சனி, 27 டிசம்பர், 2014

சிதம்பரம் பகுதியில் BSNL பாதுகாப்பு இயக்கத்தை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே!!
       BSNL நிறுவனத்தை பாதுகாத்திட பொது மக்களிடம் நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துப் பெற்று பாரத பிரதமரிடம் சமர்பிக்க BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்  26.12.2014 அன்று மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை பக்கத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
        தோழர் இஸ்மாயில் மரைக்காயர் NFTE தலைமையேற்ற இந்த நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்.தோழர்.G.S.குமார் BSNLEU வரவேற்புரை நிகழ்த்தினார்.BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம் கையெழுத்து இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் CPI(M) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
          மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு K.S.அழகிரி இந்திய தேசிய காங்கிரஸ்,   தோழர் T. மணிவாசகம் ,CPI மாநில குழு உறுப்பினர்,திரு ஜேம்ஸ் விஜராகவன் திமுக நகர்மன்ற உறுப்பினர், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலர் வழக்குரைஞர் திரு வேணுபுவனேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் மாவட்ட செயலர் திரு செல்லப்பன், சிதம்பரம் நகர அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலர் தோழர் C.வெங்கடேசன், அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்சங்க தலைவர் தோழர் மதியழகன் ஆகியோர் பங்கேற்று ஆதரித்து பேசினார்கள்.
               FORUM தலைவர்களான தோழர் R.ஸ்ரீதர் NFTE,  C.பாண்டுரங்கன்SNEA(I), P.வெங்கடேசன்AIBSNLEA, A.அண்ணாமலைBSNLEU, V.லோகநாதன்NFTE ஆகியோர்  பங்கேற்று சிறப்பித்தனர்.தோழர்A. நடராஜன்SNEA(I) நன்றி கூறி நிறைவு செய்தார். சிதம்பரம் தோழர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர் மகிழ்வோடு பாராட்டுகிறோம்.
              

கருத்துகள் இல்லை: