செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைதினம் கிளைகளில் ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
நமது மத்திய,மாநில சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க 23.08.2017 அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் இணைந்த (BSNLEU-TNTCWU) ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கைகள்

1)      BSNL நிறுவனத்தில் பணியாற்றிவரும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பை உறுதிசெய்!
2)      குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 18,000(பதினெட்டாயிரம்) வழங்கிடு !
3)      மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் நிர்ணயம் செய்திட்ட குறைந்த பட்ச ஊதியத்தை அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிடு!
4)      போராடி பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களின்படி EPF,ESI போன்ற தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமுல்படுத்து!
5)      பணிக்கொடை மற்றும் போனஸ் வழங்கிடு!
6)      BSNL நிறுவனத்தில் பணியாற்றிவரும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்திரம் செய்வதற்கான ஒரு திட்டத்தை விரைவில் உருவாக்கிடு!
7)      சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு!

8)      ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதியில் மாதாமாதம் ஊதிய பட்டுவாடா செய்!
தோழமையுள்ள 
K.T.சம்பந்தம் 
M.பாரதிதாசன் 

கருத்துகள் இல்லை: