சனி, 12 ஆகஸ்ட், 2017

அனைத்து பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதிய பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.நமது போராட்டம் வெற்றி

அன்பார்ந்த தோழர்களே!!
நமது கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ஒப்பந்த நிறுவனம் M/S Balaji Agencies திருச்சியை கண்டித்து  11.08.2017 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொண்டோம், அதற்கிணங்க அனைத்து கிளைகளிலும் சக்திமிகு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையினால் அனைத்து பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதிய பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.இந்தியன் வங்கியைத் தவிர்த்து மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஊதியம் பட்டுவாடா செய்ய முடியாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும்,உரிய நேரத்தில் தலையிட்டு பிறர்ச்சனையை தீர்த்து வைத்த கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் நமது நன்றி/

கடலூர் ஆர்ப்பாட்டம்.


திண்டிவனம் 

கள்ளக்குறிச்சி

செஞ்சி

கருத்துகள் இல்லை: