புதன், 31 டிசம்பர், 2014

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.


போராடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

ஊதிய மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி 28.12.2014 முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள்  தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிடவும்,ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு அறவழியில் போராடும் தொழிலாளர்கள் மீது காவல் துறையை கட்டவிழ்த்து விட்டு   அடக்கி ஒடுக்க முயற்சிப்பதையும், தினக்கூலி அடிப்படையில் புதியதாக ஊழியர்கள் நியமனம் செய்வதை கைவிட வலியுறுத்தியும் 02.01.2015 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட நமது மாநிலச்சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. 

மாநிலச்சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் சக்திமிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம் 
                                                                             தோழமையுள்ள 
                                                                                  K.T.சம்பந்தம் 

செவ்வாய், 30 டிசம்பர், 2014

கடலூர் மாவட்ட BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு கூட்டத்தின் - முடிவுகள்

ன்பார்ந்த தோழர்களே   தோழியர்களே!!

BSNL அனைத்து ஊழியர்-அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக  கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் இன்று 29-12-2014 மாலை BSNLEU அலுவலகத்தில் NFTE மாவட்டச் செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் தோழர் K.T.சம்பந்தம்BSNLEU தோழர் C.பாண்டுரங்கன்SNEA ,,தோழர் P.வெங்கடேசன், AIBSNLEA  தோழர் R.அசோகன், மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர் P.சிவக்குமரன் SNEA,தோழர் R.V.ஜெயராமன்BSNLEU .NFTE  மாவட்ட அமைப்பு செயலர். தோழர். முகுந்தன், NFTE மூத்த தோழர்.K.செல்வராஜ்,R.பன்னீர்செல்வம்NFTE முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.P.சுந்தரமூர்த்திBSNLEU கிளைச் செயலர் தோழர்.S.சௌந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

              ஜனவரி’30 அன்று கடலூரில் மாநிலம் அளவிலான கருத்தரங்கம் தேதி  மாற்றம் குறித்த நமது தமிழ் மாநிலச்செயலரின் வேண்டுகோளை சென்றக்கூட்டத்தில் மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் முன்வைத்திருந்தார். இதைப்  பற்றி இன்றைய இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கன்வீனர் தோழர்.K.T.சம்மந்தம் கருத்தரங்க தேதி மாற்றம் செய்வதில் உள்ள சில பிரச்சனைகளை எடுத்துரைத்தார். கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டபின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஜனவரி’30 அன்றே இக்கருத்தரங்கை கடலூரில் சிறப்பாக நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
     
   BSNL அனைத்து ஊழியர்-அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று மாவட்டம் தழுவிய தர்ணா போராட்டத்தை ஒரு நாள் மட்டும்  கடலூரில் ஜனவரி -7 அன்று நடத்துவது எனவும்,

     கையெழுத்து இயக்கம் ஜனவரி-3 அன்று பண்ருட்டி, ஜனவரி-6 அன்று கள்ளக்குறிச்சி, ஜனவரி-10 அன்று  உளுந்தூர்பேட்டையிலும் நடைபெறும், அன்றே உளுந்தூர்பேட்டையில் கூட்டமைப்பு கூட்டம் நடத்துவது எனவும்,

      கருத்தரங்கத்திற்கான செலவிற்காக  NFTE ரூ.20.000. BSNLEU ரூ.20,000SNEAரூ.10,000, AIBSNLEA ரூ.10,000, தருவது எனவும், கருத்தரங்கம் நடத்தப்படும் மண்டபச் செலவை மாநிலசங்கம் வழங்கும் என முடிவெடுக்கப்பட்டது. 

      கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் ஜனவரி30 மதியம் 2-30 மணிக்கு இக்கருத்தரங்கம் நடைபெறும்.கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற  நமது தோழர்கள் ஒவ்வொருவரும் ரூ.100/-நன்கொடை அளித்திட வேண்டுகின்றோம்.. 


ஒப்பந்த ஊழியர் ஊதியம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு முந்தைய ஒப்பந்தக்காரரால் தரப்படாமல் இருந்த அக்டோபர் மாதத்திய ஊதியம் புதிய ஒப்பந்தக்காரர் மூலம்   நாளை 30-12-2014 வழங்கப்படவுள்ளது. ERPஅமுல்படுத்திய பிறகும் தொடர் முயற்சியின் காரணமாக  பட்டுவாடா செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றி. !

டிசம்பர் மாதத்திய சம்பளம் ஜனவரி-7 க்குள் வழங்கப்படவுள்ளது, (நவம்பர் மாத சம்பளம் டிசம்பர்-1 க்குள் வழங்கப்பட்டுவிட்டது)  
                                                      தோழமையடன் 
                                                       K.T.சம்பந்தம்.

திங்கள், 29 டிசம்பர், 2014

LIC ஊழியர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் அனைவரும் பங்கேற்பீர்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
 காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்காதே!!!!! டிசம்பர் 29 அன்று LICயில் நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தில் சக்தியாக கலந்து கொள்ள மத்திய,மாநிலச்சங்கங்கள் அறைகூவல் 

மாநிலச்செயலர் தோழர் A.பாபுராதாக்கிருஷ்ணன் உண்ணாநோன்பு மேற்கொள்கிறார்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
 தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து 30.12.2014 அன்று தூத்துக்குடியில் நமது தமிழ் மாநில செயலர் உண்ணாவிரதம் அறிவித்துள்ளார் ...

தமிழ் மாநிலச்சங்கத்தின் சுற்றறிக்கை  படிக்கRead


சனி, 27 டிசம்பர், 2014


Displaying 04.JPGDisplaying 10.jpg

சிதம்பரம் பகுதியில் BSNL பாதுகாப்பு இயக்கத்தை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே!!
       BSNL நிறுவனத்தை பாதுகாத்திட பொது மக்களிடம் நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துப் பெற்று பாரத பிரதமரிடம் சமர்பிக்க BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்  26.12.2014 அன்று மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை பக்கத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
        தோழர் இஸ்மாயில் மரைக்காயர் NFTE தலைமையேற்ற இந்த நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்.தோழர்.G.S.குமார் BSNLEU வரவேற்புரை நிகழ்த்தினார்.BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம் கையெழுத்து இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் CPI(M) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
          மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு K.S.அழகிரி இந்திய தேசிய காங்கிரஸ்,   தோழர் T. மணிவாசகம் ,CPI மாநில குழு உறுப்பினர்,திரு ஜேம்ஸ் விஜராகவன் திமுக நகர்மன்ற உறுப்பினர், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலர் வழக்குரைஞர் திரு வேணுபுவனேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் மாவட்ட செயலர் திரு செல்லப்பன், சிதம்பரம் நகர அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலர் தோழர் C.வெங்கடேசன், அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்சங்க தலைவர் தோழர் மதியழகன் ஆகியோர் பங்கேற்று ஆதரித்து பேசினார்கள்.
               FORUM தலைவர்களான தோழர் R.ஸ்ரீதர் NFTE,  C.பாண்டுரங்கன்SNEA(I), P.வெங்கடேசன்AIBSNLEA, A.அண்ணாமலைBSNLEU, V.லோகநாதன்NFTE ஆகியோர்  பங்கேற்று சிறப்பித்தனர்.தோழர்A. நடராஜன்SNEA(I) நன்றி கூறி நிறைவு செய்தார். சிதம்பரம் தோழர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர் மகிழ்வோடு பாராட்டுகிறோம்.
              

வியாழன், 25 டிசம்பர், 2014

மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றிகரமாக துவங்கியது கடலூரில்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!! 

BSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் மக்களிடமிருந்து 1 கோடி கையெழுத்து பெற்று பாரத பிரதமரிடம் சமர்பிக்க BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் 24-12-2014 அன்று மாலை 5.00 மணிக்கு உழவர் சந்தை அருகில்  மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.NFTE மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் தலைமையேற்ற இந்த நிகழ்வில்  150 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த இயக்கத்தின் கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளரும் AIBSNLEA மாவட்ட செயலருமான தோழர்.  P வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். கன்வீனர் BSNLEU மாவட்ட செயலர் தோழர் . K.T சம்பந்தம் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்தார்.,CPI(M ) மாவட்ட செயலர் தோழர்  T. ஆறுமுகம் , CPI மாவட்ட செயலர் தோழர்  M சேகர்திராவிட முன்னேற்ற கழகத்தின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள புகழேந்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் PRS வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  மாவட்ட செயலர் தாமரைசெல்வன் மற்றும் திருமார்பன், NFTE சம்மேளன செயலர் G ஜெயராமன் ,நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலர்  நிஜாமுதீன் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர்  மருதவாணன் மற்றும் பொதுநல இயக்கத்தின் நிர்வாகிகள்  வெண்புறா குமார் ,C A தாஸ் ஆகியோர் கையொப்பமிட்டு இயக்கத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர். SNEA மாவட்ட செயலர் தோழர் பாண்டுரங்கன் நன்றியுரை வழங்கினார். கடலூர் பகுதியின் அனைத்து கிளை சங்கங்களும் இணைந்து  சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தன. குறிப்பாக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள செய்ததில்  கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் வெங்கடேசன் அவர்களின்  பங்கு சிறப்பானதாகும்.
























சனி, 13 டிசம்பர், 2014

ஒப்பந்த ஊழியருக்காக இணைந்த போராட்டம் அனைவரும் தவறாமல் பங்கேற்பீர் ! வெற்றிபெறச்செய்வீர் !!


கடலூர் மாவட்ட FORUM முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

12.12.2014 அன்று மாலை, கடலூர் FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS கூட்டம் BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது. FORUM தலைவர் தோழர் R.ஸ்ரீதர் தலைமையேற்றார்.கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் FORUM விடுத்துள்ள அறைகூவலின்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கோரிக்கைதின ஆர்ப்பாட்டங்கள் பற்றியும் அடுத்து நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு இயக்கங்கள் குறித்தும் மேலும் மாநில அளவிலான கருத்தரங்கம் கடலூரில் நடத்துவது சம்பந்தமாகவும் தனது கருத்துக்களை  FORUM சார்பாக  முன்வைத்தார். இதில் பங்கேற்ற SNEA(I) மாவட்ட செயலர் தோழர் C.பாண்டுரங்கன், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் P.வெங்கடேசன், தோழர்கள் பால்கி, R.அசோகன்  SNEA(I), A.அண்ணாமலை S.பரதன்,E பாலு  BSNLEU V.முத்துவேல், R.பன்னீர்செல்வம் NFTE ஆகியோர் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை சிறப்பாக எடுத்துரைத்தனர். இறுதியாக  பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் சந்திப்பு இயக்கங்களை டிசம்பர் 20 -ல் கடலூரில் துவங்கி ஜனவரி இறுதிக்குள் முடிப்பது 

அனைத்து தொழிற்சங்கங்கள்,மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள்,பொதுநல அமைப்புகளிடம் ஆதரவு கேட்டு FORUM சார்பாக கடிதங்கள் கொடுப்பது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு இயக்கங்களின் விபரங்கள் மற்றும் நோக்கங்கள் பற்றி செய்தி வெளியிட வேண்டுகோள் விடுப்பது.

மாநில அளவிலான கருத்தரங்கத்தை கடலூரில் மிகுந்த எழுச்சியோடு மாநில FORUM இறுதி செய்யும் நாளில்    நடத்துவது.

11 மையங்களில் மக்கள் சந்திப்பு இயக்கங்களை மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றஉறுப்பினர்கள்,நகர்மன்றதலைவர்களை அழைத்து கையெழுத்து இயக்கத்தை துவக்குவது.

11 மையங்களுக்கும்   FORUM சார்பாக கன்வீனர்கள்களும், மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவதற்கான  கால அட்டவணையும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வுசெய்யப்பட்ட கன்வீனர்கள்,  11 மையங்களிலும் வரும் 20.12.2014 க்குள் தலமட்டத்திலுள்ள   அனைத்து சங்க கிளை, மாவட்ட நிர்வாகிகளை பங்கேற்கச் செய்து FORUMகூட்டங்களை நடத்தவேண்டும்.

உத்தேச கால அட்டவணை  மற்றும் கன்வீனர்கள் 

கடலூர் :              20.12.2014                                  தோழர் P. வெங்கடேசன் 
பண்ருட்டி :               24.12.2014                                 தோழர் G. ரங்கராஜ் 
சிதம்பரம்                  26.12.2014                                 தோழர் V. கிருஷ்ணமூர்த்தி
விழுப்புரம்                30.12.2014                                தோழர் N.மேகநாதன் 
கள்ளக்குறிச்சி         06.01.2015                                  தோழர் N. பாலகிருஷ்ணன்
உளுந்தூர்பேட்டை  10.01.2015                                  தோழர் K.அன்பாயிரம் 
நெய்வேலி                 17.01.2015                                  தோழர் V. லோகநாதன் 
விருத்தாச்சலம்         20.01.2015                                தோழர் R. ராமலிங்கம் 
திருக்கோயிலூர்        27.01.2015                                 தோழர் R. ராஜேந்திரன் 
திண்டிவனம்               28.01.2015                                 தோழர் S. நடராஜன் 
செஞ்சி                          30.01.2015                                  தோழர் N. சுந்தரம்

மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக்கிட இணைந்து பணியாற்றுமாறு அனைத்து தோழர்களையும் FORUM சார்பில்  வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
                                  தோழமையுள்ள  
             FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS                  கடலூர்மாவட்டம்