திங்கள், 19 ஜூன், 2017

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - நடைபயணம்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

              சாதி ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்திட, தனி சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி,சேலம் முதல் சென்னை வரை ஜூன் 9 முதல் தொடர்ந்து நடைபயணத்தை தமிழக தீண்டாமை ஒழிப்பு, முன்னனி சார்பில் அதன் பொதுசெயலர் தோழர்.கே.சாமுவேல் தலைமையில் நடத்துகிறது. நடைபயணத்தின் 9வது நாளான இன்று கூட்டேறிபட்டு பஜாரில் கடலூர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர்.தோழர்.K.T.சம்பந்தம்,முன்னாள் மாநில உதவி தலைவர் தோழர்.A.அண்ணாமலை,தோழர்.N.மேகநாதன்மாவட்ட தலைவர் AIBDPA  ஆகியோர் தலைமையில் சிறப்பானவரவேற்பளிக்கப்பட்டது. நடைபயணக்குழு தலைவர் தோழர் சாமுவேல்ராஜ் அவர்களுக்கு நமது மாவட்ட உதவித்தலைவர் தோழர் சுந்தரம் அவர்கள் கதராடை அணிவித்தார். அரகண்டநல்லூர்கிளை செயலர் தோழர் பொன்னம்பலம் ,செஞ்சி கிளை செயலர் தோழர் வேல்முருகன்,திண்டிவனம் கிளை செயலர் தோழர் புண்ணியகோடி ஆகியோர்  தங்கள் கிளை தோழர்களுடன் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
       தோழர்கள்K.T.சம்பந்தம்,A.அண்ணாமலை மற்றும் N.மேகநாதன் ஆகியோர் திண்டிவனம் வரை நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.திண்டிவனம் நம் தோழர்கள் D.மனோகரன்,K.சாரங்கபாணி, I.துரைசாமி, S.ஜோசப் மற்றும் நமது மாவட்ட உதவிச்செயலர் தோழர்.S.பழனி ஆகியோர்   நடைபயணத்தில் சென்றவர்களின் களைப்பை போக்கிட அருமையான மோர் கொடுத்து உபசரித்தனர்.பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை: