செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

BSNLஐ தனியாருக்கு தாரை வார்க்க அனுமதியோம்-03.08.2016 ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
BSNL மற்றும்   MTNL நிறுவனங்களின் பங்குகளை கேந்திர பங்குதாரர் களுக்கு (STRATEGIC BUISNESS PARTNER) விற்றுவிட வேண்டும் என்று "நிதி  ஆயோக்"பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டுள்ளது.இந்திய நாட்டின் மக்கள் சொத்தாக உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு  விற்றுவிட வேண்டும் என்கின்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதிதான் இது.இதனை அனுமதிக்க முடியாது எனவும் இதனை எதித்து போராடி முறியடிப்பது எனவும் BSNL மற்றும்   MTNL-லில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான FORUM முடிவு செய்துள்ளது.அதன் முதற்கட்டமாக 03.08.2016 அன்று நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  அனைத்திந்திய FORUM அறைகூவல் விடுத்துள்ளது.மிகவும் சக்தியாக தமிழகத்தில் நடத்திட மாநில FORUM பணித்திருக்கிறது.
             எனவே நமது கடலூர் மாவட்டத்தில் 03.08.2016 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டங்களை எழுச்சியோடு நடத்திடுமாறு  தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.இது குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read >>>                                                                                                                               தோழமையுள்ள 
             K.Tசம்பந்தம்   P.சிவக்குமரன்   S.ஆனந்த்  D.சிவசங்கரன் 
             BSNLEU                 SNEA(I)                 AIBSNLEA       SNATTA

கருத்துகள் இல்லை: