செவ்வாய், 26 நவம்பர், 2013

ஒரு சிறுமியின் வாக்குமூலம்


         சில தினங்களுக்கு முன்பாக திரு வாரூர் நகர கடைவீதிகளில் கையில் ஒரு தட்டில் 5, 10, 20 என ரூபாய் நோட்டுக்களை பரப்பி வைத்து அதன் நடுவே ஒரு குங்குமச்சிமிழில் குங்கு மத்தை வைத்துக்கொண்டு கடைகளி லும் வீடுகளிலும் ஒரு சிறுமி பிச்சை எடுத்து வந்தார்.

      இவளைப்போன்றே பல்வேறு வட இந்திய இளம்பெண் களும் வளரிளம்பெண்களும் பல் வேறு பகுதிகளில் பிச்சை எடுப்பதை காணலாம். சுமார் 8 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமியின் தோற்றமும், அவள் பேசிய அரைகுறை தமிழும் அவள் தமிழ் நாட்டை சேர்ந்தவள் அல்ல என நன் றாக உணர்த்தியது. சிறுமியின் இந்த காட்சியைப் பார்த்து பரிதாபப்பட்டவர் கள் உதவி செய்தனர். பலர் கைவிரித் தனர். ஆனாலும் அவளின் பயணம் தடைபடவில்லை. 

          அவள் தொடர்ந்து கடைகடையாக ஏறி இறங்கி தனது பணியை செய்து கொண்டிருந்தார்.ஒரு தேநீர் நிலையம் அருகே அச் சிறுமி வந்தபோது அங்கே கும்பலாக தேநீர் அருந்திக்கொண்டிருந்தவர் களிடம் யாசகம் கேட்டார். அக்கூட்டத் தில் இருந்த ஒரு நபர் காசு தரமாட் டேன். டீ குடிக்கிறாயா என்று கேட்டார். அவரின் கேள்வி சரியாக புரியா விட்டாலும் டீ என்ற ஒற்றைச் சொல் புரியவே அவளும் தலையாட்டினாள்.

        அவரும் டீ ஒன்றை வாங்கிக்கொடுத் தார். அவள் கையில் வைத்திருந்த தட்டை பவ்யமாக கீழே வைத்துவிட்டு டீயை ருசித்து சாப்பிட்டாள். அவள் டீயை அருந்திய விதம் காலை உண வை அவள் சாப்பிடவில்லையோ என யோசிக்க வைத்தது. பொதுவாக பலரும் பிச்சை எடுப் பவர்களிடம் அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு என்ன பிரச்சனை, ஏன் பிச்சை எடுக் கிறீர்கள் என்றெல்லாம் கேட்பதில்லை. 

             காரணம், அவரவர் பிரச்சனை அவர் களுக்கு. அந்த சிறுமியின் நிலை நம்மை சங்கடப்படுத்தியதால் அவளிடம் மெதுவாக பேச்சைக் கொடுத்து “ஏம்மா, நீ படிக்கவில்லையா’’ என்ற போது அவளுக்கு புரியவில்லை. உட னே சைகை மூலமாக கேட்டபோது அதனை புரிந்து கொண்டு “நஹி’’ என்று ஹிந்தியில் பதில் கூறினார். உனக்கு தமிழ் தெரியாதா என்றபோது “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்று குழந்தை தமிழில் பதில் கூறி னாள்.

          “சரி, எதற்காக பிச்சை எடுக் கிறாய், உனது அம்மா, அப்பா எங்கே இருக்கிறார்கள்” என்று கேட்டபோது அரைகுறையாக நமது கேள்வியைப் புரிந்து கொண்டு தனது அக்காவுக்கு திருமணம். அதற்காகத்தான் பிச்சை எடுத்து பணம் சேர்க்கிறேன் என்றாள். அப்பா, அம்மா, அக்கா எல் லோரும் நாகூரில் ஒரு கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறோம்.

          அனைவரும் காலையில் எழுந்து இவ்வாறு ஆளுக்கு ஒரு பக்கம் பிச்சை எடுக்க சென்று விடுவோம். மாலையில் சந்திப்போம் என்றாள்.இந்த உரையாடலின்போது மிக வும் சிரமப்பட்டுத்தான் அச்சிறுமியிட மிருந்து பதில் பெற முடிந்தது. கார ணம், மொழி புரியாத சிக்கல் அதற்கு தடையாக இருந்தது. ஆனாலும் அவள் தட்டுத்தடுமாறி இந்தியும் தமிழுமாக நமது கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.

        “சரி, உனக்கு எந்த ஊரம்மா” என்று நமக்கு தெரிந்த சுமா ரான `ஹிந்தியில் “துமாரா ஜன்மஸ் தான் க்யா ஹை?’’ என்று கேட்ட போது கேள்வியை புரிந்து கொண்டு பளிச்சென்று குஜராத் என்று பதிலளித் தார். வளர்ச்சியின் நாயகன் என்று கூறிக்கொண்டு நாடு முழுவதும் பிரத மர் நாற்காலி கனவில் பேசிவரும் மோடி ஆட்சி செய்யும் மாநிலமா என்று நம் மனதுள் கேள்வி எழுந்தது. இதுதான் அவர்கள் கூறும் வளர்ச்சி போலும்.

               ஒரு சின்னஞ்சிறு சிறுமி திட்ட மிட்டு பொய்யாக தனது ஊர் குஜராத் என்று கூறப்போவதில்லை. அப்படி கூறவும் அவருக்குத் தெரியாது. ஏனென்றால் குழந்தைகளுக்கு பொய் பேசத்தெரியாது. எனவே அவள் குஜராத் என சொன்னதை நம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. இந்திய மாநிலங்களில் குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் வளர்ச்சி என்பது விடுதலை பெற்ற இந்தியா வில் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும்.

             அந்த மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடு தலை அடைந்தபிறகு பல ஆண்டுகள் குஜராத்தை காங்கிரஸ் கட்சிதான் ஆண்டு வந்தது. தற்போது நரவேட் டை மோடி மூன்றாவது முறையாக முதல்வராக நீடிக்கிறார். தற்போது ஆர்எஸ்எஸ் ஆசீர் வாதத்தோடு பிரதமர் பதவி வேட் பாளராக பாரதிய ஜனதாவால் கள மிறக்கப்பட்டுள்ள அவரை இந்திய நாட்டின் கார்ப்பரேட் முதலாளிகள், அதே போன்று அந்நிய நாட்டு முத லாளிகளும் தூக்கிப்பிடித்து ஏராள மான பொருட்செலவில் விளம்பரப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் நாட்டு மக்களின் உணர் வும் எண்ணமும் அவர்களின் எண் ணம் பலிக்கப்போவதில்லை என் பதையே காட்டுகிறது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த குஜராத் சிறுமியின் வாக்குமூலமே குஜராத் வளர்ச்சியின் யோக்கியதையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

          வீக்கத்தை வளர்ச்சி என்று கூறும் கோயபல்ஸ்காரர்களிடமிருந்து நமது நாட்டைக்காப்பாற்றுவது என்பதே மேற்கண்ட சம்பவம் மூலம் நமது கடமையாகிறது. இந்தியாவின் உண் மையான வளர்ச்சி என்பது கொள்கை மாற்றத்தில்தான் உள்ளது. ஆள் மாறாட்டத்தில் அல்ல. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தல் வேள்வியில் ஆயிரம் கேள்வி களால் பெரும்பான்மை மற்றும் சிறு பான்மை மதவெறியர்களை துளைத் தெடுப்போம். 

        மக்கள் ஒற்றுமையைக் காக்க களம் காண்போம்.குஜராத் சிறுமி என்பவளின் பிரச் சனை ஒரு சிறுமி சம்பந்தப்பட்ட பிரச் சனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தி யாவின் முகத்தோற்றத்தை அச்சிறுமி யின் குடும்பத்தின் சூழல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே தேசத்தைப் பாதுகாக்க மாற்றுக்கொள்கைகளோடு மக்களை சந்திப்பது அவர்களை அந்த திசை வழியில் திரட்டுவது அவசியமான ஒன்றாகிவிட்டது.(ந.நி.)
நன்றி தீக்கதிர் 26.11.2013

கருத்துகள் இல்லை: