புதன், 16 டிசம்பர், 2015

தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கமும்..

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
கடந்த ஒரு மாதமாக பெய்த கன மழையில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். பாதிக்க பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டுவது நமது கடமை என்ற அடிப்படையில், நமது மாநில சங்கம் தமிழகம் முழுவதும் நமது தோழர்களிடம் நிதி வசூலித்து பாதிக்கப்பட்ட  சென்னை,கடலூர், புதுவை,மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு  நிவாரணப் பொருட்கள் வழங்கியது.

அடுத்த கட்டமாக சின்னாபின்னமான சென்னை மாநகரத்தில் ஒரு பகுதியில் சுத்தம் செய்திடவும் முடிவு செய்துள்ளது.அந்தநிகழ்வு நாளை17.12.2015 காலை 8.00 மணிக்கு சென்னை MMDA காலனியில் நடைபெறவுள்ளது.நமது தலைமைப் பொதுமேலாளர் திருமதி பூங்குழலி ITS அவர்கள் நிகழ்வினை துவக்கிவைக்க உள்ளார். இவ்வியக்கத்தில் நமது மாவட்ட தோழர்கள் மிகக்கணிசமாக கலந்துகொண்டு தூய்மைப்பணி இயக்கம் வெற்றிபெற உதவிடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் 17.12.2015 அன்று மாலை  மணியளவில் க்ரீம்ஸ் சாலையில் உள்ள நமது மாநிலச்சங்க அலுவலகத்தில், கன மழையால் பாதிக்கப்பட்ட கடலூர்,புதுவை மற்றும் சென்னை ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.நமது மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தோழர்களை கிளைச்செயலர்கள் அழைத்துவர வேண்டுகிறோம்.இது பற்றிய மாநிலச்சங்கத்தின் சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிச்செய்யவும் <<<Read >>>

கருத்துகள் இல்லை: