வெள்ளி, 28 நவம்பர், 2014

நவம்பர் 27 வேலைநிறுத்தம் வெற்றிபெற கடலூர் மாவட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும் நெஞ்சுநிறை நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்

அன்பார்ந்த தோழர்களே !
நமது கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 27 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட  JAC சார்பில் தலமட்டங்களுக்கு சென்று விரிவான பிரச்சாரம் மேற்ற்கொண்டோம். இணைந்த சிறப்புக்கூட்டங்கள் பத்து இடங்களில் எழுசிச்கரமாக நடைபெற்றது.மாநிலச்சங்கங்களின் சார்பில் தோழர்கள் P. இந்திரா, S. ஜான்போர்ஜியா, V. லோகநாதன், N. அன்பழகன் மற்றும் A. அண்ணாமலை ஆகியோர் மிகச்சிறப்பான பங்களிப்பினை வழங்கினர்.அனைத்து கூட்டங்களிலும் தோழர்,தோழியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.அனைத்து சங்க தலைவர்களும் இவ்வேலை நிறுத்தம் வெற்றிபெற தொய்வின்றி உழைத்தனர்.இதன் பலனாக கடலூர் மாவட்டத்தில் போராட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்று வெற்றிபெறச்செய்த அனைத்து தோழர்,தோழியர்களுக்கும்,தொடர்ச்சியாக கடும்பணியாற்றிய  JAC யில் அங்கம் வகிக்கும் அனைத்து  கிளைச்சங்க, மாவட்டசங்க மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கும் நமது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்கள் 814, அதில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோர் 573, உடல்நிலை[?] பாதிக்கப்பட்டோர் 79,அரசாங்கத்திற்கு ஆதரவாக நிர்வாகத்தின் பக்கம்  நின்று வேலைக்கு சென்று பணியாற்றியவர்கள் 162 [இதில் புரட்சியாளர்களும் (போலி) உண்டு]. ஆனாலும்  நமது மாவட்டத்தில் வேலைநிறுத்தம் 70.39% நடைபெற்றிறுப்பது பெருமைக்குரியதே.
தோழமையுள்ள
K.T.சம்பந்தம்

புதன், 26 நவம்பர், 2014

ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்ப்பார்கள்



SAVE BSNL                                   SAVE INDIA
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
              கடலூர் மாவட்டம்
(REGD NO: VDR-278)                       24-11-2014
வேலை நிறுத்தப் போராட்டம் 27-11-2014
அன்பார்ந்த தோழர்களே !!
வணக்கம்...புவனேஸ்வர் அகில இந்திய செயற்குழு முடிவுக்கேற்ப 11 அம்சக் கோரிக்கைகளுக்காக BSNL Casual Contract Workers Federation சார்பில் மாவட்டங்கள் அளவில் ஆர்ப்பாட்டம், தர்ணா, மாநில அலுவலகம் முன்பு தர்ணா, BSNL தலைமையகம் முன்பு தர்ணா, பேரணி ஆகிய இயக்கங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன.  அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் என்ற முடிவு செய்திருந்தோம்.  27-11-2014 அன்று வேலை நிறுத்தப் போராட்டம் என்று தீர்மானித்து அதற்கான அறிவிப்பு  முறையாக BSNL நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டு விட்டது.  அதே 27-11-2014 தேதியில் வேலை நிறுத்தப் போராட்டம் என்று BSNL-ல் உள்ள அனைத்து ஊழியர் சங்கங்களும் JAC(Joint Action Committee) ஏற்கனவே அறிவிப்பு கொடுத்துள்ளன. நாமும் வேலை நிறுத்த அறிவிப்பை கொடுத்ததையொட்டி நிரந்தர ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களும் இணைந்து மாபெரும் வெற்றிகரமான போராட்டம் நடக்கவிருக்கின்றது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டு நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்திடுவோம்..     கோரிக்கைகள்:
1.        விடுபட்ட தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும்.
2.        தற்காலிக அந்தஸ்து பெற்ற தொழிலாளர்களுக்கு DOT–க்குப் பதிலாக BSNL–இல் உள்ள  குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும்.
3.        ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படவேண்டும். Semi Skilled, Skilled, Highly skilled போன்ற   பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு, அதற்கேற்றாற் போல் சமபளம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படவேண்டும். A, B, C  நகர தர  வரிசைக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.  வங்கிக்கணக்கு / காசோலை மூலமாக உரிய காலத்தில் சம்பள பட்டுவாடா  செய்யப்படவேண்டும்.  ஒப்பந்தக்காரர் மாறினாலும் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான பணி உறுதி  செய்யப்படவேண்டும்.
4.        சமூக நலத் திட்டங்களான பணிக்கொடை, போனஸ், EPF, ESI  வழங்கப் பட வேண்டும்
5.        தற்காலிக/ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிறுவன குடியிருப்பு, வீட்டு வாடகைப் படி வழங்கப் பட       வேண்டும்.
6.        EPF கணக்கை ஒப்பந்ததாரருக்குப் பதிலாக முதன்மை பணி வழங்குபவர் துவக்க வேண்டும்
7.        அடையாள அட்டையை நிறுவனம் வழங்க வேண்டும்.
8.        BSNL வளர்ச்சிக்கும், விரிவாக்கத்துக்கும் தேவையான கருவிகளை வாங்கி  BSNL   சேவையை மேம்படுத்த. வேண்டும்
9.        சம வேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும்.
10.     பழி வாங்கலை ரத்து செய்ய வேண்டும். வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை திரும்ப வேலைக்கு எடுக்க வேண்டும்
11.     BSNL Casual and Contract Workers Federation தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும்.
தோழமையுள்ள,
M.பாரதிதாசன்                                        
மாவட்டச் செயலர்.

