்லியில் சரியோ தப்போ வேறு தெப்பத்தை மக்கள் கண்டு தொற்றிக்கொண்டனர் . இந்தியா நெடுக மாற்றுதெப்பத்தை மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப வாய்ப்புள்ள அனைத்தையும் பயன் படுத்த மக்கள் தயாராகிவிட்டனர் . அந்த ஆர்வமும் தேடலும் கோபமும் எங்கும் முணுமுணுப்பாக அல்ல உரத்த சப்தமாக கேட்கத் துவங்கிவிட்டது ; இது மேலும் மேலும் வலுக்கும் ; ஆயின் தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா ;
எனவே, இதுவே இடதுசாரி சக்திகளும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் வீதியில் வீறுடன் செயல்படும் தருணம்.
- சு.பொ.அகத்தியலிங்கம் நன்றி தீக்கதிர்
புதன், 15 ஜனவரி, 2014
திங்கள், 13 ஜனவரி, 2014
இரங்கல் செய்தி!!
நமது மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் I.M மதியழகன் அவர்களுடைய வளர்ப்பு தாய் திருமதி அன்னமுத்து அம்மாள் அவர்கள் இன்று (13.1.2014) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நமது இரங்கலையும் பரிவினையும் உரித்தாக்கிக்கொள்கிறோம். அன்னாரது இறுதிச்சடங்கு நாளை (14.1.2014) காலை திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்..
ஞாயிறு, 12 ஜனவரி, 2014
இவர்கள் வெற்றி பெற்றால் யாருக்கு உழைப்பார்கள்
இந்தியாவில் பெரிய
நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு 378 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக
ஜனநாயக சீர்திருத்ததுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. ஜனநாயக
சீர்திருத்ததுக்கான சங்கம் சார்பில், 2004 முதல் 2012 ஆம் ஆண்டு வரை
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்து ஆய்வு
நடத்தப்பட்டது. அதில், அரசியல் கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்கள் தாராளமாக
நன்கொடை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆய்வின்படி, அரசியல் கட்சிகளுக்கு
அளிக்கப்பட்ட நன்கொடையில் 87 சதவீதம், தேசிய கட்சிகளுக்கு கிடைத்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரிசயல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.435 கோடி
நன்கொடைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதில் 378 கோடி ரூபாயை பெரிய
நிறுவனங்கள் அளித்துள்ளன. ஆதித்யா பிர்லா குழுமம் அதிகபட்சமாக ரூ.36 கோடியை
நன்கொடையாக அளித்துள்ளது. ஆய்வில், பாரதிய ஜனதா கட்சிக்கு, அதிகபட்சமாக
மொத்தம் 192 கோடி ரூபாயை பல்வேறு நிறுவனங்கள் நன்கொடையாக வழங்கியுள்ளன.
காங்கிரசுக்கு 172 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
< நன்றி ஒன் இந்தியா >
ஐரோப்பாவின் அழிவு இத்தாலியில் ஆரம்பமாகிவிட்டது
ஐரோப்பாவின் பொருளாதாரச் சரிவு இன்னும் ஒரு சில வருடங்களுக்குள் நிகழலாம்
என்றும் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு அதற்கு முன்னதாக நிகழலாம் என்று
பொருளாதார வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்த
நிலையில் இத்தாலியில் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவது
இலகுவானதல்ல என்றும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வது குறித்துக் எதிர்வுகூற
முடியாதென்றும் இத்தாலிய ஜனாதிபதி ஜோர்ஜியோ நாப்புலிதானோ கூறியுள்ளார். 2014
ஆம் ஆண்டு சமூகப் பதற்றமும் அமைதியின்மையும் நிறைந்ததாக இருக்கும் என்று
அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம்
மீட்க முடியாத நிலையை நோக்கிச் சரிந்து செல்கிறது. ஐ.எம்.எப், உலக வங்கி,
பல்தேசிய நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டுக்கொள்ளை மக்களைப் வறுமைக்
கோட்டுக்குக் கீழ் தள்ளிக்கொண்டிருக்கின்றது. 41.6 வீத இளைஞர்களுக்கு வேலையில்லை.
மக்கள் நாள்தோறும் தெருக்களில்ன் இறங்கிப் போராடுகிறார்கள். போராட்டங்கள்
மூர்க்கத்தனமாக ஒடுக்கப்படுகின்றன. பல கம்யூனிஸ்ட் தலைவர்கள்
காலவரையறையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதன்
மற்றைய எல்லையில் 57 வீதமான இளைஞர்கள் ஸ்பெயின் நாட்டில்
வேலையற்றவர்களாகியுள்ளனர். கிரேக்கத்தில் நிலைமை அனைத்திலும்
கவலைக்கிடமானது. பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி ஆகியன பொருளாதாரச்
சரிவையும் பல்தேசிய வியாபாரிகளின் பகல்கொளையையும் நிறுத்த முடியாமல்
மக்க்கள் மீது சுமைகளை செலுத்துகின்றன.போர்களையும்,
அழிவுகளையும் கட்டவிழ்த்துவிட்டு தற்காலிகமாக பொருளாதாரச் சரிவை
எதிர்கொள்ள முனையும் அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்னும் சில ஆண்டுகள்
மட்டுமே வரலாற்றில் ஏகபோக நாடுகள் என்று எழுதப்பட்டிருக்கும்.
<நன்றி :பி பி சி தமிழ் >
சனி, 11 ஜனவரி, 2014
சபாஷ் தோழர் M.மணிகண்டன்
அன்பார்ந்த தோழர்களே!
தோழர் M.மணிகண்டன் கடலூர் மாவட்ட BSNL அலுவலகத்தில் VPT பிரிவில் ஒப்பந்த
ஊழியராக பணிபுரிகின்றார் . இவர் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகல
இந்திய அளவிலான டேக் & டோ (THANG-TA) கராத்தே போட்டியில், தமிழ்நாடு டேக் & டோ (THANG-TA) அமெச்சூர் அஸோஸியேஷாயேஷன் சார்பாக கலந்து கொண்டு அகில இந்திய அளவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். மேலும் அவர் சர்வதேச அளவில் நடைபெற உள்ள டேக் & டோ (THANG-TA) கராத்தே போட்டிக்கு இந்திய அணியின் சார்பில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளார். தோழர் M.மணிகண்டன் மேலும் பல வெற்றிகள் பெற கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
இரங்கல் செய்தி
அன்பார்ந்த தோழர்களே!
நம்முடன் பணியாற்றும் திருK.ராதாகிருஷ்ணன்DGM(CM), கடலூர் அவர்களின் தாயார் திருமதி ஆச்சிக்கண்ணு அம்மாள் நேற்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பதினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது பரிவினையும்,இரங்கலையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.
அன்னாரது இறுதிச்சடங்கு உளுந்தூர்பேட்டைக்கு அருகிலுள்ள A.குறும்பூரில் இன்று 11.01.2014 மாலை 3.00 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னையில் நடைபெற்ற நமது அகில இந்திய பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா புகைப்பட தொகுப்பு
நமது அகில இந்திய பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா புகைப்பட தொகுப்பு பார்க்க :-Click Here
வியாழன், 9 ஜனவரி, 2014
நன்றி!நன்றி!!நன்றி!!!
அன்பார்ந்த தோழர்களே !
நமது பொதுச்செயலர் தோழர் p.அபிமன்யு அவர்களின் இலாக்கா பணி நிறைவு விழாவிற்கு நமது கடலூர் மாவட்டத்திலிருந்து பதினோரு வாகனங்களில் (கடலூர்-மூன்று, விழுப்புரம்-இரண்டு,கள்ளக்குறிச்சி- இரண்டு, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாச்சலம், திண்டிவனம் தலா ஒன்று) மொத்தம் 204 தோழர், தோழியர்கள் கலந்துகொண்டனர்அதில்ஒப்பந்த ஊழியர்கள் 58 என்பதை மகிழ்வோடும், பெருமையுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கிளைச்செயலர்கள் கூட்டத்தில் நாம் எடுத்த முடிவினை முழுமையாக நிறைவேற்றிட தீவிர முயற்சி செய்த நமது மாவட்டத்தின் அனைத்து கிளைச்செயல்ர்கள், மாவட்டசங்க நிர்வாகிகள் மற்றும் TNTCWU சங்கத்தின் மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!
