சனி, 6 ஆகஸ்ட், 2016

"புன்முறுவலுடன் கூடிய சேவையை" மேலும் தீவிரப்படுத்திட கடலூரில் பேரணி..... அனைவரும் பங்கேற்பீர் !

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
         BSNL மற்றும்   MTNL நிறுவனங்களின் பங்குகளை கேந்திர பங்குதாரர் களுக்கு (STRATEGIC BUISNESS PARTNER) விற்றுவிட வேண்டும் என்ற "நிதி ஆயோக்" முடிவினை எதிர்த்து நமது கடலூர் மாவட்டத்தில் 03.08.2016 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றது.பங்கேற்ற அனைவரையும் மாவட்ட சங்கம் வெகுவாக பாராட்டுகிறது.

               BSNL நிறுவனம் காக்க போராடும் அதே வேளையில், நமது நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிட பல்வேறு தொடர் முயற்சிகளை செய்து வருகிறது "அகில இந்திய FORUM".அடுத்த கட்டமாக "புன்முறுவலுடன் கூடிய சேவையை" மேலும் தீவிரப்படுத்திட எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி அனைத்து பெரு நகரங்களில் பேரணி நடத்தி BSNL பொருட்களை திட்டங்களை பிரபலப்படுத்திட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளது.அதற்கேற்ப நமது கடலூரில்எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி பேரணி நடைபெறும் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.  இது குறித்து நமது மாநிலFORUM வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>

               

கருத்துகள் இல்லை: