வெள்ளி, 5 டிசம்பர், 2014

தனியுடமை அல்ல இலாக்கா வாகனங்கள்

அன்பார்ந்த தோழர்களே!  தோழியர்களே!!


      கன்வேயன்ஸ் அலவன்ஸ் வாங்கும் பெரும்பாலான அதிகாரிகள் காலை வீட்டிலிருந்து அலுவகத்திற்கும்,பின்னர் மதிய உணவருந்த  வீட்டிற்கும் பிறகு அலுவகத்திற்கும் , திரும்ப வீட்டிற்கும் தினசரி பயன்படுத்துவது இலாக்கா வாகனமே. இது தவிர பால், காய்கறி, இறைச்சி வாங்க , முடிவெட்ட , நண்பர்கள்,,, உறவினர்கள், வீட்டு விசேஷங்களுக்கு சென்று வர , பள்ளி, கல்லூரிகளுக்கு குழந்தைகளை அழைத்து  செல்ல உரிமையோடு சொந்த வாகனங்களை போல் பயன்படுத்தி வருகின்றனர் என்பது நமக்கு தெரியும். மேலும் நிர்வாகத்தின் GOOD BOOK-ல் இருக்கும் ஒருசில அதிகாரிகள் சொந்த காரியங்களுக்காக எல்லைகளை கடந்து   நாட்கணக்கில்  இலக்கா வாகனங்களை எடுத்து செல்வதும் நமக்கு தெரியும். அவ்வாறு எல்லை கடந்து போனபோது வாகனம் விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடைபெற்றுள்ளது  என்பதும்  நமக்கு தெரியும்.
     இவ்வளவு உரிமைகளை எடுத்து கொள்வதும் அல்லது  அள்ளி கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் இலாக்கா ஊழியர் மரணமுற்றால் கூட  தமது ஆறுதலும், பரிவினையும்  தெரிவிக்க அவ்விடத்திற்கு சென்றுவர தொழிற்சங்கம் வாகனம் கேட்டால் பல நேரங்களில் மறுப்பதும் கிலோ மீட்டார் கணக்கு சொல்வதும் கண்டனத்திற்குரியது. இலாக்கா வேலைகளுக்கு மட்டும் தான் இலாக்கா வாகனம் என்பதை தொழிசங்கங்கள் நன்கு அறியும். இதுவரையில் இவ்வாகன விஷயத்தில் தொழிற்சங்கங்களின்  தலையீடோ , விமர்சனங்களோ இருந்ததில்லை என்பதும் மாவட்ட நிர்வகத்திற்கு தெரியும். தற்போது இப்போக்கினை இனியும் தொடர வேண்டுமா? என்கின்ற சிந்தனையை நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. தொழிற்சங்கத்திடம் காட்டுகின்ற இந்த கறார் தன்மையை அத்துமீறும் அதிகாரிகள் மீது இனியாவது மாவட்ட நிர்வாகம் காட்டுமா???...  தொழிற்சங்கம் கண்காணிக்கும்...............  
                                                    
                                                     BSNL ஊழியர்சங்கம்,
                                                            கடலூர் மாவட்டம்.