புதன், 23 ஆகஸ்ட், 2017
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017
ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைதினம் கிளைகளில் ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
நமது மத்திய,மாநில சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க
23.08.2017 அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும்
இணைந்த (BSNLEU-TNTCWU) ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன்
கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கைகள்
1)
BSNL நிறுவனத்தில் பணியாற்றிவரும் அனைத்து ஒப்பந்த
ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பை உறுதிசெய்!
2)
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 18,000(பதினெட்டாயிரம்) வழங்கிடு !
3)
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் நிர்ணயம்
செய்திட்ட குறைந்த பட்ச ஊதியத்தை அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் ஒப்பந்த
ஊழியர்களுக்கு வழங்கிடு!
4)
போராடி பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களின்படி EPF,ESI போன்ற தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமுல்படுத்து!
5)
பணிக்கொடை மற்றும் போனஸ் வழங்கிடு!
6)
BSNL நிறுவனத்தில் பணியாற்றிவரும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும்
நிரந்திரம் செய்வதற்கான ஒரு திட்டத்தை விரைவில் உருவாக்கிடு!
7)
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு!
8)
ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதியில் மாதாமாதம்
ஊதிய பட்டுவாடா செய்!
தோழமையுள்ள
K.T.சம்பந்தம்
M.பாரதிதாசன்
செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017
சனி, 12 ஆகஸ்ட், 2017
அனைத்து பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதிய பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.நமது போராட்டம் வெற்றி
அன்பார்ந்த தோழர்களே!!
நமது கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ஒப்பந்த நிறுவனம் M/S Balaji Agencies திருச்சியை கண்டித்து 11.08.2017 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொண்டோம், அதற்கிணங்க அனைத்து கிளைகளிலும் சக்திமிகு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையினால் அனைத்து பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதிய பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.இந்தியன் வங்கியைத் தவிர்த்து மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஊதியம் பட்டுவாடா செய்ய முடியாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும்,உரிய நேரத்தில் தலையிட்டு பிறர்ச்சனையை தீர்த்து வைத்த கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் நமது நன்றி/
கடலூர் ஆர்ப்பாட்டம்.

திண்டிவனம்
கள்ளக்குறிச்சி
செஞ்சி
புதன், 9 ஆகஸ்ட், 2017
கண்டன ஆர்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே!!
வணக்கம், நமது கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ஒப்பந்த நிறுவனம் M/S Balaji
Agencies திருச்சியை கண்டித்து வரும் 11.08.2017 அன்று அனைத்து கிளைகளிலும்
இணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
M.பாரதிதாசன் K.T. சம்பந்தம்
மாவட்டசெயலர்TNTCWU மாவட்ட செயலர் BSNLEU
புதன், 2 ஆகஸ்ட், 2017
கிளைச்செயலர்கள் கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது கிளைச்செயர்கள் கூட்டம் 04.08.2017 மாலை 4.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர் தோழர் A.அண்ணாமலை தலைமையில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
குறிப்பு:கிளைச்செயலர்கள் வரும்போது, தங்கள் பகுதியிலுள்ள தலைமட்ட பிரச்சனைகளை தொகுத்து கடிதமாக மாவட்ட சங்கத்திடம் அளிக்க வேண்டுகிறோம்.
வியாழன், 27 ஜூலை, 2017
வியாழன், 20 ஜூலை, 2017
வெள்ளி, 14 ஜூலை, 2017
சனி, 8 ஜூலை, 2017
தோழர் ஞானையா மறைந்தார்.
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
NFPTE சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய முதுபெரும்தலைவர் தோழர்.D.ஞானையா அவர்கள் 08.07.2017 அன்று காலை காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.. பணி ஓய்விற்குப் பின்பு நல்லதொரு மார்க்சிய எழுத்தாளராக தனது பணியினை சிறப்பாக செய்து வந்தார். மறைந்த தோழர் ஞானையாவிற்கு கடலூர் மாவட்ட சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
செவ்வாய், 20 ஜூன், 2017
திங்கள், 19 ஜூன், 2017
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - நடைபயணம்
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
சாதி ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்திட, தனி சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி,சேலம் முதல் சென்னை வரை ஜூன் 9 முதல் தொடர்ந்து நடைபயணத்தை தமிழக தீண்டாமை ஒழிப்பு, முன்னனி சார்பில் அதன் பொதுசெயலர் தோழர்.கே.சாமுவேல் தலைமையில் நடத்துகிறது. நடைபயணத்தின் 9வது நாளான இன்று கூட்டேறிபட்டு பஜாரில் கடலூர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர்.தோழர்.K.T.சம்பந்தம்,முன்னாள் மாநில உதவி தலைவர் தோழர்.A.அண்ணாமலை,தோழர்.N.மேகநாதன்மாவட்ட தலைவர் AIBDPA ஆகியோர் தலைமையில் சிறப்பானவரவேற்பளிக்கப்பட்டது. நடைபயணக்குழு தலைவர் தோழர் சாமுவேல்ராஜ் அவர்களுக்கு நமது மாவட்ட உதவித்தலைவர் தோழர் சுந்தரம் அவர்கள் கதராடை அணிவித்தார். அரகண்டநல்லூர்கிளை செயலர் தோழர் பொன்னம்பலம் ,செஞ்சி கிளை செயலர் தோழர் வேல்முருகன்,திண்டிவனம் கிளை செயலர் தோழர் புண்ணியகோடி ஆகியோர் தங்கள் கிளை தோழர்களுடன் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
தோழர்கள்K.T.சம்பந்தம்,A.அண்ணாமலை மற்றும் N.மேகநாதன் ஆகியோர் திண்டிவனம் வரை நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.திண்டிவனம் நம் தோழர்கள் D.மனோகரன்,K.சாரங்கபாணி, I.துரைசாமி, S.ஜோசப் மற்றும் நமது மாவட்ட உதவிச்செயலர் தோழர்.S.பழனி ஆகியோர் நடைபயணத்தில் சென்றவர்களின் களைப்பை போக்கிட அருமையான மோர் கொடுத்து உபசரித்தனர்.பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தோழர்கள்K.T.சம்பந்தம்,A.அண்ணாமலை மற்றும் N.மேகநாதன் ஆகியோர் திண்டிவனம் வரை நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.திண்டிவனம் நம் தோழர்கள் D.மனோகரன்,K.சாரங்கபாணி, I.துரைசாமி, S.ஜோசப் மற்றும் நமது மாவட்ட உதவிச்செயலர் தோழர்.S.பழனி ஆகியோர் நடைபயணத்தில் சென்றவர்களின் களைப்பை போக்கிட அருமையான மோர் கொடுத்து உபசரித்தனர்.பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வெள்ளி, 16 ஜூன், 2017
வெள்ளி, 9 ஜூன், 2017
இணைந்த ஆர்ப்பாட்டம்
NFTE – BSNLEU
தண்ணீர்.....
தண்ணீர்..... தண்ணீர்....
தோழர்களே!
கடலூர்
வண்ணாரப்பாளையம் ஊழியர் குடியிருப்பில் கடந்த ஐந்து நாட்களாகச்
சொட்டுத் தண்ணீர் இல்லை. காரணம்
தண்ணீர் மோட்டார் பழுது. இதனை
உடனே நிர்வாகத்தின் கவனத்திற்கும்
கொண்டு சென்றோம். ஆனாலும் தீர்க்கப்பட
வில்லை.
சில ஊழியர்கள்
தம் குடும்பத்தை வெளியூருக்கு
அனுப்பிவிட்டனர். ஹோட்டலில்
சாப்பிடுகின்றனர்.
நிர்வாகம் லாரியில் தண்ணீர் ஏற்பாடு செய்கிறது. நன்றி. ஆனால் மூன்றாவது மாடிக்கு எப்படி எடுத்துச் செல்வது?. அப்படியும் தண்ணீர் தூக்கிச் சென்ற ஒரு ஊழியரின் துணைவியார் மாடிப்படியில் தடுக்கி விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது.
இரண்டு ஊழியர் சங்கங்கள் இணைந்து முதற்கட்டமாக
இன்று 09-06-2017 மதிய உணவு இடைவேளையின் போது
இணைந்த ஆர்ப்பாட்டம்
போராடுவோம்!
வியாழன், 1 ஜூன், 2017
இரங்கல் செய்தி
நமது தபால் தந்தி துறை ஆரம்பகால தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரும், FNTO இயக்கத்தின் மகத்தான தலைவருமான தோழர். கனகசொரூபன் அவர்கள் இன்று 01.06.2017 வியாழன் அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரது இறுதி ஊர்வலம் 02.06.2016 வெள்ளி கிழமை காலை 09.00 மணிக்கு கடலூரில் காந்தி நகர், செந்தில் இல்லத்திலிருந்து புறப்பட்டு பெண்ணை நதிக்கரையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு : கடலூர் தோழர்களின் கவனத்திற்கு BSNL அணைத்து சங்க ஊழியர்களின் சார்பில் 01.06.2017 மாலை 04.00 மணிக்கு கடலூர் CSC வளாகத்திலிருந்து மௌன ஊர்வலம் நடைபெறுகிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஞாயிறு, 21 மே, 2017
இரங்கல் செய்தி
தோழர்களே,
அம்மையாரது இறுதி ஊர்வலம் 21.05.2017 மாலை 04.30 மணியளவில் திண்டிவனம் அருகே உள்ள தென்பாசர் கிராமத்தில் அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும்.
திண்டிவனம் பகுதியில் பனி புரியும் தோழர் K.சாரங்கபாணி(UDAAN), அவர்களின் தாயார் நேற்று (20.05.2017) இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி ஊர்வலம் 21.05.2017 மாலை 04.30 மணியளவில் திண்டிவனம் அருகே உள்ள தென்பாசர் கிராமத்தில் அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும்.
திங்கள், 15 மே, 2017
இரங்கல் செய்தி
கூனிமேடு பகுதியில் பனி புரியும் தோழர் P.சுப்பிரமணி TT, அவர்களின் மகன், ஒப்பந்த ஊழியர் திரு.S.பாரதி அவர்கள் 15.05.2017 இரவு அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும்
நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் 16.05.2017 காலை 10 மணியளவில் விழுப்புரம் அருகே உள்ள பூத்தமேட்டில் நடைபெறும்.
செவ்வாய், 9 மே, 2017
இரங்கல் செய்தி
நெய்வேலி கிளை ஒப்பந்த ஊழியர் திரு.P.திருஞானமுருகவேல் அவர்கள் 08.05.2017 மதியம் அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும்
நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் இன்று 09.05.2017 மாலை 3 மணியளவில் நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூரில் நடைபெறும்.
வெள்ளி, 14 ஏப்ரல், 2017
செவ்வாய், 11 ஏப்ரல், 2017
இணைந்த கிளைச்செயலர்கள் கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது இரண்டு சங்கங்களின் (BSNLEU & TNTCWU)
இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 12.04.2017 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட
தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை, தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு
தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில்
உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம்
கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
பொருள் : TNTCWU மாநில செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
தோழமையுள்ள,
K.T.சம்பந்தம்
மாவட்ட செயலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
































































