பிஎஸ்என்எல் நிறுவனத்தை கூறுபோட முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் கனவை தகர்ப்போம் பி.அபிமன்யு பணிநிறைவு பாராட்டு விழாவில் தலைவர்கள் பேச்சு
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை கூறுபோட முயற்சிக்கும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கனவை தகர்ப்போம் என்று சென்னையில் செவ்வாயன்று (ஜன.7) நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி. அபிமன்யு பணி நிறைவு பாராட்டு விழாவில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.தலைவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.கே.பத்மநாபன்
நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் 60 சதவீத தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சிக்கும் அரசை எதிர்த்து ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டியுள்ளது. இங்கேபேசிய பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு இயக்குநர் ஏ.என்.ராய் கூறியது போல் வருங்காலம் பொதுத்துறை நிறுவனங்களின் காலமாக இருக்கப்போகிறது. மீண்டும் பொதுத்துறை நிறுவனங்களின் தேவை எழுந்துள்ளது. அப்படிப்பட்ட காலம் வெகு விரைவாக வரப்போகிறது. அப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் பெரும்லாபமீட்டும். கடந்த காலங்களை போல் அல்லாமல் நாட்டை பற்றி சிந்திக்கிற அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை பற்றி சிந்திக்கிற இயக்கமாக தொழிற்சங்க இயக்கம் மாறியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக நாட்டில் அமல்படுத்தப்படும் தாராளமய தனியார் மய உலகமய பொருளாதாரக் கொள்கைகளின் தாக்குதல்கள் தொழிற்சங்க ஒற்றுமை மேலும் பலப்படுத்தியுள்ளது. பிஎஸ் என்எல் என்ற பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கிற போராட்டத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாக்கிற போராட்டத்திலும் பிஎஸ்என்எல் தொழிலாளர்களும் ஊழியர்களும் முன்னிற்க வேண்டும். ஏனென்றால் பொதுத்துறை நிறுவனம் என்பது நாட்டின் சொத்து.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத்
பொதுத்துறை நிறுவனம் என்றாலே ஊழல் நிறைந்த பணித்திறன் குறைந்த நிறுவனம் என்று பொதுக் கருத்தை உருவாக்க ஒருசிலதீய சக்திகள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்றாலே ஊழல் என்று மாறிவிட்டதை 2ஜி அலைக்கற்றை ஊழலில் பார்த்தோம். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மட்டுமல்லாமல் ஊழியர்களின் பணிக்கலாச்சாரத்தை பற்றியும் பிஎஸ்என்எல் இயு பேசியிருப்பது பாராட்டுக்குரியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒழிக்க முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் கனவை தகர்த்து இந்தியாவில் அசைக்க முடியாத பொதுத்துறைநிறுவனம் பிஎஸ்என்எல் என்பதை நிலைநாட்ட தொழிலாளர்களின் ஒற்றுமை தொழிற்சங்க ஒற்றுமை என்பதே சங்கத்தின் அடிநாதமாக ஒலிக்கவேண்டும்.பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொழிற்சங்கங்கள் தீவிரமாக போராட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் மயமாக்க அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதிஏற்கும் விழாவாக இது அமைந்துள்ளது.
பிஎஸ்என்எல்இயூ அகில இந்திய தலைவர் வி.ஏ.என். நம்பூதிரி:
டெலிகிராப் முறையை ஒழித்ததை போல் தரைவழிதொலைபேசி முறையை ஒழித்துக்கட்ட தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருவதாக எகனாமிக் டைம்ஸ் ஏடு அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. ஏனென்றால் தரைவழி தொலைபேசி முறையை ஒழித்துவிட்டால் பிஎஸ்என்எல் தானாக ஒழிந்துவிடும் என்று சில தனியார் நிறுவனங்கள் கருதுகின்றன. தரைவழி தொலைபேசி முறை ஒழிக்கப்பட்டால் அதோடு பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒழிக்கப்பட்டு விடும். எனவே தனியார் நிறுவனங்களின் முயற்சியை முறியடிக்க ஒன்றுபடு, போராடு, முன்னேறு என்ற நமது முன்னோடிகளின் முழக்கத்தில் உறுதியாக இருக்கவேண்டும். தொழிற்சங்கங்களுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மத்திய அரசின் புதிய தாராளமய பொருளாதார கொள்கைகளை எதிர்ப்பதில் ஒன்றுபடவேண்டும். அபிமன்யூ போன்ற தொழிற்சங்கத்தலைவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொழிலாளி வர்க்கத்திற்காக பணியாற்றுவதில் நமக்கு ஒய்வே இல்லை.
ஏற்புரை நிகழ்த்திய பி.அபிமன்யு
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கல் தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக முக்கியத்துறையாக உள்ள பிஎஸ் என்எல் தனியார்மயமானால் நமது நாட்டின் ரகசியங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு சென்று விடும். எனவே பொதுத்துறை என்ற பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் மயமாவது என்பது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆபத்தாக முடியும்.
தோழமை சங்கத் தலைவர்கள் வாழ்த்து
பிஎஸ்என்எல் இயு தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.மாரிமுத்து, பிஎஸ்என்எல்இயு சென்னை தொலைபேசி மாநிலத்தலைவர் எஸ்.யோகலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அகில இந்திய துணைத்தலைவர் புனிதா உதயகுமார், மாநில செயலாளர் எஸ்.செல்லப்பா, சென்னை தொலைபேசி மாநில செயலாளர் கே.கோவிந்தராஜ், என்.எஃப்பிடி முன்னாள் மாநில செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, எஃப்என்டிஓ முன்னாள் பொதுச்செயலாளர் கே.வள்ளிநாயகம், தொலைபேசி ஊழியர் முன்னேற்றச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.சுப்புராமன், சேவா பிஎஸ் என்எல் பொதுச் செயலாளர் ஆர்.ரவீந்திரன், ஆர்.பட்டாபிராமன் (என்எஃப்டிஇ), எம்.கோபிநாதன் (எஸ்என்இஏ), எம்.முருகையா (டிஎன்டிசிடபிள்யூயு), வி.பி.இந்திரா (பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு), சி.கே.நரசிம்மன், (ஏஐபிடிபிஏ),பி.ஆண்டியப்பன் (எப்என்டிஓபிஇஏ), டி.எஸ். ராம்பிரபு (என்எப்டிபிஇ), கே.சுவாமிநாதன் (காப்பீட்டு ஊழியர் சங்கம்) ஆகியோரும் அபிமன்யு பணிகளை பாராட்டிப் பேசினர். அபிமன்யு பணி ஒய்வு பெற்றாலும் தொழிற்சங்கத்திற்கும் சமூகத்திற்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அனைவரும் கேட்டுக்கொண்டனர்.
புதுவை அமைச்சரவையின் முடிவை ரத்து செய்தவர்
புதுவையில் அபிமன்யு தொழில் அமைதியை சீர்குலைக்கிறார். தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார். எனவே அவரை உடனடியாக புதுவையில் இருந்து தொலைதூரத்திற்கு பணியிடமாறுதல் செய்யவேண்டும் என்று 1992ல் அம் மாநில அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி அபிமன்யு தருமபுரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஒரு தொழிற்சங்க தலைவரை இடம்மாற்றம் செய்ய ஒரு மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது இதுவே தான் முதல் முறையாக இருந்திருக்கும். அந்த தீர்மானம் அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சருக்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் அபிமன்யுவை பணியிட மாறுதல் செய்யக்கூடாது என்று தொலைத்தொடர்பு துறை தொழிலாளர்களும் ஊழியர்களும் தீவிரமான போராட்டத்தையும் நடத்தினர். பின்னர் அமைச்சர் இறங்கிவந்து பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய முன்வந்தார். ஆனால் அதற்கு அவர் விதித்த ஒரே நிபந்தனை, தொலைத்தொடர்பு ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிடவேண்டும். காரணம் அவர்கள் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் ஒரு தொலைபேசிகூட வேலை செய்யவில்லை என்றார்.
(விழாவில் பிஎஸ்என்எல்இயு தமிழ்நாடு மாநில செயலாளர் எஸ்.செல்லப்பா ஆற்றிய உரையிலிருந்து)
நன்றி தீக்கதிர்
புதன், 8 ஜனவரி, 2014
குஜராத்: 8வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் மோடி அரசுக்கு எதிராக துப்புரவுத் தொழிலாளர்கள் பேரணி
அகமதாபாத்,ஜன.7-குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக துப்புரவுத் தொழிலாளர்கள் மாபெரும் பேரணி நடத்தினார்கள்.
குஜராத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்லாண்டு காலமாக பணிபுரிந்து வரும் இந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து மோடி அரசு மறுத்து வருகிறது. இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகளையும் அமல்படுத்த குஜராத் அரசு மறுத்து வருகிறது. தொடர்ந்து சமூகத்தில் பின் தங்கியிருக்கும் துப்புரவு தொழிலாளர்களை கொத்தடிமைகள் போலவே மோடி தலைமையிலான அரசு நடத்தி வருகிறது. இதனைக் கண்டித்து, காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை மோடி அரசு மிரட்டி பணிய வைக்கவும், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்ப வேண்டும். அல்லது துப்புரவுப் பணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடுவோம். வேறு நபர்களுக்கு வேலை வழங்கி விடுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் தொடர்ந்து தொழிலாளர்களை மோடி அரசு மிரட்டி வருகிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். தொடர்ந்து 8-வது நாளாக நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக மோடி அரசை கண்டித்து அகமதாபாத் நகரில் மாபெரும் கண்டன பேரணி நடத்தினர்.
சிலைக்கு பல்லாயிரம் கோடியா?
தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் படேல் சிலை அமைக்க பல கோடி ரூபாய்களை அரசு வீணடிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஏழை மக்களுக்கு நன்மை செய்யப் போவதாக நாடு முழுவதும் பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் துப்புரவுத் தொழிலாளர்களை கண்டு கொள்ளவில்லை.இதனால் ஏமாற்றம் அடைந்த துப்புரவுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் மாபெரும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம ரோட்டில் அவர்கள் பேரணியாக சென்றார்கள். வழியில் உள்ள காந்தி சிலைக்கு அவர்கள் பாலாபிஷேம் நடத்தினார்கள். குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசின் அசுத்தத்தை கழுவும் வகையில் பாலாபிஷேகம் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பேரணியில் நகராட்சி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், குஜராத் தொழில் பாதுகாப்புத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர். காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் மீது தேர்தலுக்காக போலி அன்பு காட்டும் மோடிக்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.பேரணி காந்தியின் சபர்மதி ஆசிரமம் அருகில் சென்று முடிவடைந்தது. அங்கு அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் பேசியவர்கள், பட்டேல் சிலை அமைப்பதற்காக குஜராத் அரசு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது. அந்த பணத்தை குஜராத்தில் உள்ள ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்துக்கு செலவிடலாம் என்று வலியுறுத்தினர்.
நன்றி தீக்கதிர்
நன்றி தீக்கதிர்
செவ்வாய், 7 ஜனவரி, 2014
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ; டில்லி கோர்ட் போட்டது அதிரடி உத்தரவு
தனியார்
தொலை தொடர்பு நிறுவனங்களின் வரவு- செலவு கணக்கை மத்திய தலைமை கணக்காயம்
ஆய்வு செய்ய முடியும் என்றும், இவர்களிடம் தனியார் தொலை தொடர்பு
நிறுவனங்கள் தங்களின் வருமான கணக்கை காட்ட வேண்டும் என்றும் டில்லி ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனியார் தொலை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியையும், சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. ஐகோர்ட்
நீதிபதிகள் பிரதீப்நந்த்ரோஜாக், காமேஸ்வரராவ் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இது
தொடர்பான மனுவை விசாரித்தது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படி
இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர். நாங்கள்
தனியார் கம்பெனிகள், எங்களின் கணக்கை பார்க்க இந்த ஆணையத்திற்கு உரிமை
கிடையாது, ஸ்பெக்ட்ரம் என்பது நாங்கள் விலைக்கு வாங்கவில்லை, இதற்கான
லைசென்ஸ்தான் பெற்றுள்ளோம் என்று தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் எடுத்து
வைத்த வாதத்தை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. இதன்படி
மத்திய தணிக்கை துறை, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணக்கை ஆய்வு
செய்ய முடியும். மேலும் தங்களின் வரவு செலவுகளை முழுமையாக இந்த ஆணையத்திடம்
சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள்
அதிர்ந்து போய் இருக்கின்றன.
< நன்றி : தினமலர் >
நாடுமுழுவதும் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம்
நாடுமுழுவதும்
வங்கித்துறை ஊழியர்கள் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின்
தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளதாவது:
வங்கித்துறையில் வெளிநாட்டு வங்கிகளை அனுமதிக்க கூடாது, வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
வருகிற 20 மற்றும் 21ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப் போவதாகவும் இந்த
வேலைநிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மட்டுமின்றி
மண்டல கிராம வங்கிகளைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.மேலும் நாடுமுழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளின் 50 ஆயிரம் கிளைகளில் உள்ள சுமார் 8 லட்சம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
<நன்றி :- தினமணி >
திங்கள், 6 ஜனவரி, 2014
ஞாயிறு, 5 ஜனவரி, 2014
திண்டிவனம் துணைக்கோட்ட நிர்வாகத்திற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டல்.....
அன்பார்ந்த தோழர்களே!
திண்டிவனம் துணைக்கோட்ட நிர்வாகத்தின் BSNLEUவிரோத நடவடிக்கைகள் குறித்து நமது மாவட்ட செயலகக்கூட்டம் நமது மாநிலச்செயலர் வழிகாட்டலின்படி ஆழமாக 01.01.2014 அன்று விவாதித்தது.அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. 04.01.2014 அன்று மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
முடிவுகள்
தோழர் S.குமார் SLM (TNV) அவர்களுக்கு SDE(I/D) திண்டிவனம் அவர்கள் 27.12.2013 அன்று வழங்கிய ஷோக்காஸ் நோட்டீசும் 30.12.2013 அன்று DE(M) திண்டிவனம் அவர்கள் வழங்கிய மாற்றல் உத்திரவும் முறையற்றது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
7.12.2013 மற்றும் 30.12.2013 ஆகிய தேதிகளில் திண்டிவனம் துணைக்கோட்ட அதிகாரிகளால் போடப்பட்ட முறையற்ற உத்திரவுகளினால் ஏற்பட்ட தேவையற்ற குழப்பங்களுக்கும் அமைதி குலைவுக்கும் காரணமான யார் மீதும் நடவடிக்கை இருக்காது.
தோழர் R.ரங்கநாதன் TTA Rule (8) மாற்றல் விண்ணப்பம் நமது மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரைத்து மாநில நிர்வாகத்திற்கு விரைவில் அனுப்பப்படும்
திண்டிவனம்
பகுதியில் தொழிலமைதி ஏற்பட உரிய நேரத்தில் நமது வேண்டுகோளை ஏற்று நடு நிலையோடு நடவடிக்கை மேற்கொண்ட நமது முதுநிலை
பொதுமேலாளர் அவர்களுக்கும், சுமுகமாக பிரச்சினை தீர வழிகாட்டிய நமது மாநிலச் செயலர் தோழர் S. செல்லப்பா அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை
உரித்தாக்கிக் கொள்கிறோம்.
தனிப்பட்ட
விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஊழியர்களும், அதிகாரிகளும்
பிரச்சினைகளை அணுகக்கூடாது என்றும் BSNL வளர்ச்சியை கருத்தில் கொண்டு
இணைந்து பணியாற்றுவது அவசியம் என்றும் திண்டிவனம் துணைக்கோட்ட
தோழர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம்.
தோழமையுள்ள
தோழமையுள்ள
K.T.சம்பந்தம்
மாவட்டச்செயலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)