கள்ளக்குறிச்சியில் 24.11.2014அன்று மாலை நடைபெற்ற வேலைநிறுத்த விளக்க கூட்ட புகைப்படங்கள்




திண்டிவனத்தில் 24.11.2014 அன்று காலை வேலைநிறுத்த விளக்கக் கூட்ட புகைப்படங்கள்








நவம்பர் 11 வேலைi நிறுத்த விளக்கக்கூட்டங்கள்

நவம்பர்’27 வேலைநிறுத்த விளக்க சிறப்புக்கூட்டங்கள்
விருத்தாசலம் கிளையில்  17-11-2014 அன்று காலை வேலைநிறுத்த  போராட்ட விளக்கக் கூட்டம்  நடைபெற்றது. தோழர்கள்.V.இளங்கோவன்,கலைமணி தலைமையில்  NFTE தோழர்கள். R.செல்வம்,  இரா.ஸ்ரீதர், BSNLEU தோழர்கள் K.T. சம்பந்தம்,      A. அண்ணாமலை போராட்ட விளக்கவுரையாற்றினர்.  விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த தோழர்களுக்கு நன்றி.


உளுந்தூர்பேட்டையில் 17-11-2014 அன்று மதிய உணவு இடைவெளியில் தோழர் .அம்பாயிரம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. NFTE சார்பில் தோழர்கள்.R.செல்வம்  இரா.ஸ்ரீதர், BSNLEU சார்பில் தோழர்கள் K.T. சம்பந்தம்,  A. அண்ணாமலை போராட்ட விளக்கவுரையாற்றினர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த உளுந்தூர்பேட்டை தோழர்களுக்கு நன்றி.


20.11.2014 அன்று மதியம் நெய்வேலியில் போராட்டவிளக்க சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சிறப்புரையாக
தோழியர்.P.இந்திரா மாநில துணைத்தலைவர் BSNLEU,       தோழர். V.லோகநாதன்.மாநில துணைத்தலைவர்-NFTE. விளக்கவுரையாற்றினர்.



 20-11-2014 மாலை கடலூரில் GM அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, BSNLEU –B. சந்திரசேகர் தலைமையேற்றார், BSNLEU மாவட்டத் தலைவர் A.அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தினார், தோழர்கள்.G.ரங்கராஜ்-TMTCLU, M.பாரதி-TNTCWU, NFTE இரா.ஸ்ரீதர்,BSNLEU K.T.சம்பந்தம் விளக்கவுரையாற்றினர். BSNLEU மாநிலத்துணைத்தலைவர் தோழியர்.இந்திரா, NFTE மாநிலத்துணைத்தலைவர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். NFTE மாவட்ட பொருளாளர்  A.சாதிக்பாஷா நன்றிவுரையற்றினார். பெருந்திரளாக தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்டது கூட்டத்தின் சிறப்பம்சமாகும். விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடுகளை செய்த கிளைத் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.













வியாழன், 20 நவம்பர், 2014

நவம்பர் 27-2014 வேலைநிறுத்த விளக்க சிறப்புக்கூட்டம்.சிதம்பரம்.

27-11-2014 அன்று காலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்திற்கு தோழர்H.இஸ்மாயில் மரிகார் NFTE, தோழர்N.அனந்தன் BSNLEU, தோழர் K.ராமையாFNTO, தோழர் M.தேவராஜன் NFTE-KTL.ஆகியோர் கூட்டு தலைமையேற்க,
தோழர் V.சிதம்பரநாதன் கிளைசெயலர்BSNLEU வரவேற்க, 
துவக்கவுரை தோழர் K.ராமையா FNTO ஆற்றினார்.
தோழர்.K.T.சம்மந்தம்.மாவட்டசெயலர்-BSNLEU, தோழர்.இரா.ஸ்ரீதர்.மாவட்டசெயலர்-NFTE.
போராட்ட விளக்கவுரையாற்றினார்கள்.

சிறப்புரை: தோழியர்.P.இந்திரா. மாநில துணை செயலர்-BSNLEU,

தோழர். V.லோகநாதன்.மாநில துணைத்தலைவர்-NFTE.

நன்றியுரை: தோழர் D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவிசெயலர்.NFTE.. கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.​














சனி, 15 நவம்பர், 2014

இரங்கல் செய்தி

NFTE சங்கத்தின் தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபியின் தாயார்மங்களம் அம்மாள் 14.11.2014 அன்று  காலமானார் . தாயாரை  இழந்து வாடும் தோழர் பட்டாபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கடலூர்  மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம்  ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.நல்லடக்கம் இன்று காலை 8.30 மணிக்கு காரைக்காலில் நடைபெறும்.

வெள்ளி, 14 நவம்பர், 2014

கடலூர் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


 BSNLEU & NFTE   
கிளை சங்கங்கள் , கடலூர்

கண்டன ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே ,

          கடலூர் மாவட்டத்தில் புதியதாக அமுல்படுத்த உள்ள EOI டெண்டர் சம்மந்தாக அனைத்து கோட்ட பொறியாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் விவாதித்து முடிவுகள் எடுக்கின்ற சூழலில் , கடலூர் கோட்ட பொறியாளர் தானடித்த மூப்பாக செயல்படுவதும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை உதானசீனப் படுத்துவதையும் கண்டித்து 15-11-2014 அன்று மாலை 5:30 மணியளவில் மெயின் தொலைபேசி வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

கண்டன உரை

K.T.சம்பந்தம் மாவட்டச் செயலர் BSNLEU
இரா.ஸ்ரீதர் மாவட்டச் செயலர் NFTE

                                                                                                           தோழமையுள்ள
                                                                                                                           BSNLEU & NFTE
                                                                                                            கிளை சங்கங்கள் ,கடலூர்.