அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
12.12.2014
அன்று மாலை, கடலூர் FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS கூட்டம் BSNLEU
மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. FORUM தலைவர் தோழர் R.ஸ்ரீதர்
தலைமையேற்றார்.கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் FORUM விடுத்துள்ள
அறைகூவலின்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கோரிக்கைதின ஆர்ப்பாட்டங்கள் பற்றியும் அடுத்து நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு இயக்கங்கள் குறித்தும் மேலும் மாநில அளவிலான கருத்தரங்கம் கடலூரில் நடத்துவது சம்பந்தமாகவும் தனது கருத்துக்களை FORUM சார்பாக முன்வைத்தார். இதில் பங்கேற்ற SNEA(I) மாவட்ட செயலர் தோழர்
C.பாண்டுரங்கன், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் P.வெங்கடேசன், தோழர்கள் பால்கி, R.அசோகன்
SNEA(I), A.அண்ணாமலை S.பரதன்,E பாலு BSNLEU V.முத்துவேல், R.பன்னீர்செல்வம் NFTE ஆகியோர் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை சிறப்பாக எடுத்துரைத்தனர். இறுதியாக பின்வரும் முடிவுகள் ஒருமனதாக
எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு இயக்கங்களை டிசம்பர் 20 -ல் கடலூரில் துவங்கி ஜனவரி இறுதிக்குள் முடிப்பது
அனைத்து தொழிற்சங்கங்கள்,மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள்,பொதுநல அமைப்புகளிடம் ஆதரவு கேட்டு FORUM சார்பாக கடிதங்கள் கொடுப்பது.
பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு இயக்கங்களின் விபரங்கள் மற்றும் நோக்கங்கள் பற்றி செய்தி வெளியிட வேண்டுகோள் விடுப்பது.
மாநில அளவிலான கருத்தரங்கத்தை கடலூரில் மிகுந்த எழுச்சியோடு மாநில FORUM இறுதி செய்யும் நாளில் நடத்துவது.
11 மையங்களில் மக்கள் சந்திப்பு இயக்கங்களை மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றஉறுப்பினர்கள்,நகர்மன்றதலைவர்களை அழைத்து கையெழுத்து இயக்கத்தை துவக்குவது.
11 மையங்களுக்கும் FORUM சார்பாக கன்வீனர்கள்களும், மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவதற்கான கால அட்டவணையும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுசெய்யப்பட்ட கன்வீனர்கள், 11 மையங்களிலும் வரும் 20.12.2014 க்குள் தலமட்டத்திலுள்ள அனைத்து சங்க கிளை, மாவட்ட நிர்வாகிகளை பங்கேற்கச் செய்து FORUMகூட்டங்களை நடத்தவேண்டும்.
உத்தேச கால அட்டவணை மற்றும் கன்வீனர்கள்
கடலூர் : 20.12.2014 தோழர் P. வெங்கடேசன்
பண்ருட்டி : 24.12.2014 தோழர் G. ரங்கராஜ்
சிதம்பரம் 26.12.2014 தோழர் V. கிருஷ்ணமூர்த்தி
விழுப்புரம் 30.12.2014 தோழர் N.மேகநாதன்
கள்ளக்குறிச்சி 06.01.2015 தோழர் N. பாலகிருஷ்ணன்
உளுந்தூர்பேட்டை 10.01.2015 தோழர் K.அன்பாயிரம்
நெய்வேலி 17.01.2015 தோழர் V. லோகநாதன்
விருத்தாச்சலம் 20.01.2015 தோழர் R. ராமலிங்கம்
திருக்கோயிலூர் 27.01.2015 தோழர் R. ராஜேந்திரன்
திண்டிவனம் 28.01.2015 தோழர் S. நடராஜன்
செஞ்சி 30.01.2015 தோழர் N. சுந்தரம்
மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக்கிட இணைந்து பணியாற்றுமாறு அனைத்து தோழர்களையும் FORUM சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக